சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை யின் வாயிலில் இருபுறமும் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கக்கவசங்கள் செப்பனிடும் பணிக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அதிலிருந்த தங்கம் திருடப்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்தான முறைகேடுகளை முழுமையாக விசாரிக்க நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. விசாரணையில், 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் நீட்சியாக, திண்டுக்கல்லில் பைனான்ஸ் & ரியல் எஸ்டேட் செய்யும் நபரிடம் விசாரணை நடத்தியது எஸ்.ஐ.டி. போலீஸ். இதனால் திருட்டு வழக்கில் புதிய பரபரப்பு தொற்றியுள்ளது.
"என்னுடைய அனுமதி இல்லாம லேயே ஐயப்பன் கோவிலிலுள்ள தங்கக்கவசங்கள், பீடங்கள், செப்பனிடும் பணிக் காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சென்னை யை சேர்ந்த நிறுவனத்திடம் வழங்குவதற்காக சபரிமலை கோவிலிலிருந்து தங்கக்கவசங்கள், செப்டம்பர் 7ஆம் தேதி நீக்கப்பட்டது. இதற்கு முன்பாக, 2019ஆம் ஆண்டும் செப்பனிடும் பணிக்காக துவாரபாலகர்கள் சிலையை அனுப்பிவைத்தபோது, செப்பனிடப்பட்டு வந்ததும் அதன் எடையில் 4.5 கிலோ வரை குறைந்திருந்தது. அதுபோல், 1.5 கிலோ எடை யுள்ள தங்கக் கவசங்கள் செப்புத்தகடுகளாக மாற்றப்பட்டிருந்தது'' என சபரிமலை கோவி லின் சிறப்பு ஆணையர் செப்டம்பர் 10ஆம் தேதி யன்று கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். சற்று அதிர்ச்சியடைந்த நீதிமன்றம், மாயமான தங்கம் குறித்தான வழக்குகளை விசா ரிக்க சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. வெங்க டேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) ஒன்றையும், சபரிமலையிலுள்ள விலையுயர்ந்த பொருட்களை மீண்டும் மதிப்பீடு செய்ய முன்னாள் நீதிபதி கே.டி.சங்கரனையும் நியமித்தது.
எஸ்.ஐ.டி. இந்த வழக்கை கையிலெடுத்த வுடனேயே, ஐயப்பன் கோவிலில் நன்கொடை யாளர்களின் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம்போர்டு துணைஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ, செயலதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், திருவாபரணப் பெட்டியின் முன்னாள் ஆணையர் பைஜு உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வழக்கின் 10வது குற்றவாளியாக தேவசம்போர்டையும் சேர்த்தது. தொடர் விசாரணையில், "2019ஆம் ஆண்டு பெங்களூருவிலுள்ள உன்னிகிருஷ்ணன் போத்தி தானாக முன்வந்து, துவார பாலகர்கள் சிலைக்கவசத்தை செப்பனிட்டுத் தருவதாகக்கூற, 2019ஆம் ஆண்டு, ஜூலை மாதம் துவாரபாலகர் கள் சிலைக்கவசத்தை அவர்வசம் ஒப்படைத்தது. அதே 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், செப்பனிடப்பட்ட சிலைக்கவசங்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்ததும் அதை எடை போட்டபோது, 42.8 கிலோ எடையிலிருந்த கவசங்கள், 38 கிலோவாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. ஏறக்குறைய 4.8 கிலோ தங்கம் மாயமாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட் டது. இதே வேளையில், துவாரபாலகர்கள் தங்கக்கவசங்கள் எங்களுக்கு வந்து சேர்ந்தது ஆகஸ்ட் மாதத்தில்தான் என்றது, இதனை செப்பனிட்ட சென்னை ஸ்மார்ட் க்ரியேஷன்ஸ் நிறுவனம். ஆனால் செப்புத்தகடுகள் வேய்ந்தது குறித்து வாய் திறக்கவில்லை என்பதும் தெரியவந்தது'' என்கிறார் எஸ்.ஐ.டி. போலீஸ் ஒருவர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/29/iyappantemple1-2025-12-29-18-01-03.jpg)
இந்த நிலையில், ஐயப்பன் கோவிலின் முன்னாள் நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமாரை கைது செய்து வழக்கமான போலீஸ் பாணியை பயன்படுத்த, "எனக்கு கிடைத்த 476 கிராம் தங்கத்தை கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த கோவர்த்தனனின் ரோத்தம் ஜுவல்லரியிடம் விற்பனை செய்தேன்'' என்றார். இதையடுத்து ரோத்தம் ஜூவல்லரி கோவர்த்தன், சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமை செயலதிகாரி பங்கஜ் பண்டாரி மற்றும் வெளி நாடுவாழ் இந்தியர் ஒருவரையும் கைது செய்து திருவனந்தபுரம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதனடிப்படையில், திண்டுக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற எம்.எஸ்.மணி விசாரணை வளையத்திற் குள் வந்தார். அதனடிப்படையில், கேரளாவை சேர்ந்த எஸ்.ஐ.டி. டி.ஒய்.எஸ்.பி. - எஸ்.எஸ். சுரேஷ்பாபு தலைமையில் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியன் அலுவலகத்தில் தீவிர சோதனை மற்றும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைகாட்டப்பட்ட பைனான்ஸ் உரிமையாளர் எம்.எஸ்.மணி என்பவரோ, "சபரிமலை கோயிலில் நடைபெற்ற நகைத்திருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. காவல்துறை மூலம் சம்மனும் வழங்கவில்லை. எனது பெயரை யாரோ தவறாக அவர்களிடம் கூறியுள்ளனர். அவர்கள் சொல்வது டி.மணி. எனது பெயர் எம்.எஸ்.மணி'' என மறுத்தார். எனினும் விசாரணையின்போது பல கோப்புக்களை பிரதியெடுத்துச் சென் றுள்ளது எஸ்.ஐ.டி. என்பது குறிப்பிடத்தக்கது.
இது இப்படியிருக்க, "தங்கமுலாம் பூசப்பட்ட தங்கத்தகடுகள் சபரிமலையிலிருந்து சென்னையிலுள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தை அடைய முப்பது நாட்களுக்கு மேல் தாமதமானது எதனால்? இந்த தாமத மான 30 நாட்களில் தங்கத்தகடுகள் எங்கெல்லாம் சென்றது?'' என்ற கேள்விகளுடன் எஸ்.ஐ.டி. தொடர் விசாரணையை நடத்த, திண்டுக்கல்லைத் தொடர்ந்து காரைக்குடியிலும் விசாரணை நீளும் என்கிறது விபரமறிந்த உளவு வட்டாரம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/iyappantemple-2025-12-29-18-00-54.jpg)