"பலநாள் திருடன் ஒருநாள் அகப்படு வான்' என்பதுபோல, அரசின் விழிப்புணர்வு நிகழ்ச்சியால், 21 குழந்தைகளிடம் தவறாக நடந்துகொண்ட "வாத்தி' ஒருவன் போக்ஸோ வழக்கில் சிக்கியுள்ளான்.
பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து தயங்காமல் புகார் அளிக்க "மாணவர் மனசு' எனும் புகார்ப் பெட்டியை வைத்தது பள்ளிக்கல்வித் துறை. அதுபோக, கட்டணமில்லா தொலைபேசி எண்களான 14417 மற்றும் 1098-ஐ பாடப்புத்தகங் களின் பின் அட்டையிலும் அச்சிட்டுள்ளது. இந்த புகார்ப் பெட்டியை வாராவாரம் அல்லது இரு வாரத்திற்கு ஒருமுறை திறந்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றது தமிழ்நாடு அரசு.
அதுபோக, சமீப காலங்களில் மாணாக் கர்களிடம் பாலியல் கல்வி குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீஸாரும் சிரமம் பாராது ஒவ்வொரு பள்ளிக் கூடமாக ஏறியிறங்கி வருகின்றனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டத் தில் உதகை தாலுகாவில் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு
"பலநாள் திருடன் ஒருநாள் அகப்படு வான்' என்பதுபோல, அரசின் விழிப்புணர்வு நிகழ்ச்சியால், 21 குழந்தைகளிடம் தவறாக நடந்துகொண்ட "வாத்தி' ஒருவன் போக்ஸோ வழக்கில் சிக்கியுள்ளான்.
பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து தயங்காமல் புகார் அளிக்க "மாணவர் மனசு' எனும் புகார்ப் பெட்டியை வைத்தது பள்ளிக்கல்வித் துறை. அதுபோக, கட்டணமில்லா தொலைபேசி எண்களான 14417 மற்றும் 1098-ஐ பாடப்புத்தகங் களின் பின் அட்டையிலும் அச்சிட்டுள்ளது. இந்த புகார்ப் பெட்டியை வாராவாரம் அல்லது இரு வாரத்திற்கு ஒருமுறை திறந்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றது தமிழ்நாடு அரசு.
அதுபோக, சமீப காலங்களில் மாணாக் கர்களிடம் பாலியல் கல்வி குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீஸாரும் சிரமம் பாராது ஒவ்வொரு பள்ளிக் கூடமாக ஏறியிறங்கி வருகின்றனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டத் தில் உதகை தாலுகாவில் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சி நடத்திவருகின்ற எஸ்.பி. நிஷா தலைமையிலான மாவட்ட போலீஸார் ஒரு பள்ளியில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த, அது ஒட்டுமொத்த பள்ளிக்கல்வித் துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"பள்ளிகள் தோறும் பாலியல் விழிப்புணர்வு என்ற நிகழ்ச்சியை உதகை தாலுகாவில் வியாழக் கிழமையன்று ஆரம்பித் தது நீலகிரி மாவட்டக் காவல்துறை. உதகை ஊரக மகளிர் காவல் துறை ஆய்வாளர் விஜயா தலைமையிலான டீம், உதகை தாலுகாவில், காத்தாடி மட்டத்தி லுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றிருக் கின்றார்கள். 350 மாணாக்கர்கள் எண்ணிக்கை கொண்ட அந்த பள்ளியில் "இப்படித் தொட்டால் நல்லது', "இப்படித் தொட்டால் தவறு' என, குட் டச், பேட் டச் குறித்து அறிவுறுத்தியுள்ளனர். இதில் 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர், "மிஸ்... எங்க சார் இப்படித்தான் செய்யுறாரு, அது பேட் டச்சா?'' என வெள்ளந்தியாய் கேள்வி கேட்க, அவளை அழைத்த இன்ஸ். விஜயா, "எப்படிம்மா தொட்டார்? யார் அவர்?'' என விசாரிக்க, அந்த மாணவியின் பின்பக்கத்தைத் தொட்டுத் தடவியதை யும், மார்பகத்தை அழுத்தியதையும் நடித்தே காட்டினாள் அந்த சிறுமி. கோபத்தின் உச்சிக்கே சென்ற இன்ஸ்., "வேறு யாருக்கெல்லாம் இப்படி நடந்திருக்கின்றது?'' எனக் கேள்வி எழுப்பினார். சுமார் 21க்கும் மேற்பட்ட மாணவிகள் "இது மாதிரி' நடந்தது எனச் சொல்லக்கேட்டு அதிர்ந்த இன்ஸ்., உடனடியாக எஸ்.பி. நிஷாவிற்கு தகவலை பாஸ் செய்தார். இதேவேளையில், சைல்ட் லைனுக்கும் தகவல் செல்ல... அந்த கொடூரன் உடனடியாக கைது செய் யப்பட்டு, அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்'' என்கிறார் காத்தாடி மட்டத்தை சேர்ந்த போலீஸ் ஒருவர்.
பள்ளிக்குழந்தைகளிடம் தன்னுடைய வக்கிர செயல்களால் திருப்திப்பட்ட அந்த காமக்கொடூ ரன் செந்தில்குமார், 6 முதல் 8ஆம் வகுப்புவரை அறிவியல் பாடமெடுக்கிறான். கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்த பள்ளியில் பணியாற் றும் 50 வயதான செந்தில்குமார், கோத்தகிரி அருகிலுள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவன். கடந்த 23 வருடங்களாக தமிழ்நாட்டில் பணிபுரிந்தவன் என்பதும், இவனது மனைவியும் அருகிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவரோ, "சமீபத்தில் இந்த காமக்கொடூரன் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடிய பொழுது, பல குழந்தைகளை மடியில் வைத்தும், கன்னத்தை கிள்ளியும், முத்தம் கொடுத்தும் கொஞ்சியிருக்கின்றான் என விசாரணையில் தெரிய வந்தது. குழந்தைகளை கொஞ்சுவதுபோல் கொஞ்சி தன்னுடைய இச்சையை தீர்த்துள்ளான். இந்நிலையில், "மாணவர் மனசு' எனும் புகார்ப் பெட்டியிலும் பல குழந்தைகள் இவனுடைய அத்துமீறலை புகார்க் கடிதமாக எழுதிப் போட்டுள்ளனர். அதில், ஒரு பெண் குழந்தையின் அந்தரங்க இடத்தை தடவி தனது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டதும் அடக்கம். இதுகுறித்து ஏற்கெனவே ஒருசில மாணவிகள் வகுப்பு ஆசிரியர் மூலம் தலைமையாசிரியருக்கு புகாரளிக்க நினைத்தபோது இந்த வாத்தி செந்தில்குமார் அவர்களை மிரட்டியதும், பயந்துபோன மாணவிகள் இதுகுறித்து யாரிடமும் எதுவும் கூறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது" என்கிறார்.
தொடர்ந்து, ஊட்டி ஊரக மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை கைது செய்து, ஊட்டி மகிளா கோர்ட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்த, ஊட்டி கிளைச்சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.
இதே வேளையில், பாலியல் தொல்லை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள செந்தில் குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) நந்தகுமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஏற்கெனவே பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிந்தும், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுபோல், கடந்த 23 ஆண்டுகளில் செந்தில்குமார் பணியாற்றிய அனைத்துப் பள்ளிகளிலும் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சியால் பலநாள் திருடன் பிடிபட்டுள்ளான்.