Advertisment

அரசின் அடுக்குமாடிக் குடியிருப்புகள்! தகுதியானவர்களுக்குக் கிடைக்குமா?

ss

கரங்களில் வீடுகள் இல்லாமல் சாலை யோரங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் ஆற்றங்கரை, ஏரிக்கரை ஓரங்களில் குடிசைபோட்டு வாழ்கிறார்கள். அன்றாடம் உழைக்கும் மக்கள் சாலையோர பிளாட்பாரங்களில் இரவு நேரங்களில் உண்டு உறங்கி தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். இப்படி உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்கள் வசிக்க நிரந்தரமான ஒரு வீடு அமைத்துக்கொடுக்கும் நோக்கத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி (டஙஆவ) திட்டத்தின்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநில அரசின் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.

Advertisment

gg

அந்தத் திட்டத்தின்படி 2018- 19-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள உ.கீரனூர் பகுதியில் முதல்கட்டமாக 24.66 கோடி மதிப்பீட்டில் 264 வீடுகள் கட்டிமுடிக்கப் பட்டுள்ளது. இரண் டாவது கட்டமாக, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட டம் கட்டிமுடிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

Advertisment

முதற்கட்ட மாக 2018- 19 காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின்போது முதல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனைக் கட்டி முடிப்பதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது பணிகள்

கரங்களில் வீடுகள் இல்லாமல் சாலை யோரங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் ஆற்றங்கரை, ஏரிக்கரை ஓரங்களில் குடிசைபோட்டு வாழ்கிறார்கள். அன்றாடம் உழைக்கும் மக்கள் சாலையோர பிளாட்பாரங்களில் இரவு நேரங்களில் உண்டு உறங்கி தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். இப்படி உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்கள் வசிக்க நிரந்தரமான ஒரு வீடு அமைத்துக்கொடுக்கும் நோக்கத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி (டஙஆவ) திட்டத்தின்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநில அரசின் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.

Advertisment

gg

அந்தத் திட்டத்தின்படி 2018- 19-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள உ.கீரனூர் பகுதியில் முதல்கட்டமாக 24.66 கோடி மதிப்பீட்டில் 264 வீடுகள் கட்டிமுடிக்கப் பட்டுள்ளது. இரண் டாவது கட்டமாக, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட டம் கட்டிமுடிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

Advertisment

முதற்கட்ட மாக 2018- 19 காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின்போது முதல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனைக் கட்டி முடிப்பதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சிமூலம் தமிழகத்தின் பல்வேறு அரசுக் கட்டடங்களை திறந்துவைத்தார். அதில் ஒன்றுதான் இந்த உளுந்தூர்பேட்டை அடுக்கு மாடிக் குடியிருப்பு.

முதல்வர் திறந்துவைத்த அதேநேரத்தில், அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் உளுந்தூர் பேட்டை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன், நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, அரசு அதிகாரிகள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திறப்பு விழா நடந்து ஒரு மாதம் நெருங்கும் நிலையில் அந்த 264 வீடுகளில் ஒரு பயனாளிகூட இன்னும் அங்கு குடியேறவில்லை. ஏன்? என்ன சிக்கல்?

gg

அது குறித்து நாம் நேரடி விசாரணை நடத்தினோம். இந்தத் திட்டத்தில் பயன்பெறவேண்டிய பயனாளி கள் அந்த நகராட்சிப் பகுதி யில் வசிக்கவேண்டும் அவர்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல… இந்திய அளவில் எந்த மாநிலத் திலும் சொந்தமாக வீடு இருக்கக்கூடாது. ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை உள்ளவர்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி பல்வேறு விதிமுறைகள் உள்ளன. வீடு கேட்டு மனு கொடுக்கும் பயனாளிகளை அதிகாரிகள் ஆய்வுசெய்து உரிய பயனாளிகளைத் தேர்வு செய்யவேண்டும்.

அப்படி தேர்வுசெய்யப்படும் பயனாளிகள் தங்கள் வீட்டுக்கு வைப்புத் தொகையாக ஒன்றரை லட்சம் செலுத்தவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட தொகையும் செலுத்தவேண்டும். இதற்குக் காரணம் அந்த குடியிருப்பு பகுதியில் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை குறைவின்றி நிறைவேற்றுவதற்கு, இந்த அடுக்குமாடிக் குடியிருப்பை சுமார் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் இதை கட்டிமுடிக்கும் ஒப்பந்ததாரரே பராமரிப்புப் பணிகளையும் பார்த்துக் கொள்வார். இந்த திட்டம் தனியார் அபார்ட்மெண்ட் திட்டத்தைப் போன்றது. சாதாரண ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்தத் திட்டத்தில் ஏன் இந்த நடைமுறை?

இதுகுறித்து ஏழுமலை என்பவர் நம்மிடம், “"இந்த குடியிருப்புத் திட்டத்தை அப்போ தைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளருமான குமரகுரு பெரும் முயற்சியெடுத்து கொண்டுவந்தார். இந்தத் இடத்தை தேர்வுசெய்து தனியாரிடமிருந்து விலைக்கு வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அரசு ஒதுக்கீடு செய்த நிதி போதவில்லை. குமரகுரு தனது சொந்தச் செலவில் கூடுதல் விலைகொடுத்து அந்த இடத்தை அரசுக்கு வாங்கிக் கொடுத்து, அதற்கு சாலை எல்லாம் செப்பனிட்டு, அடுக்குமாடி கட்டுமானப் பணி கள் நடந்தன. இந்த நிலையில் குடியிருப்பில் வீடுகள் பெறு வதற்காக உரிய பயனாளிகளிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. அதில் நகராட்சியில் வசிப்பவர்களைவிட அக்கம்பக்கம் கிராமங்களில் உள்ள அ.தி.மு.க. கட்சியினர் வீடுகளைப் பெறுவதற்காக தங்கள் ஆதார், ரேஷன் கார்டு போன்றவைகளை கிராமப்புறங்களிலிருந்து உளுந்தூர்பேட்டை நகராட்சி எல்லைக்கு மாற்றி அதை வைத்து வீடு கேட்டு விண்ணப்பித்தனர். தேர்வுசெய்யப்பட்ட பலர் வைப்புத் தொகையாக ஒன்றரை லட்சம் பணமும் செலுத்தியுள்ள னர்.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் முயற்சியில் அதிகாரிகள் இருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முதலில் பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அரசு விதி முறைகளுக்கு உட்பட்டவர் கள்தானா? வீடுகள் பெறுவதற்கு தகுதியானவர்கள்தானா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு உரியவர் களுக்கு வீடுகளை ஒப்படையுங்கள் என்று மனு அளித்தனர்.

ஏற்கெனவே தேர்வுசெய்யப்பட்டவர்கள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள். வசதி படைத்தவர்கள், அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெளிப்படையாக பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை. காரணம், விதிமுறைகளை மீறி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டது தெரிய வந்துவிடும் என்ற தயக்கமே.

இதையடுத்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததன் காரணமாக, அடுக்குமாடிக் குடியிருப்பு திறப்புவிழாவில் கலந்துகொண்ட, உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், "இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் பெறுவதற்காக ஏற்கெனவே பலர் மனு கொடுத்துள்ளனர். தற்போதும் புதிதாக மனு அளித்துள்ளனர். எனவே அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வுசெய்து தகுதியான பயனாளிகளை தேர்வுசெய்ய வேண்டும். அதிகாரிகளே முடிவுகளை சரியாக எடுக்கவேண்டும். கட்சிரீதியாக யாரும் தலையிடமாட்டார்கள். அதேநேரத்தில் தகுதியான ஒரு பயனாளியும் விடுபட்டுவிடக்கூடாது. அது அதிகாரிகளின் பொறுப்பு''’என்று பொதுமக்கள், அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிகாரிகள் புதிய பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்வதில் தனிக்கவனம் செலுத்திவருவதாகவும், ஏற்கனவே வைப்புத் தொகை செலுத்தியவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு வீடுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு, தகுதி இல்லாதவர்களுக்கு அவர்கள் செலுத்திய வைப்புத் தொகையை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை காலம் தாழ்த்தாமல், அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து உரிய பயனாளிகளை தேர்வுசெய்து விரைவில் வீடுகளை வழங்க வேண்டும். தற்போது அந்த வீடுகள் உள்ள பகுதி சமூக விரோதிகள் நடமாட்டம், மதுப்பிரியர்களின் மது குடிக்கும் பாராக மாறியுள்ளது. இது தொடராமல் இருக்க, அரசின் நோக்கத்தை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள் உளுந்தூர் பேட்டை நகரவாசிகள்.

ss

nkn071223
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe