தேசத் தலைவர்கள், தியாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என சமூகத்திற்கு தங்களது பங்களிப்பை கொடுத்தவர்கள் நினைவை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு சார்பில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் சிலை வைக்கப்படுகிறது. தலைவர்களின் சிலைகள் பெரும்பாலும் கருப்பு நிறத்திலேயே பெயின்ட் செய்யப்பட்டிருக்கும். இச்சிலைகளில் வந்தமரும் பறவைகள் எச்சமிட்டுச் செல்வதால் சிலைகளை சுத்தப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதற்கு விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து தீர்வுகாண முற்பட்டார் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ.சாமிநாதன்.

Advertisment

ff

கருமை நிறச் சிலைகள் வெளிச்சத்தை எதிரொலிக்காத தன்மை கொண்டவை என்பதால் இச்சிலைகளின்மீது நீண்ட நேரம் பறவைகள் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வதாக ஆய்வாளர்கள் குழு கண்டறிந்தது. எனவே இப்பிரச்சனைக்கு தீர்வாக, கருப்பு நிறத்துக்கு பதிலாக, வெளிச்சத்தை எதிரொலிக்கிற, கண் கூசக்கூடிய பொன்னிற வர்ணத்தை சிலைகளுக்கு பூசினால், பறவைகள் சிலைகளில் அமர்வதில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். அதையடுத்து முதற்கட்டமாக, சென்னை மெரினா கடற்கரை மற்றும் காந்தி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிலைகளுக்கு பொன்னிற வர்ணம் அடிக்கப்பட்டது.

Advertisment

"சிலைகளுக்கு கருப்புக்கு பதிலாக பொன்னிறம் பூசப்பட்ட பிறகு கடந்த ஒரு வாரமாக காகம் உள்ளிட்ட பறவைகள் சிலைகளில் வந்தமர்வது இல்லை. அதன் எச்சங்களால் சிலைகள் பாழ்படுவ தில்லை. இதை விஞ்ஞானரீதியாக தற்போது உறுதிப்படுத்தியுள்ளோம். ஏற்கெனவே உள்ள வெண்கலச் சிலைகள் தவிர்த்து, தமிழ்நாடு முழுக்க உள்ள கருப்பு நிற கற்சிலைகளுக்கு பொன்னிறத்தை பூசும் பணியை தொடர்வோம்'' என்றார் செய்தி மக்கள் தொடர்பு துறையின் உயரதிகாரி ஒருவர்.

"தலைவர்களின் புகழைப் பரப்ப சிலைகள் வைக்கிறோம். அப்படிப்பட்ட சிலைகள் சுத்தமாக இருந்தால் தான் நாம் அவர்களுக்கு உண்மை யாகவே மரியாதை செலுத்துவதாக இருக்கும் என்பதால் பறவைகளின் கழிவுகள் சிலைகளில் படாமலிருப்பதற்காக வர்ணத்தை மாற்றியுள்ளோம். அதேபோல், சுதந்திரப் போராட்ட தியாகிகள், நமது நாட்டுக்காக உழைத்த மாபெரும் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவிய லாளர்கள் என ஏராளமான தலைவர்களுக்கு அவர்களின் சொந்த ஊரில் சிலைகளை அமைத்து மணிமண்டபம் கட்டியுள்ளோம். தலைவர்களின் மணிமண்டபம் அமைந்துள்ள இடத்தில் நினைவு அரங்கங்கள் அமைத்து வருகிறோம். இந்த நினைவு அரங்கத்தில், அந்த பகுதியிலுள்ள மக்கள், தங்களது இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று நடத்திக்கொள்ள லாம். தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று இப்பணிகளைச் செய்துவருகிறோம்'' எனப் பெருமிதத்துடன் கூறினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

Advertisment