தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. சுதந்திரம் பெற்ற 1947-ல் ஒரு சவரன் 88 ரூபாய் 62 பைசா. தற்போதைய விலை யோ, 20.1.2025 நிலவரப்படி ஒரு லட்சத்து 20,000க்கு மேல். தங்கம் விலையேற்றத் திற்கு தங்கம், வெள்ளியில் உலக நாடுகள் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்ததாக, அமெரிக்காவில் ட்ரம்ப் செய்யும் அதிரடிகளும், மூன்றாவது காரணம். உலக அளவில் ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஈரான் எனப் பல்வேறு நாடுகளிடையே நடக்கும் போர்களையும் காரணமாகச் சொல்கிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்து பதுக்குவதால், அதற்கான தேவை அதிகரித்து, விலையும் அதிகரிக்கிறது எங்கிறார்கள் தங்க நகைக்கடைக்காரர்கள். தங்கத்தை பதுக்கியவர்கள் விற்பனை செய்யத் தொடங்கும்போது தான் தங்கத்தின் விலை குறையத் தொடங்கு மென்றும், அது தற்போதைக்கு சாத்திய மில்லையென்றும் கூறப்படுகிறது.
இப்படி தங்கத்தின் விலையேற்றம் முதலீட்டாளர்களுக்கு லாபகரமானதாக இருந்தாலும், நடுத்தர, அடித்தட்டு வர்க்க மக்களுக்கு மிகக்கடுமையான நிதிச்சுமையையும், மன உளைச்சலையும் கொடுப்பதாக உள்ளது. குடும்ப உறவுகளிலும் மிகப்பெரிய விரிசலை உருவாக்கியுள்ளது.
தங்கம் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு கண்டுகொள்ளாததால், தெய்வத் திடம் முறையிட்டு குறி கேட்கும் போராட்டத்தை நடத்தியுள்ளனர் அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள். தங்கள் கிராமத்திலுள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக திரண்டு
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. சுதந்திரம் பெற்ற 1947-ல் ஒரு சவரன் 88 ரூபாய் 62 பைசா. தற்போதைய விலை யோ, 20.1.2025 நிலவரப்படி ஒரு லட்சத்து 20,000க்கு மேல். தங்கம் விலையேற்றத் திற்கு தங்கம், வெள்ளியில் உலக நாடுகள் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்ததாக, அமெரிக்காவில் ட்ரம்ப் செய்யும் அதிரடிகளும், மூன்றாவது காரணம். உலக அளவில் ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஈரான் எனப் பல்வேறு நாடுகளிடையே நடக்கும் போர்களையும் காரணமாகச் சொல்கிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்து பதுக்குவதால், அதற்கான தேவை அதிகரித்து, விலையும் அதிகரிக்கிறது எங்கிறார்கள் தங்க நகைக்கடைக்காரர்கள். தங்கத்தை பதுக்கியவர்கள் விற்பனை செய்யத் தொடங்கும்போது தான் தங்கத்தின் விலை குறையத் தொடங்கு மென்றும், அது தற்போதைக்கு சாத்திய மில்லையென்றும் கூறப்படுகிறது.
இப்படி தங்கத்தின் விலையேற்றம் முதலீட்டாளர்களுக்கு லாபகரமானதாக இருந்தாலும், நடுத்தர, அடித்தட்டு வர்க்க மக்களுக்கு மிகக்கடுமையான நிதிச்சுமையையும், மன உளைச்சலையும் கொடுப்பதாக உள்ளது. குடும்ப உறவுகளிலும் மிகப்பெரிய விரிசலை உருவாக்கியுள்ளது.
தங்கம் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு கண்டுகொள்ளாததால், தெய்வத் திடம் முறையிட்டு குறி கேட்கும் போராட்டத்தை நடத்தியுள்ளனர் அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள். தங்கள் கிராமத்திலுள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக திரண்டு, தங்கத்தின் விலையேற்றத்தால் தாங்கள் படும் துயரத்தைக் கூறி, "விலை குறைய வழி யுண்டா?' எனக் குறி கேட்டுள்ள னர். அந்த பெண்களில் சிலரை சந்தித்தோம். "தங்கத்தின் விலை யேற்றம் வரலாறு காணாத அளவில் ஒரே ஆண்டில் ஐம்பதாயிரம் அதிகரித்துள் ளது. குடும்பங்களில் கல்யாணம், காது குத்து, மஞ்சள் நீராட்டு, வளைகாப்பு, குழந்தைகள் பிறந்த நாள் என சுப காரியங்களில் மட்டுமல்ல, இறப்பு சடங்குகளிலும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் மோதிரம், செயின் எனத் தங்கத்தில் வாங்கிக்கொடுப்பது காலகாலமாக நடந்துவரும் வழக்கம். இப்போது தங்கம் விலையேற்றத்தால் மகளுக்கு திருமணத்தின்போது கூட தங்கத்தில் தாலி வாங்கிக்கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி மஞ்சள் கயிற்றை மட்டுமே தாலியாகக் கட்ட முடியும். கடந்த காலங்களில் பனை ஓலையை பெண்களுக்கு தாலியாகக் கட்டினார்களாம் அதே நிலை தற்போது ஏற்பட்டுள்ளது'' என்கிறார் பொய்யூர் மகேசுவரி.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/gold1-2026-01-29-17-04-18.jpg)
"தமிழகத்தில் குடும்ப காரியங்களில் தங்கத்தாலான ஆபரணங்களை அன்பளிப்பாக வழங்குவது வழக்கம். அதேபோல் அன்பளிப்பு கொடுத்த உறவினர்களின் வீடுகளில் விஷேசம் நடக்கும்போது அதை திருப்பிச்செய்ய வேண்டும். ஏற்கெனவே ஒரு கிராம் ஐயாயிரம் விலையில் வாங்கி அன்பளிப்பு செய்துள்ளார்கள். ஆனால் தற்போது ஒரு கிராம் தங்கம் 14,500 வரை அதிகரித்துள்ளது. தற்போது பதிலுக்கு பதில் தங்கம் வாங்கிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு விலையேற்றம், சாதாரண நடுத்தர மக்களுக்கு பெருத்த கடன் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலையேற்றத்தால் மறு அன்பளிப்பு செய்ய முடியாத நிலை ஏற்படுவதால் உறவினர் களுக்குள் விரிசல் ஏற்பட்டு பகையாகிறது'' என்கிறார் முத்துலெட்சுமி.
"இது மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தில் திருமணத்தடை, குழந்தைப்பேறு இல்லாமை எனப் பல்வேறு காரணங்களுக்காக தெய்வங்களிடம் வேண்டுதல் வைத்து, வேண்டுதல் நிறைவேறிய பிறகு தங்கத்தால் தாலி செய்து தெய்வங்களுக்கு காணிக்கையாக செலுத்துவோம். இப்போது தங்கம் விலை யேற்றத்தால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாத குற்றத்திற்கு ஆளாகி வருகிறோம். அதனால்தான் எங்க ஊர் மாரியம்மனிடம் தங்கத்திற்கு பதில் மஞ்சள் கயிற்றை காணிக்கையாக செலுத்துகிறோம்'' என்கிறார் கீழப்பழுவூர் கீதா.
மக்கள் சேவை இயக்க விவசாயப்பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் கூறுகையில், "தங்கம் விலையேற்றத்துக்கு பண வீக்கம், டாலரின் மதிப்பு வீழ்ச்சி, புவிசார் அரசியல் பதட்டங்கள் எனப் பல்வேறு காரணங்களை சொல்கிறார்கள். தங்கம் பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளதால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இதில் அமெ ரிக்காவின் சதி இருக்கிறது. அமெரிக்காவின் சதிக்கு இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்து, தங்கத்தின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். கடந்த ஆண்டில் பங்குச்சந்தை நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை 50%, வெள்ளியின் விலை 45% ஏறியுள்ளது. இது சாதாரண, நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பாமர மக்களால் தங்கத்தை வாங்கவோ, தொட்டுப்பார்க்கவோ கூட முடியாது. எனவேதான் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம், தங்கராசு, தங்கவேலு, தங்கபாலு, பவுனு, சொர்ணம் என்றெல்லாம் பெயர்களை வைத்து அழைத்து சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். அதே போன்ற நிலை மீண் டும் ஏற்பட் டுள்ளது'' என்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/gold2-2026-01-29-17-04-33.jpg)
"தங்கம் விலையேற்றம் காரணமாக கொள் ளை, கொலை அதிகரித்துள்ளது. தங்கத்தை கொள்ளை யடிப்பது மட்டுமல்லாது, கொலை செய்யவும் துணிகிறார்கள்.
எனவே தங்கத்தின் விலையேற்றம், மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதெல்லாம் பட்டப்பகலிலேயே வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கிறார்கள். குறிப்பாக திருவிழா காலங்களில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பெண்களே, பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை அறுத்துக்கொண்டு செல்கிறார்கள். சாலையில் வீதியில் நடந்துசெல்லும் பெண்களின் நகைகளை இரு சக்கர வாகனத்தில் வந்து அறுத்துச் செல்கிறார்கள். இதில் தடுமாறி விழுந்து பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகியுள்ளது'' என்கிறார் கீழக்கொளத்தூர் இராணி
"தங்கத்தின் விலையேற்றத்தை அரசாங்கம் குறைக்குமென்ற நம்பிக்கையிழந்த நாங்கள் எங்கள் கிராம தெய்வங்களிடம் வேண்டுதல் வைத்து வழிபாடு செய்தோம். தெய்வமாவது தங்கத்தின் விலையை குறைக்குமா?'' என்கிறார் சகுந்தலா.
"அண்மைக்காலமாக தங்கத்தின் விலையேற்றத்தால் கல்யாணம், காது குத்து உள்ளிட்ட நிகழ்வுகளை செய்ய முடியாமல் தமிழகத்திலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் அவதியுறுகின்றனர். இதற்காக எந்த அமைப்பும் கண்டனம் தெரிவிக்க வில்லை. விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குரலெழுப்பவும் இல்லை. இந்நிலையில், அரியலூர் மாவட்ட மக்கள் முதலாவதாக தங்க விலையேற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தங்கத்தின் விலை யேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரியலூர் மாவட்ட மக்கள் பல்வேறு நூதனப் போராட்டங்களை கையிலெடுத் துள்ளனர். மஞ்சள் தாலிக்கயிறுடன் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையிலான விவசாயிகள் கையில் மஞ்சள் தாலி கயிறுடன், தங்கம் விலை கட்டுக்குள் வரும் வரை ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். இதை மத்திய அரசுக்கு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் கோரிக்கையாக தெரிவிக்க வேண்டும்'' என கூறினர். அரியலூர் மாவட்ட ஆட்சியரும், மத்திய அரசுக்கு விவசாயிகளின் கருத்தாகத் தெரிவிக்கப்படும் என்றார். மேலும், இதுநாள் வரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே தமிழக அரசு சட்டசபைக் கூட்டத்தில், மத்திய அரசு தங்கத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வரும்வரை ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி தீர்மானம் இயற்றிட விவசாய சங்க பிரதிநிதிகள் வேண்டு கோள் வைத்தனர்'' என்கிறார் அசாவீரன்குடிக்காடு இராவணன்.
இது உலக அளவிலான பிரச்சனைகளால் ஏற்படுவதால் நம்மால் ஒன்றும் செய்ய இயலா தென்று கூறுவது அபத்தமானது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் நமது இந்தியா குரல் கொடுத்தால் தங்கம் விலை குறையும் என்றனர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள்.
-எஸ்.பி.எஸ்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us