ரசு மருத்துவர்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டுவந்த அரசாணை யின்படி, ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி வருகின்ற ஜூன் 29-ஆம் தேதி முதல், சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.

ss

தமிழகத்தில் 1,400 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 330 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகள், 37 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்திலுமாக சுமார் 19 ஆயிரம் மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போதுள்ள நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துமனை யில் மருத்துவர் பணியிடங்கள் இருக்கவேண் டும். ஆனால் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இங்குள்ள மருத்துவர் களுக்கு வேலைப்பளு அதிகமாக இருப்ப தோடு, மக்களுக்கும் உரிய சேவை கிடைப்ப தற்கு தாமதம் ஆகிறது. இதனைச் சரிசெய் வதற்கு தற்போது இருக்கும் மருத்துவர் களைக் காட்டிலும் இரு மடங்கு மருத்துவர் களை நியமித்தால்தான் ஒட்டுமொத்த நோயாளிகளையும் சீரான முறையில் பேணிக்காக்க முடியும் என்பது மருத்துவர் களின் கருத்தாக உள்ளது. ஆனாலும் கூட மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு எந்நேரமும் பணிபுரிந்து வருகிறார்கள். பற்றாக்குறைக்கு, மருத்துவம் படிக்கும் மாணவர்களையும் வைத்துப் பணியாற்றி வருகிறார்களாம்.

Advertisment

ss

இந்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு 2009-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர், ‘354’ என்கிற ஒரு அரசாணையைக் கொண்டுவந்தார். அதன்படி, மருத்துவர் களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை 4 ஆகத் தரப்பட வேண்டும். ஆனாலும் 21 வருடம் கழித்துதான் எங்களுக்கு இந்த ஊதியப்பட்டையே கிடைத்துள்ளது. இத னால் ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மாதமும் 40 ஆயிரம் ரூபாய் வீதம் ஊதிய இழப்பைச் சந்திக்கவேண்டி உள்ளது. மத்திய அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்து வர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராகக் கணக்கிட்டால், ரூபாய் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை குறைவாகவும், மற்ற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியத்தோடு ஒப்பிட்டால் 40 ஆயிரம் ரூபாய் குறைவாகவும் இங்குள்ள சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு தரப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "தமிழகம் சுகாதாரத்தில் முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. தொடர்ந்து பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்றுவருகிறது. ஆனாலும் அதற்கான பங்களிப்பைத் தரும் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தரப்படவில்லை. கொரோனா காலகட்டத்தில், கர்நாடக மாநிலத்தில் முதல் அலையிலேயே ஊதிய உயர்வுக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மருத்துவர்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் பல வருடங்களாக தி.மு.க. தலைவரால் கொண்டு வந்த இந்த அரசாணை நடைமுறைப்படுத்தாத தால், கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலிருந்தே போராட்டங்களை மேற் கொண்டு வருகிறோம்.

எனினும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், மீண்டும் மதுரை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும், 2019-ஆம் ஆண்டு உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். அப் போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்த ssஅன்றைய எதிர்க்கட்சித்தலைவரும், தற்போதைய முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின், ‘’மருத்துவர்கள் தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம். அடுத்து அமையும் தி.மு.க. ஆட்சியில், அரசாணை ‘354-ன்படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப் படும்”என உறுதியளித்தார். இதனால் ஒவ்வொரு மருத்துவரும் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந் தோம். எதிர்பார்த்தது போலவே தி.மு.க. ஆட்சி அமைந்தது. முதல் உத்தரவாக அரசு மருத்துவர் களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், நிறை வேற்றவில்லை. அதுவும் ஆட்சிப் பொறுப்பேற்று 14 முறை சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்தித்து, கலைஞரின் அரசாணை மற்றும் முதல்வர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும், இரண்டு முறை பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டும் எந்த மாற்றமும் நிகழவில்லை.

அதனால் மருத்துவர் சங்கத் தலைவர் லட்சுமணன், தமிழகம் முழுவதும் உள்ள மருத் துவர்களையும் அழைத்து, கலைஞர் சமாதியின் முன்பாக வருகின்ற 29-ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள் ளார். இதனை அறிந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்களை மீண்டும் மூன்றாவது முறையாக பேச்சுவார்த் தைக்கு அழைத்துள்ளார்''’எனக் கூறினார்கள்.

இதுகுறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளையிடம் கேட்டபோது, "ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், சட்டப் பேரவையில் மருத்துவத்துறை மானியக் கோரிக் கையின்போது, அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை குறித்து அறிவிப்பு வெளியிடப் படாதது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத் துவர்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. அரசு மருத்துவர்களுக்கு நியாய மான கூலியைக் கூடத் தர மறுப்பது வேதனை யாக உள்ளது. தற்போது அமைச்சர் பேச்சுவார்த் தைக்கு அழைத்துள்ளார். நிச்சயம் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவே அழைத்துள்ளார். எல்லாம் நல்லபடி நடக்கும் என நம்புகிறோம். இல்லையேல் மீண்டும் போராட்டம் வெடிக்கும்''’என்றார்.