Advertisment

சிறுத்தைகளுக்காக ஆதிவாசிகளை வஞ்சிக்கும் அரசு! -மத்தியப்பிரதேச பதட்டம்!

ss

த்தியப்பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவுக்கு சிவிங்கிப்புலி எனும் இந்தியாவில் தற்சமயம் அதிகம் காணப்படாத சிறுத்தைப் புலி நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. சிறுத்தைப் புலிகளை கொண்டுவருவதற்கு முன்பிருந்தே இந்தச் சிறுத்தைகள் பேசு பொருளாயின.

Advertisment

தனி ஜெட் விமானத்தில் இந்தியா கொண்டுவரப்பட்டு, மிகச்சரியாக மோடியின் பிறந்த நாளன்று குனோ தேசியப் பூங்காவில் பிரதமரின் கையால் திறந்துவிடப்பட்டன. இந்த எட்டு சிவிங்கிப் புலிகளில் ஐந்து பெண், மூன்று ஆண். இந்தச் சிறுத்தைகளைக் கொண்டுவந்த விமானத்தின் முகப்பு, புலியின் முகம் போன்று ஓவியம் திட்டப்பட்டு, திட்டத்துக்கு ப்ராஜெக்ட் சீத்தா எனப் பெயரிடப்பட்டு ஏகப்பட்ட ஊடகக் கவனங்கள். சிறுத்தைகள் இந்தியா வந்தபின்னும், புதிய இடத்துக்கு வந்தபின் சாப்பிட மறுத்தது, முதன்முதலாக சாப்பிட்டது வரை ஊடகங்களில் செய்திப் பதிவுகளாயின.

Advertisment

cc

மிகச்சரியாக அதே நேரத்தில்தான், ஷியோபூரின் பாக்சா கிராமத்தில் தங்களது உரிமைகளுக்காக ஆதிவாசிகள்

த்தியப்பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவுக்கு சிவிங்கிப்புலி எனும் இந்தியாவில் தற்சமயம் அதிகம் காணப்படாத சிறுத்தைப் புலி நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. சிறுத்தைப் புலிகளை கொண்டுவருவதற்கு முன்பிருந்தே இந்தச் சிறுத்தைகள் பேசு பொருளாயின.

Advertisment

தனி ஜெட் விமானத்தில் இந்தியா கொண்டுவரப்பட்டு, மிகச்சரியாக மோடியின் பிறந்த நாளன்று குனோ தேசியப் பூங்காவில் பிரதமரின் கையால் திறந்துவிடப்பட்டன. இந்த எட்டு சிவிங்கிப் புலிகளில் ஐந்து பெண், மூன்று ஆண். இந்தச் சிறுத்தைகளைக் கொண்டுவந்த விமானத்தின் முகப்பு, புலியின் முகம் போன்று ஓவியம் திட்டப்பட்டு, திட்டத்துக்கு ப்ராஜெக்ட் சீத்தா எனப் பெயரிடப்பட்டு ஏகப்பட்ட ஊடகக் கவனங்கள். சிறுத்தைகள் இந்தியா வந்தபின்னும், புதிய இடத்துக்கு வந்தபின் சாப்பிட மறுத்தது, முதன்முதலாக சாப்பிட்டது வரை ஊடகங்களில் செய்திப் பதிவுகளாயின.

Advertisment

cc

மிகச்சரியாக அதே நேரத்தில்தான், ஷியோபூரின் பாக்சா கிராமத்தில் தங்களது உரிமைகளுக்காக ஆதிவாசிகள் நடத் திய போராட்டம் அரங்கேறிக் கொண்டிருந்தது. குனோ தேசியப் பூங்காவுக்கு வந்த எட்டு விருந்தாளிகளுக்காக, பிறந்தது முதல் வனப் பகுதியிலேயே வசித்துவந்த 128 குடும்பங்களைச் சேர்ந்த 556 பழங்குடிகளை அவர்களது இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாறச்சொல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்தியப்பிரதேச அரசு.

"நீங்கள் சிறுத்தையைக் கொண்டுவருவீர் களோ… இல்லை சிங்கத்தைக் கொண்டுவருவீர் களோ, நாங்கள் எங்கள் பிறந்த இடத்தைக் காலிசெய்து போகிறோம். ஒன்று எங்கள் அனைவரையும் ஒன்றாக புதிய இடத்தில் குடியமர்த்தவேண்டும்,… இல்லை நாங்கள் ஒருவர்கூட இந்த இடத்தைக் காலி செய்யமாட்டோம்''’என்கிறார் ஆதிவாசிகளில் ஒருவரான குட்டு.

சிறுத்தைகளுக்காக 784 சதுரகிலோமீட்டர் இடம் காலிசெய்யப்படுகிறது. அதில்தான் இந்தக் கிராமமும் இடம்பெற்றி ருக்கிறது. இதற்கான மறுகுடியமர்த்தலில் அரசு அதிகாரிகள் 70 பேரின் பெயர்களைச் சேர்க்காமல் விட்டிருக்கிறார்கள். இதனால் இந்த 70 பேருக்கு நிவாரணம் கிடைக்காது. இதை எதிர்த்துதான் ஆதிவாசிகள் போராடிவருகிறார்கள். இவர்களில் ராம்பாபு என்பவர் இறந்துவிட்டதாகச் சொல்கிறது மாவட்ட நிர்வாகம். ஆனால் ராம்பாபுவோ உயிரோடு இருக்கிறார். மருத் துவரிடம்கூட கையெழுத்துவாங்கிக் கொடுக்கிறது ஆதிவாசிகள் குழு. ஆனாலும் மாவட்ட நிர்வாகம் ஒரு மருத்துவரை அனுப்பி சோதித்து தாங்களே உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே ஏற்றுக் கொள்வோம் என்கிறது. இப்படி 70 பேருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. "ஏற்கெனவே குஜராத்தின் கிர் பூங்காவிலிருந்து சிங்கங்கள் வரப்போவதாகச் சொல்லி பல ஆண்டுகளுக்கு முன்பே எங்களைக் காலிபண்ணச் சொன்னார்கள். பின்னர் அந்தத் திட்டம் என்ன ஆனதெனத் தெரியவில்லை. பின் 2018-ல் இந்த சிறுத்தைத் திட்டத்துக்காக மீண்டும் காலி செய்யச் சொன்னார்கள்''’என பொருமுகிறார்கள் ஆதிவாசிகள்.

இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசிகள், சகாரியா ஆதி வாசிகள் எனப்படுகிறார்கள். மொத்த எண்ணிக்கை இறங்கு முகத்திலிருக்கும், (டயபஏ) பாதிப்புக்குள்ளாகும் ஆதிவாசிக் குழுக்கள் என்ற வகைப்பாட்டில் இடம்பெறுபவர்கள். மரங்களிலிருந்து கோந்து சேகரிப்பது, தேன் சேகரிப்பது போன்றவையே இவர்களின் தொழில்.

அரசு நிர்வாகமோ, "இந்த 70 விண்ணப்பங்களின் தகுதிப்பாட்டைச் சோதிப்போம். உண்மையான பயனாளிகள் அல்லாத யாருக்கும் இழப்பீடு வழங்க முடியாது''’என்கிறது.

இது ஒருபுறமிருக்க முன்னணி வனவிலங்குகள் உயிரியலாளரான டாக்டர் ரவி செல்லம், நமீபிய சிவிங்கிப் புலியை இந்தியாவில் கொண்டுவந்து பெருக்கும் திட்டத்தில் ஐயங்களை வெளிப்படுத்துகிறார். ஏற்கெனவே முன்பு இந்தத் திட்டத்தை தற்பெருமைத் திட்டம் என விமர்சித்த அவர், அதன்பின்பு அமைதியானார்.

cc

இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தி லிருந்தே நீடித்துவரும் பிரச்சினை. குஜராத்தின் கிர் சிங்க காப்பகத்தில் அவற்றின் எண்ணிக்கை 674-ஆக அதிகரித்தபோது, அவை வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் போதிய இடமில்லையென பிரச்சினை யெழுந்தபோது, அவற்றை 2013, ஏப்ரல் 15-க்குள் இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பல்வேறு இடைஞ்சல்களால் அது நடைபெறவில்லை. மாறாக, சிவிங்கிப்புலிகளின் மீதான ஆர்வத் தால் அவற்றை இந்தியா கொண்டு வரத் திட்டமிடப்பட்டது.

அதற்குத் தடைசொல்லாத உச்சநீதிமன்றம், மத்தியபிரதேசத்தின் நௌராதேவி வனஉயிர்க் காப்பகத் துக்கோ, தமிழகத்தின் சத்தியமங்கலம் வனத்துக்கோ கொண்டுசெல்ல உத்தரவிட்டது. அனைத்தையும் புறக்கணித்து இந்தச் சிவிங்கிப்புலிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 2013-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் கிர் சிங்கங்கள் இன்றுவரை இடம் மாற்றப்படவே இல்லை.

தவிரவும் இந்தச் சிவிங்கிப்புலிகளைக் பேணிக் காக்க பெரிய தொகை செலவிடப்படவேண்டும் என்கிறார்கள். தோராயமாக அதற்கு ஆண்டுக்கு 92 கோடி ஆகும் என மதிப்பிடப் படுகிறது. இந்தச் சிவிங்கிலிப்புலிகள் நீளாயுளுடன் வாழத் தேவையான புல்வெளிப் பரப்பு, இப்போது அவை விடப்பட்டுள்ள குனோ தேசியப் பூங்காவில் போதுமான அளவு இல்லை என்றும் புகார்க் குரல்கள் எழுந்துள்ளன.

தங்களது வருகையின் பின்னால் இத்தனை சர்ச்சைகள் ஓடுவதை அறி யாதுதான் இந்தக் குனோ சிவிங்கிப் புலிகள் பிரதமருக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. சிவிங்கிப்புலிகளோடு சேர்த்து, இந்த பிரச்சனைகளையும் போகஸ் செய்வாரா பிரதமர்?

nkn280922
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe