செங்கல்பட்டு ஈச்சங்கரணை கிராமத்திலுள்ள மலை புறம்போக்கு பகுதியில் ஸ்ரீ மஹாபைரவ ருத்ர ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீ பைரவசித் தாந்த சுவாமி ‘தான் இங்கே கடவுள். பைரவனே இவரது உடலுக்குள் குடிகொண்டிருக் கிறார்’ எனச் சொல்ல, மக்கள் தேடிவந்து தங்கள் குறைகளைச் சொல்லிவருகின்றனர்.

ff

யார் இந்த பைரவசித் தாந்த சுவாமிகள்? சென்னை சைதாப்பேட்டையில் மார்வாடி ஒருவர் ஆட்டோ பைனான்ஸ் தொழில் செய்துவந்துள்ளார். அவரிடம் ஆரம்பகாலத்தில் சுப்பிரமணிப்பிள்ளை என்பவர் பணிக்குச் சேர்ந்து மார் வாடிக்கு நம்பிக்கையான நபராக வலம்வந்துள்ளார். பிறகு, 2004-ஆம் ஆண்டு அவர் தந்த முதலீட்டை வைத்து தன்னுடைய சொந்த ஊரான நாகர்கோயிலில் பைனான்ஸ் தொழில் செய்துவந்துள்ளார்.

திடீரென தொழில் நஷ் டத்தில் செல்லவே தன்னுடலில் தினமும் சாமி வந்து ஆட்டு கிறது என பேச ஆரம்பித்தார். அவரிடம் ஒருவர், “"சென்னை யிலுள்ள உயர் போலீஸ் அதி காரியின் மகளுக்கு பேய் பிடித் திருக்கிறது. அதை நீ சரி செய்து விட்டால் அப்போது நம்புகி றோம்''’என்று சொல்லியுள் ளார். சுப்பிரமணிப் பிள்ளையும் சாமி வந்து ஆடி அந்தப் பெண்ணை சரிசெய் துள்ளாராம். தன் மகள் குணமாகிய சந்தோசத்தில் போலீஸ் அதிகாரியின் மனைவி. “"நான் உங்களுக்கு எந்த உதவி செய்யவும் தயாராக உள்ளேன்''’என தெரிவித்துள்ளார்.

இப்படியாக 2010-ஆம் ஆண்டு சென்னை தாம்பரத் தில் வீடொன்றை வாட கைக்கு எடுத்து அஷ்டபைர வர் மந்திராலயம் தொடங்கி னார். அரசுப் பணியிலிருந்த ஒருவர் 2011-ஆம் ஆண்டு செங்கல்பட்டு ஈச்சகரணை கிராமத்திலுள்ள இடத்தை வாங்கித்தர, 2012-ல் ஸ்ரீ மஹாபைரவ ருத்ர ஆலயம் கட்டிமுடித்தார். அதன் நிறு வனராகவும், அந்த இடத்தை தானப்பத்திரம் மூலம் தன்னு டையதாகவும் மாற்றிக் கொண்டார் சுப்பிரமணிப் பிள்ளை. அன்றிலிருந்து தன்னுடைய பெயரான சுப்புவை கெசட்டில் ஸ்ரீ பைரவசித்தாந்த சுவாமி என மாற்றி முழு சாமியாக உருவெடுத்தார். இதுதான் அவரது முன்கதைச் சுருக்கம்.

Advertisment

j

இந்த கோவில் உள்ளே ஸ்ரீ பைரவசித்தாந்த சுவாமி யின் பைபர் சிலை இருக்கும். அதை வணங்கிவந்தால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தமுனைந்தார். கோவிலிலே தனி அறை ஒன்று வைத்துக்கொண்டு அந்த அறையில் பிரச்சனைகளு டன் வரும் பெண்களை மட்டும் அனுமதித்து, பரிகாரம் செய்வதாக கூறிக்கொண்டு சில்மிஷங்கள் செய்துவந்துள்ளார். இந்த ட்ரஸ்ட் டிலுள்ள ஒருவரின் மனைவியிடமே சில்மிஷம் செய்தநிலையில் 2021-ல் ட்ரஸ்ட்டின் முக்கியமான ஐந்து பேர் வெளியேறிவிட்டனர்.

ஐந்தில் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று கிடைக்கிறது. அதில், (பெயர் மாற்றப்பட்டுள்ளது) “"குமாரி, காயத்ரி இருவரையும் குழந்தை வரம் வேண்டும் என பரிகாரம் சொல்லி தங்கவைத்து சில்மிஷம் செய்தார். இதனால்தான் நாங்கள் வெளியில் வந்தோம்'’என கூறப்பட்டுள்ளது..

சுவாமிஜியின் தாய்மாமா பேத்தியும் இதே கோவிலில் பணி புரிந்து வந்துள்ளார். ஜனவரி 25-ஆம் தேதி இரவு 8 மணிக்கு கோவிலை மூடும்போது சுவாமியுடன் தொடர்பிலிருக்கும் ஜெய்ஸ்ரீ என்பவரின் செல்லும் பேத்தியின் செல்லும் மாறிவிட்டது. ஒரே மாதிரி இருக்கும் காரணத்தால் இருவரும் செல்போனை மாற்றி எடுத் துச் சென்றுள்ளனர். சுவாமியின் பேத்தி, ஜெய்ஸ்ரீயின் செல்போனை தற்செயலாகப் பார்த்தபோது அதில் வாட்ஸ்ஆப் சாட் ஒன்று இருந் துள்ளது. அதிலிருந்த விஷயத்தை வெளியில் சொன்னால் ஏடாகூட மான சாட்டைப் பார்த்து அதிர்ந்துபோய் சுவாமியின் மனைவி மற்றும் மகனிடம் காட்டியுள்ளார். இந்த வாட்ஸ் ஆப்பால் கோவிலின் மானம் கப்பலில் ஏறி விடும், இதை அப்படி விட்டுவிடுங்கள்’என்று சுவாமிஜி சொல்லியிருக் கிறார்.

Advertisment

gg

கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி கோவில் தனியறையில் சுவாமியும் ஜெய்ஸ்ரீயும் உள்ளே ஏடா கூடமாக இருந்தபோது கையும், களவுமாகப் பிடித் தார் சுவாமியின் மனைவி வேலம்மாள். பரிகாரத்திற் காகத்தான் உள்ளே இருந்தோம் என சுவாமி சமாளிக்க, இதை நிச்சயம் வெளியில் சொல்லுவேன் என்று அவரது மனைவி கூற, சுவாமி அவரை கடு மையாகத் தாக்கியதுடன் வெளியே கூறக்கூடாதென வும் மிரட்டியுள்ளார். பிறகு தனியார் மருத்து மனையில் வேலம்மாளை சிகிச்சைக்குச் சேர்த்துள்ளார்.

இதில் மனம்வெறுத்த அவர், ஏப்ரல் 30-ஆம் தேதி செங்கல்பட்டு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையோ சுவாமியின் பக்கம் நின்று மனைவியை மிரட்டியதோடு, இதுவரை ஒரு சி.எஸ்.ஆர்.கூட கொடுக்கவில்லை என சுவாமியின் மகனான வினிஷ் கூறுகிறார். “"ஒரு மனைவி பார்க்கக்கூடாததை என் கண்களால் பார்த்தேன். இதுபோன்ற போலிச் சாமிகளை விடக்கூடாது''’என்கிறார் வேலம்மாள்.

ff

இதுகுறித்து சம்பந்தப் பட்ட இன்ஸ்பெக்டர் அசோகன், "இதுதொடர்பான வீடியோ புட்டேஜ்வரை இவர்கள் கொடுத்திருக்கிறார்கள். முறை யான விசாரணை நடத்தி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப் படும்''’என்றார்.

ஸ்ரீபைரவ சித்தாந்த சுவாமிகளோ, "தவறான புகாரைக் கொடுத்து என்மீது அபாண்டங்களைச் சுமத்தப் பார்க்கிறார்கள். காவல்துறை விசாரணையில் உண்மை வெளியாகும்''’என்கிறார்.