தி.மு.க. ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியும் பெரும்பாலான அரசு வழக்குகளில் அதிமுக வழக்கறிஞர்களே அரசு வழக்கறிஞர்களாக ஆஜராகி வருவது சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது. இதனால் வெளியே சொல்லமுடியாத கொந்தளிப்பில் இருக்கிறார்கள் தி.மு.க.வுக்காக உழைத்த திறமையான வழக்கறிஞர்கள்.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் முந்தைய ஆட்சியின் அரசு வழக்கறிஞர்கள் தாமாகவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விடுவது வழக்கம். ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப் பேற்றதும் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தலைமை வழக்கறிஞர், அரசு ப்ளீடர் உள்ளிட்ட சில முக்கிய பதவிகளில் இருந்த வழக்கறிஞர்கள் மட்டுமே பதவி விலகிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் துவங்கி மாவட்ட நீதிமன்றங்கள் வரை தமிழகம் முழுவதுமிருந்த அரசு வழக்கறிஞர்களான அ.தி.மு.க.வினர் விலகவில்லை.
இந்த நிலையில், தி.மு.க. அரசின் தலைமை வழக்கறிஞர், அரசு ப்ளீடர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு தி.மு.க.வின் சீனியர் அட்வகேட்டு களை நியமித்த தி.மு.க. தலைமை, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக தி.மு.க.வினரை சொற்ப அளவில் மடடுமே நியமித்ததே தவிர இன்னமும் முழுமையாக நியமிக்கவில்லை. இதனால் கடந்த 8 மாதங்களாக அரசின் பல்வேறு வழக்குகளில் அ.தி. மு.க. வழக்கறிஞர்களே ஆஜாராகி வருகிறார்கள்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "அரசு போக்குவரத்துக் கழகங்களில் அரசு வழக்கறிஞர் களாக சுமார் 199 பேரை நியமிக்கும் பட்டியலை துறையின் முதன்மைச் செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ். சிடம் கொடுத்து அரசாணை பிறப்பிக்க உத்தரவிட்டார் அமைச்சர் ராஜகண்ணப் பன். இதற்கு கோபால் ஐ.ஏ.எஸ். எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், இதற்கான அரசாணையை பிறப்பிக்க வைத்தார் ராஜகண்ணப்பன்.
அந்த வழக்கறிஞர்களுக்கான பட்டியலை சசிகலா-சுதாகரனுக்கு நெருக்கமான அட்வகேட் சரவணக்குமா ரும், கண்ணப்பனின் மகன் தீபக்கும் இணைந்து தயாரித்துத் தந்துள்ளனர். அந்த பட்டியலில் சுதாகரனின் அட்வ கேட்டான சரவணக்குமாரும் இருந்தார். மேலும், கண்ணப்பனின் சமூகத்தினருக் கும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருந் தது. தி.மு.க.வுக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்புத் தரப்படவில்லை.
இதனால் பிரச்சனை வெடிக்க, முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உத்தரவின் பேரில் அனைத்து நியமனங்களையும் ரத்து செய்தார் கோபால் ஐ.ஏ.எஸ். கண்ணப்பன் தனது துறையில் அரசு வழக்கறிஞர்களை நியமித்ததால், 16 துறைகளைச் சார்ந்த மற்ற அமைச்சர்களும் அதே பாணியை கையாளத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கண்ணப்பனின் நியமனத்தை ஸ்டாலின் ரத்து செய்திருப்பதால், மற்ற அமைச்சர்களால் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
மின்சாரம், புவியியல், சுரங்கம், நில ஆர்ஜிதம், பள்ளிக்கல்வி, உயர்கல்வி உள்ளிட்ட சில துறைகளுக்கு மட்டும் தி.மு.க. வழக்கறிஞர்கள் நியமிக் கப்பட்டதை தவிர, பல்வேறு துறைகள் மற்றும் வாரியம், தீர்ப்பாயங்கள் உள்ளிட்டவைகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை. இதனால் அவை சார்ந்த வழக்குகளில் முந்தைய அ.தி.மு..க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக் கறிஞர்களே ஆஜராகி வருகின்றனர். குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வீட்டுவசதி வாரியம் தொடர் பான வழக்குகளில் அ.தி.மு.க.வில் நியமிக்கப்பட்ட ஒரு பெண்மணிதான் இப்போதும் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார். பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் உள்பட பெரும்பாலான துறைகளில் அ.தி.மு.க. வழக்கறிஞர்களின் ராஜ்ஜியமே நடக்கிறது. அவர்கள்தான் அரசு வழக்குகளில் ஆஜராகி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான். இப்படி அ.தி.மு.க.வினர் ஆஜரானால் அரசு வழக்குகள் எப்படி வெற்றி பெறும்'' என்று ஆவேசப்படுகின்றனர் நம்மிடம் பேசிய தி.மு.க. வழக்கறிஞர்கள்.
புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்காத இடங்களில் அ.தி.மு.க. அரசில் நியமிக்கப்பட்டவர்களே அரசு வழக்குகளில் ஆஜாராகி வருகிற அவலம் நீடிக்கும் நிலையில், தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களிலும் அ.தி.மு.க.வை சேர்ந்த பலருக்கும் வாய்ப்பு தொடர்வது தான் தி.மு.க.வினரை மேலும் கொந்தளிக்க வைக்கிறது.
தேனி மாவட்டத்தில் போக்சோ மற்றும் மகிளா நீதிமன்ற வழக்குகளை கவனிக்கிற அரசு வழக்கறிஞராக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த வழக்கறிஞர் ராஜேஷ்வரி, அதே பதவியில் தி.மு.க. ஆட்சியிலும் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. சசிகலா-தினகரன் கூடாரத்தில் இருந்து தி.மு.க.வுக்கு தாவியவரின் சிபாரிசிலேயே அந்தப் பெண்மணிக்கு மீண்டும் வாய்ப்புத் தரப்பட்டதாம். அதேபோல கடலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தால் நியமிக்கப்பட்டவர்தான் இந்த ஆட்சியிலும் அரசு வழக்கறிஞராக நீடிக்கிறார்.
கோவை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருக்கும் கோவை கணேசன் என்பவர், அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திலுள்ள நகராட்சிகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார். இப்போதும் அவர்தான் ஆஜராகி வருகிறார். அதேபோல, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய்காந்தி என்பவர்தான் அ.தி.மு.க. ஆட்சியில் எல்லா கோர்ட்டுகளிலும் வரக்கூடிய அரசுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வந்திருக்கிறார். இப்போது தி.மு.க. ஆட்சியில் ஏ.ஜி.பி. பேனலில் அவரும் இருக்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசனை தோற்கடிக்க கடுமையாக உழைத்தவர் அட்வகேட் அறிவுச்செல்வன். அவரை ஈரோடு மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளது தி.மு.க. அதேபோல, திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞராக அமைச்சர் சாமிநாதனின் அண்ணன் மகனை நியமித்திருக் கிறார்கள்.இவர் பிராக்டிஸிற்கே வராதவர். இவர் மீது சில புகார்களும் இருக்கிறது. அந்த போஸ்டிங்கிற்கு பாண்டியன் என்ற தகுதி வாய்ந்த வழக்கறிஞர் எஸ்.சி., எஸ்.டி. வழக்கில் திறம்பட வாதாடி வென்றெடுத்தவர். அவருக்கு திடல் ஆதரவு இருந்தது.
தி.மு.க.வின் வெற்றிக்காக கூட்டணி கட்சிகள் உழைத்திருக்கின்றன. அந்த வகையில், பெரியார் கொள்கையில் பற்றுள்ள வழக்கறிஞர் ஒருவரை அரசு வழக்கறிஞராக நியமிக்க சிபாரிசு செய்கிறார் ஆசிரியர் கி. வீரமணி. தி.மு.க.வை சேர்ந்த இரண்டாம் நிலை தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். அந்த வழக்கறிஞருக்கு எதிராக 6 வழக்குகளை தொடர்ந்தவர் செங்கோட்டையன். தனக்கு எதிராக அரசியல் செய்து, தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார் என்றுதான் அந்த வழக்கறிஞர் மீது செங்கோட்டையன் வழக்கு தொடர்ந்தார். அப்படியிருந்தும், அந்த வழக்கறிஞருக்கு வாய்ப்பு தரவில்லை தி.மு.க.
அரசு வழக்கறிஞர்கள் நியமனம் குறித்து மேலும் நாம் விசாரித்த போது, ”உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்களாக சிலரை நியமித்திருக்கிறது தி.மு.க. அரசு. அதில் தி.மு.க.வை சாராத பலருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. குறிப்பாக, பீகார் மாநிலத்திலுள்ள பண்டிட் சங்கத்தின் தலைவரான அமித் ஆனந்த் திவாரியை தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞராக உயர்பதவியில் நியமித்திருக்கிறார்கள். இவருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பினருக்கு நெருக்கமானவர். அவர்களின் வழக்குகளில் ஆஜரானவர் திவாரி.
அதேபோல, கர்நாடகாவை சேர்ந்த அனுஷ்கா என்ற பெண்மணிக்கு அரசு வழக்கறிஞர் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவருக்கு தமிழும் தெரியாது ஹிந்தியும் தெரியாது. மின்சாரம் மற்றும் சில தீர்ப்பாயங்கள் இவருக்கு ஒதுக்கப்பட்டிருக் கிறது. மூத்த வழக்கறிஞர் கபில்சிபலின் ஜூனியர் என்பதாலும், தி.மு.க.வின் சீனியர் வழக்கறிஞர் ஒருவருக்கு தெரிந்தவர் என்பதாலும் அனுஷ்காவை நியமித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகாலம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் களாக இருந்த வள்ளிநாயகம், உமாபதி இருவருக்கும் தி.மு.க. ஆட்சியில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி மலர்ந்த தும் ராஜினாமா செய்தார் வள்ளிநாயகம். அ.தி.மு.க. ஆதரவாளரான அவருக்கு மீண்டும் வாய்ப்பு தந்துள்ளது தி.மு.க. இவருக்கு மட்டும் 16 துறைகள் ஒதுக்கப் பட்டுள்ளன. உமாபதி பிராமண வகுப்பை சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டு காலம் காவிரி நதிநீர் ஆணையர் வழக் கறிஞராகவும் ஆந்திர அரசின் வழக் கறிஞராகவும் இருக்கிறார். இவருக்கும் தமிழ் தெரியாது. டெல்லிக்கு எடப்பாடி வரும்போதெல்லாம் அவரது அறையிலேயே தான் இருப்பார் உமாபதி. அப்படிப்பட்டவரை தி.மு.க. ஆட்சியில் மீண்டும் தமிழக அரசின் வழக்கறிஞராக நியமித்திருக்கிறார்கள்.
கிருஷ்ணா மற்றும் காவிரி ஆகிய 2 நதிகள் தொடர்பான நீர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு பிரச்சனைகள் இருக்கிறது. இந்த நதிகள் தொடர்பான வழக்குகள் வந்தால் யாருக்காக வாதாடுவார் உமாபதி? இதையெல்லாம் உணராமல், ஆராயாமல் அவருக்கு வாய்ப்புத் தந்துள்ளனர். அதேபோல வெங்கட்ராமன் என்கிற மற்றொரு உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட இவர்கள் யாருமே தி.மு.க.வை சேர்ந்த வழக்கறிஞர்கள் இல்லை. உண்மையான தி.மு.க. வழக்கறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற தமிழக அரசின் வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடந்துள்ள இந்த விவகாரங்களெல் லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது‘’ என்று ஆதங்கப்படுகிறார் கள் கட்சிக்காக உழைத்த சீனியர் வழக்கறிஞர்கள்.
தி.மு.க. ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாக ஒருசில தி.மு.க. வழக்கறிஞர்களைத் தவிர அ.தி.மு.க. அனுதாபிகள் பலருக்கும் வாய்ப்பு தரப்பட்டிருக்கும் சூழலில், கட்சிக்காக உழைத்த திறமையான, தகுதியான தி.மு.க. வழக்கறிஞர்கள் ஓரங்கட்டப் பட்டிருப்பதும், கடந்த 8 மாதங்களாக அரசு வழக்கறிஞர்களாக அ.தி.மு.க.வினரே தொடர்வதும் தி.மு.க. வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பாக உருவாகியிருக்கிறது. இது பற்றி முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு சொல்லப்பட்ட நிலையில், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதை விசாரிக்க, நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஆ.ராசா தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறார் ஸ்டாலின்.
இந்த நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்பு அரசு வழக்கறிஞர்களுக்கான ஒரு நீண்ட பட்டியல் அறிவா லயத்தில் கொடுக்கப்பட்டிருக் கிறது. அந்த பட்டியல் வெளி யாகும்போதுதான் குளறுபடிகள் இருக்கிறதா? அ.தி.மு.க.வினர் நீக்கப்பட்டு தி.மு.க.வினருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறதா?
"தலைமைக் கழகத்திலிருந்து யார், யாருக்கெல்லாம் சிபாரிசு செய்து போடப்பட்டது என்பதெல்லாம் தெரியவரும்' என்கிறார்கள் தி.மு.க. வழக்கறிஞர்கள்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடந்துள்ள சர்ச்சைகளைக் களைய சாட் டையைச் சுழற்ற வேண்டும் முதல்வர்.