கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து, அதன் துவக்க விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இம்மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய ரிஷிவந்தியம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி உருவாக்கப்படும் என அறிவித்தார். நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பும் வெளியானது. ஐந்து பட்டப்படிப்பு பிரிவுகளுடன் கூடிய இக்கல்லூரியின் முதல்வராக சண்முகம் என்பவர் நியமிக்கப்பட்டார். ரிஷிவந்தியம் அருகே உள்ள அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்
கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து, அதன் துவக்க விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இம்மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய ரிஷிவந்தியம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி உருவாக்கப்படும் என அறிவித்தார். நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பும் வெளியானது. ஐந்து பட்டப்படிப்பு பிரிவுகளுடன் கூடிய இக்கல்லூரியின் முதல்வராக சண்முகம் என்பவர் நியமிக்கப்பட்டார். ரிஷிவந்தியம் அருகே உள்ள அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிமாக செயல்படவும் ஆரம்பித்துவிட்டது.
கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டும் பணிக்காக ஆய்வுகள் மேற்கொண்டனர் அதிகாரிகள். தியாகதுருகம்-மணலூர்பேட்டை சாலையில் உள்ள பாவந்தூர், பகண்டை கூட்ரோடு வானாபுரம், மாடம்பூண்டி ஆகிய இடங்களில் இடம் ஆய்வு செய்யப்பட்டு, இறுதியாக மாடம்பூண்டியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தினை தேர்வு செய்துள்ளார்கள்.
இந்த இடத்தில் கல்லூரி அமைவதற்கு இப்போதே அப்பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேசன் நம்மிடம் பேசிய போது, ""இந்த மாடம்பூண்டி ஏரியாங்கிறது அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியும் ரிஷிவந்தியத்தின் கடைசிப் பகுதியிலும் இருக்கு. ஏற்கனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் எம்.எல்.ஏ. அலுவலகமும் அதே ஏரியாவில் இருக்கு. அங்கே திருக்கோவிலூர் வழியா போகணும்னா இரண்டு பஸ் மாறி 50 கி.மீ. சுத்தி போகணும். தியாகதுருகம், கள்ளக் குறிச்சி வழியா நாலு பஸ் மாறி 80 கி.மீ. சுத்தணும். கல்லூரி மாணவர் களுக்கும் பணிபுரியும் பேராசிரி யர்களும் ரொம்பவே சிரமப்படு வார்கள். அதனால் அரசுக் கல்லூரியை ரிஷிவந்தியம் அருகிலேயே அமைக்க வேண்டும், இல்லேன்னா பெரிய போராட்டம் நடத்துவோம்'' என்றார்.
வானாபுரம் மணிகண்டனோ, ""அந்த ஏரியா முழுவதும் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. அடிக்கடி கொலைகள் நடக்கும் திகில் ஏரியா. அங்கே எப்படி மாணவர்கள் பயமில்லாமல் போக முடியும்?'' என்கிறார்.
தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயனிடம் மக்களின் குமுறல் குறித்து சொன்ன போது, “""எம்.எல்.ஏ. என்ற முறையில் என்னிடமோ மக்களிடமோ கருத்துக் கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்குச் செயல்படுகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசுவேன்'' என உறுதியளித்தார். கலெக்டர் கிரண்குமாரும் அதையே சொன்னார்.
மாடம்பூண்டி மர்மம் குறித்து நாம் விசாரித்த போது, அந்த ஏரியாவில் ரிடையர்டு போலீஸ் உயரதிகாரிக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலம் அப்பகுதியில் இருக்காம்.
-எஸ்.பி.எஸ்.