அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் தி.மு.க. அரசோடு மோதி வருகிற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, உச்சநீதி மன்றத்தின் மூலம் குட்டு வைத்திருக் கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு காலம் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து எம்.எல்.ஏ. பதவியையும், அமைச்சர் பதவியையும் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி பறிகொடுத்தார் பொன்முடி. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தண்டனையை நிறுத்தி வைத்தது. இதைத்தொடர்ந்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க கவர்னர் ரவிக்கு பரிந்துரைத் தார் ஸ்டாலின். ஆனால், இதனை ஜீரணிக்காத கவர்னர், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என மறுத்தார்.
கவர்னரின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் ஸ்டாலின்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தலைமையிலான முதல் அமர்வு, "24 மணி நேரத்துக்குள் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது குறித்த முடிவை தெரி விக்க வேண்டும்' என்று கடுமையாக எச்சரிக்கை செய்தது. இதில் மிரண்டுபோன மோடி அரசு, கவர் னருக்கு உத்தரவிட, பொன்முடிக்கு பதவிப்பிர மாணம் செய்துவைக்க உடனே அழைத்தார் கவர் னர் ரவி. இதனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த வெங்கட்ரமணி, நீதிமன்ற உத்தரவுகளை மீறும் எண்ணம் கவர்னருக்கு இல்லை என்பதையும், தமது செயலுக்கு கவர்னர் மன்னிப்புக் கேட்பதாகவும் பதிவு செய்ததையடுத்து வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். இதனைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் பொன் முடி. ஏற்கனவே அவர் கவனித்துவந்த உயர் கல்வித்துறையே வழங்கப்பட்டிருக்கிறது.
கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைப்பது இது முதல் முறை அல்ல! அதாவது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்; மசோதாக்கள் மீது கவர்னருக்கு சந்தேகம் இருந்தால் அரசுக்கு திருப்பி அனுப்பலாம். ஆனால் அதைச் செய்யாமல் 12-க்கும் மேற்பட்ட மசோதாக்களை நீண்ட காலம் நிலுவையிலேயே வைத்திருந்தார் கவர்னர் ரவி.
சட்ட மசோதாக்களுக்கு அப்ரூவல் தரவேண்டும் என கவர்னரை சந்தித்து முதல்வர் வலியுறுத்திய போதெல்லாம், மசோதாக்கள் கிடப்பில் வைக்கப்பட்டாலே அவை நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம். பேரவை என்பது அரசின் ஓர் அங்கம் தான். அங்கு நிறைவேற்றினால் மட்டுமே சட்டமாகாது என்றெல்லாம் விதண்டாவாதம் செய்தார் கவர்னர். இதனால் முதல்வருக்கும் கவர்னருக்குமிடையே இருக்க வேண்டிய நல்லுறவு மோதலாக வெடித்தது.
இதனை எதிர்த்து அப்போது உச்சநீதி மன்றத்தில் ஸ்டாலின் முறையிட, அந்த விவகாரத் திலும் கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்தது நீதிமன்றம். உடனடியாக சம்பந்தப்பட்ட மசோதாக் களுக்கு ஒப்புதலளித்ததுடன், சில மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் கவர்னர் ரவி. இப் படி, உச்சநீதிமன்றத்தின் மூலம்தான் சட்டபடி கவர் னரை பணிய வைத்தபடி இருக்கிறார் ஸ்டாலின்.
தி.மு.க. அரசு 2021-ல் பதவியேற்ற நிலையில், அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் குடைச்சல் கொடுப்பதற்காகவே, ஓய்வு ஐ.பி.எஸ். அதிகாரியும் மத்திய உளவு அமைப்புகளில் நீண்ட காலம் பணிபுரிந்தவரும் நாகாலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக கவர்னராக நியமித்தார் பிரதமர் மோடி. முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளரான ரவி, தமிழகத்தில் நியமிக்கப் பட்டபோதே, தி.மு.க. அரசுக்கு சிக்கல்தான் என ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் விவாதித்தனர்.
அதற்கேற்பத்தான் கவர்னர் ரவியின் நடவடிக்கைகள் இருந்தன; இருந்தும் வருகின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர், "சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என கவனிப்பது மட்டும்தான் கவர்னருக்கான அதிகாரம். இதைத்தாண்டி அவருக்கு விஷேச அதிகாரம் எதுவும் அரசியலமைப்பில் தரப்பட வில்லை. அந்த வகையில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஆட்சி அதிகாரத்தில் கவர்னர் தலையிட அதிகாரம் கிடையாது.
அதேசமயம், பல்கலைக்கழகத்தின் வேந்தராக கவர்னர் இருப்பதால், அதை வைத்து அரசுக்கு எதிரான சர்ச்சைகளை பேசத்துவங்கினார் கவர்னர். குறிப்பாக, துணைவேந்தர்களை ராஜ்பவனுக்கு அழைத்து உத்தரவிடுவது, பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் தலையிடுவது, பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்துகொண்டு, சர்ச்சையான கருத்துக்களைப் பேசுவது என தொடர்ச்சியாகச் செய்தார்.
குறிப்பாக, துணைவேந்தர்களுக்கு அரசு தரப்பிலிருந்து உத்தரவு போடப்படும். கவர்னரோ அதைத் தடுத்து நிறுத்தி, ராஜ்பவனிலிருந்து வரும் உத்தரவுகளைத்தான் மதிக்க வேண்டும் என்பார். புதிய கல்விக்கொள்கைகளை எதிர்த்து தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க முனைந்தார் ஸ்டாலின். ஆனால், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைகளைத்தான் ஏற்க வேண்டும் என கட்டளையிட்டார் கவர்னர்.
பல்கலைக்கழக வேந்தர் என்பதால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராக கவர்னர் வாள் சுழற்ற ஆரம்பித்ததிலிருந்துதான் இப்படிப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன. ஒரு கட் டத்தில் முதல்வர்-கவர்னர் மோதலாகவும் உரு மாறியது. இதை நீதிமன்றம் வழியாக கவர்னரை கண்டிப்பதைக் காட்டிலும் சட்ட ரீதியாக செக் வைக்க வேண்டித்தான், பல்கலைக்கழகத்தின் வேந்தராக இனி முதல்வரே இருப்பார் என்கிற சட்டமசோதாவை நிறைவேற்றினார் ஸ்டாலின்.
திராவிட மாடல் அரசு என்பதை அழுத்த மாக ஸ்டாலின் பதிவு செய்ய, இல்லை இல்லை தமிழ்நாடு ஆன்மீக பூமி என்பார் கவர்னர். மேலும், நீட் தேர்வு விலக்கு, சனாதானம், திராவிடம், இருமொழிக் கொள்கை, ஸ்டெர்லைட் போராட் டம் என பல விசயங்களில் தி.மு.க. அரசை வம்புக் கிழுத்தார். இது மட்டுமல்ல, பட்டியிலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை தமிழகத்தில் நடக்கிறது. கோவில்களில், பள்ளிகளில் நடக்கின்றன'' என்றார். தமிழ்நாடு இல்லை தமிழகம், தமிழ்நாடு ஆளுநர் என்பதை மாற்றி தமிழக ஆளுநர், பங்கரவாதத்துக்கு பெயர்போன ஊர் கோவை, திருவள்ளுவர் ஆன்மீகவாதி என்கிற அணுகுண்டைகளையெல்லாம் வீசினார் கவர்னர்.
இப்படி தி.மு.க. அரசுக்கு எதிராக எதெல்லாம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டதோ அதையெல்லாம் கச்சிதமாக செய்தது ராஜ்பவன். "டெல்லி எஜமானர்களின் உத்தரவின்படியே சர்ச்சைகளும் மோதல்களும் நடக்கின்றன' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அதிகாரிகள்.
கவர்னர்-முதல்வர் மோதல்களின் அடுத்த பரிமாணம், முதல்வரின் அதிகாரத்தில் நேரடியாக கவர்னர் தலையிடுவதாக வளர்ந்தது. அதாவது, அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்து சிறை யில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் தலையிட்ட கவர்னர், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என முதல்வருக்கு கடிதம் எழுத, அதனை கண்டிக்கும் விதத்தில், முதல்வருக்கு உத்தரவிட உங்களுக்கு அதிகாரம் இல்லை என அழுத்தமாகச் சொன்னார் ஸ்டாலின்.
கவர்னருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு அரசுத் தரப்பில் விவாதம் நடந்தது. உடனே செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசுக்கு, தான் அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார் கவர்னர் ரவி. அந்த சர்ச்சைக்கும் அப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதேபோல, கடந்த 2023 நிதியாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கிய போது தமிழ்நாடு, திராவிட மாடல், அம்பேத்கர், பெரியார், அண்ணா, சமூக நீதி, மதநல்லிணக்கம், பெண்ணுரிமை உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்தார். அதாவது, அரசு தயாரித்துத் தந்த உரையை அப்படியே வாசிப்பதுதான் மரபு. அதை மீறும் வகையில் பல விசயங்களைத் தவிர்த்தும், அவருக்கு தோன்றியதை சேர்த்தும் வாசித்தார் கவர்னர் ரவி. இதனை அனுமதிக்காத முதல்வர், கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற, பேரவையை விட்டு கோபமாக வெளியேறினார்.
அதேபோல, நடப்பு நிதியாண்டின் முதல் கூட்டத்தொடர் பட்ஜெட் கூட்டமாக தொடங்கியபோது அதில் பேசிய கவர்னர், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனச்சொல்லி, அரசின் உரையை முழுமையாக படிக்காமல் தவிர்த்தார். இதற்கும் பேரவையில் கவனர்ருக்கு எதிராகக் குரல் எழுந்தபோது, தேசியகீதத்திற்கு மரியாதை தராமல் எழுந்துபோனார் கவர்னர் ரவி.
இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தி.மு.க. அரசுடன் மோதுவதை வழக்கமாக்கிக்கொண்ட கவர்னர் ரவி, தற்போது பொன்முடி விவகாரத்தில் மூக்குடைக்கப்பட்டிருக் கிறார். "முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் மூலம், இந்தியாவில் பா.ஜ.க. ஆளாத மாநில அரசுகளோடு மோதும் கவர்னர்களுக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. இதனைப் பெற்றுத் தந்த பெருமை ஸ்டாலினையே சாரும்' என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
________
கண்கலங்கிய துரை.வைகோ!
இந்தியா கூட்டணியின் திருச்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தி லுள்ள கலைஞர் அறிவாலயத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் பேசிய துரை.வைகோ, "நான் அரசியல்வாதி அல்ல. கனவில் கூட நான் அரசிய லுக்கு வருவேன் என்றும் எண்ணி பார்க்கவில்லை. எங்க அப்பாவிற்கு முதுமை வந்து விட்டது. எங்க அப்பாவிற்கு தலைகுனிவு வந்துவிடக்கூடாது என் பதற்காக நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். எங்க அப்பா ஒரு சகாப்தம்'' என்று கூறும்போது நா தழுதழுக்க கண்ணீர் சிந்தியவர்... தொடர்ந்து பேசுகையில், "எந்த சின்னத்தில் போட்டியிடுவீர் கள்?' என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க, உணர்ச்சி வசப்பட்ட துரை வைகோ "செத்தாலும் எங்க சின் னம்தான்... செத்தாலும் எங்க சின்னம்தான்... நான் சுயமரியாதைக்காரன்'' என்றார்.
-துரை.மகேஷ்