தங்கம் விலை உயர உயர பெண் களைப் பெற்றவர்கள் திகிலடித்துப் போய் இருப்பது ஒருபக்கமென் றால், தினசரி கொள்ளைச் சம்ப வங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தடுக்கமுடியாமல் திணறிவருகிறார்கள் போலீசார். புதுக் கோட்டையில் போலீஸ்காரர்கள் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவங்களைக்கூட இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிறுவர் களும், இளைஞர்களும்கூட நகைத் திருடர்களாகி வருவது வேதனையளிக்கிறது.
Advertisment
2024 முதல் தொடங்கிய தங்க விலை ஏற்றம், ராக்கெட் டைப் போல விண்ணை நோக்கி ஏறிக்கொண் டேயிருக்கிறது. திருமண, சுபகாரியங் களுக்கு தங்கம் வாங்க வேண்டியவர்கள் தங்கள் பாக்கெட்டை பரிதாபமாகப் பார்த்தபடி எப்படி சமாளிக்கப் போகிறோம் என ஏக்கத்தில் இருக்கி றார்கள். மாறாக, தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கும் நகை வியாபாரிகளுக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.
Advertisment
நகை விலை உயர்வைப் பற்றி வருத்தப் பட்ட கொத்தமங்கலம் வனிதா, “"சில வருடங் களுக்கு முன்புவரை கிராமப் பெண்கள் தினக் கூலிக்கு போய் சேமிக்கும் பணத்தில் தோடு, மூக்குத்தி, மோதிரம், சின்னச் சின்ன சங்கிலி களை வாங்கி வைத்திருந்தார்கள். அவர்களின் திருமண நேரங்களில் அந்த நகைகள் அந்தக் குடும்பங்களுக்கு கைகொடுத்தது. கூடுதலாக சில நகைகளை வாங்கிப்போட்டு திருமணம் செய்து கொடுக்க முடிந்தது. ஆனால் இப்ப ஒரு பவுன் தங்கம் வாங்க ரூ.1.20 லட்சம் வேண்டும். தங்கம் வாங்கமுடியாத அளவுக்குப் போய்விட்டது. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணத்தில் நம் உறவினர்கள் திருமணம், காதணி விழாக்களில் சின்னச் சின்ன நகைகளைப் பரிசாகக் கொடுத்து, பிறகு நம் வீட்டு விஷேசங்களில் வாங்கியது உண்டு. 10 வருசத்துக்
தங்கம் விலை உயர உயர பெண் களைப் பெற்றவர்கள் திகிலடித்துப் போய் இருப்பது ஒருபக்கமென் றால், தினசரி கொள்ளைச் சம்ப வங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தடுக்கமுடியாமல் திணறிவருகிறார்கள் போலீசார். புதுக் கோட்டையில் போலீஸ்காரர்கள் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவங்களைக்கூட இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிறுவர் களும், இளைஞர்களும்கூட நகைத் திருடர்களாகி வருவது வேதனையளிக்கிறது.
Advertisment
2024 முதல் தொடங்கிய தங்க விலை ஏற்றம், ராக்கெட் டைப் போல விண்ணை நோக்கி ஏறிக்கொண் டேயிருக்கிறது. திருமண, சுபகாரியங் களுக்கு தங்கம் வாங்க வேண்டியவர்கள் தங்கள் பாக்கெட்டை பரிதாபமாகப் பார்த்தபடி எப்படி சமாளிக்கப் போகிறோம் என ஏக்கத்தில் இருக்கி றார்கள். மாறாக, தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கும் நகை வியாபாரிகளுக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.
Advertisment
நகை விலை உயர்வைப் பற்றி வருத்தப் பட்ட கொத்தமங்கலம் வனிதா, “"சில வருடங் களுக்கு முன்புவரை கிராமப் பெண்கள் தினக் கூலிக்கு போய் சேமிக்கும் பணத்தில் தோடு, மூக்குத்தி, மோதிரம், சின்னச் சின்ன சங்கிலி களை வாங்கி வைத்திருந்தார்கள். அவர்களின் திருமண நேரங்களில் அந்த நகைகள் அந்தக் குடும்பங்களுக்கு கைகொடுத்தது. கூடுதலாக சில நகைகளை வாங்கிப்போட்டு திருமணம் செய்து கொடுக்க முடிந்தது. ஆனால் இப்ப ஒரு பவுன் தங்கம் வாங்க ரூ.1.20 லட்சம் வேண்டும். தங்கம் வாங்கமுடியாத அளவுக்குப் போய்விட்டது. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணத்தில் நம் உறவினர்கள் திருமணம், காதணி விழாக்களில் சின்னச் சின்ன நகைகளைப் பரிசாகக் கொடுத்து, பிறகு நம் வீட்டு விஷேசங்களில் வாங்கியது உண்டு. 10 வருசத்துக்கு முன்பு 4 கிராம் தங்க மோதிரம் போட்ட உறவினர்களுக்கு, 2 கிராம்கூட திருப்பிச் செய்யமுடியாத நிலை உள்ளது. இதனால் உறவினர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. ஏழைகளின் கவலையைப் போக்க இந்த அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ள ”"தாலிக்கு தங்கம்'” திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்றார்.
கீரமங்கலம் முத்தமிழ்ச்செல்வியோ, “"தங்கம் விலை உயர உயர திருட்டுப் பயம் வேற அதிகரித்துள்ளது. போன மாதம் தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டவயல் அருகே பைக்கில் சென்ற ஒரு தம்பதியிடம் 2 சிறுவர் கள் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஒரு மாதம் விசாரித்து திருநாளூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செஞ்சாங்க. அதேபோல கடந்த சில வருடங்களாக சிறுவர்கள் அதிகமாக தங்க நகை திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவது வேதனையாக உள்ளது. போனவாரம், அலஞ்சிரங்காடு கிராமத்தில் அதிகாலை பால் கறக்க வீட்டைவிட்டு வெளியே வந்த மூதாட்டி தலையில் இரும்புக் கம்பியால் அடித்து தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றவனை கீரமங்கலம் போலீசார் பிடிச்சிருக் காங்க. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்வதுபோல திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்தபடி இருக்கிறது. தங்க நகைகளை மட்டுமில்லை, கவரிங் நகைகளை போட்டு வெளியே போகவும் ரொம்ப பயமா இருக்கு''” என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/gold1-2026-01-12-16-39-15.jpg)
தங்கம் விலை உயர்வு குறித்து திருவண்ணா மலையைச் சேர்ந்த வழக்கறிஞரும், முதலீட்டாள ருமான ரமேஷ்கிருஸ்டியிடம் நாம் கேட்டபோது, "கச்சா எண்ணெய் விலை உயரும்போது தங்கம் விலை குறையும், கச்சா எண்ணெய் விலை குறையும்போது தங்கத்தின் விலை உயரும். கச்சா எண்ணெய் எல்லா நாட்டுக்கும் தேவை. அதனால் அதில் முதலீடு செய்வார்கள். அது வீழ்ச்சி யடையும்போது தங்களது முதலீட்டை தங்கத்துக்கு மாற்றுவார்கள். தங்கத்தில் முதலீடு செய்யும்போது அதன் விலை அதிகரிக்கும். அதேபோல் உலகத்தில் வர்த்தகம் அனைத்தும் டாலரில்தான் நடக்கிறது, சிலநேரங் களில் மட் டும் தங்கத் தில் நடக்கும். இத னால் ஒவ்வொரு நாடும் தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கும். உலகி லேயே அமெரிக்கா தான் அதிகளவு தங்க கையிருப்பு வைத்துள்ளது, அதற்கடுத்து ஜெர்மனி, சீனா, இந்தியா என உள்ளது. இந்த தங்கத்தின் கையிருப்பை வைத்துதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அளவிடப்படுகிறது. ரஷ்யா- உக்ரைன் போர் உலகப் பொருளா தாரத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதேபோல் அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் மீண்டும் வந்தபின் அமெ ரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் பெரியளவில் பாதிப்பை சந்தித்துவருகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ந்தால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரம் விழும். காரணம், அமெரிக்காவின் பணமான டாலரை வைத்துதான் உலகம் முழுவதும் ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகம் நடந்துவரு கிறது. அதேபோல் ரஷ்யா- உக்ரைன், காஸா போர் பதற்றங்களும் பொருளாதாரத்தை நிலையற்றதாக மாற்றுகின்றன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்துவருகின்றன. போட்டி போட்டுக் கொண்டு உலக நாடுகள் தங்கத்தை வாங்குவதால் தங்கம் விலை உயர்ந்துவருகிறது''’ என்றார்.
தங்கத்தின் விலையை சர்வதேச அமைப்புதான் நிர்ணயிக்கும். உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, 2022 முதல் உலக நாடுகளின் வங்கிகள் தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்துவருகின்றன. அதேபோல் தங்கத்தின் மீதான முதலீடு களும் கடந்த 3 ஆண்டுகளில் கடந்த காலங் களைவிட இப்போது அதிகரித்துள்ளன. கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 186 டன் தங்கத்தை அமெரிக்கா வாங்கியுள்ளது. அதில் 35 டன் மட்டுமே மக்கள் பயன்பாட்டுக் கானது. மீதி அரசாங்கம் வாங்கி இருப்பு வைத்துள்ளது. இப்படித்தான் மற்ற நாடுகளும் செயல்படுகின்றன. உலக தங்க கவுன்சில் சி.இ.ஓ டேவிட் டெயிட், 2026-ஆம் ஆண்டில் விலை இன்னமும் உயரும் எனச் சொல்லியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வால் மக்கள் தங்கம் வாங்கும் அளவு குறையத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் திருமணத்துக்கு அத்தியாவசியத் தேவையாக தங்கம் இருந்துவருகிறது. விலை உயர்வால் மக்கள் அரசின் மீதும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளனர். இதனால் இதற்கு மாற்று என்னவென யோசிக்கத் துவங்கியுள்ளார்கள். ஐரோப்பிய நாடுகளில் 18 கேரட் கோல்டு பயன்படுத்துகிறார்கள். ஆசிய கண்டத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் 22 கேரட் தங்கம் பயன்படுத்துகிறோம். விலை உயர்ந்துகொண்டே போவதால் தங்கத்தின் விலை பெரியளவில் இனி குறையாது. இதனால் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் 9 கேரட் தங்கம் கொண்டுவர ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது. இதன்மூலம் விலை குறையும், மக்கள் அனைவரும் வாங்கும் தன்மை உருவாகும்'' என்கிறார்கள்.
___________________
குழந்தைகளைக் குறிவைக்கும் பெண் திருடர்கள்! அதிர்ச்சியில் பெற்றோர்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/gold2-2026-01-12-16-39-30.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் ஜனவரி 3-ஆம் தேதி திங்கள்கிழமை மதியம், தொண்டி செல்லும் ஒரு தனியார் பேருந்து வந்து நிற்க, பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அந்த பேருந்தில் ஏற முண்டியடித்த னர். பயணிகள் இறங்கியதால் அந்த இடத்தில் சிறிய கூட்டம் நின்றது. அந்தப் பேருந்தில் முத்துக்குடா செல்ல ராஜியம் மாள் என்பவர் தனது இரண்டரை வயது பேத்தி அபியாவை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு நின்றபோது பின்னால் வந்துநின்ற ஒரு பெண் சிறுமி அபியா கழுத்தில் கிடந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு பேருந்து ஏறாமல் நகர்ந்து சென்றுவிடுகிறார். அந்த பெண் கூடவே இன்னொரு பெண்ணும் சென்றுவிடுகிறார்.
நீண்ட நேரத்திற்குப் பிறகே பேத்தி கழுத்தில் அணிந் திருந்த தங்கச் சங்கிலியைக் காணாமல் பதறிய ராஜியம்மாள் அறந்தாங்கி காவல்நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார். குழந்தை கழுத்தில் சங்கிலி அறுக்கும் காட்சி தனியார் பேருந்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளதை வைத்து க்ரைம் பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜனவரி 1-ஆம் தேதி ஆவுடையார்கோயில் அருகே விளானூர் கிராமத்தில் ஒரு குழந்தையின் நகையைப் பறிக்க முயன்ற பெண்ணை பொதுமக்களே பிடித்து ஆவுடையார் கோயில் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காவல் நிலையம் அழைத்துச்சென்று நீண்ட நேரம் நடத்திய விசாரணையில் எந்த தகவலையும் சொல்லாத பெண், க்ரைம் பிரிவு போலீசார் வந்து விசாரித்த பிறகுதான், அவர் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், திருவாசல் மேலத்தெரு காளிதாஸ் என்பவரின் மனைவி ஈஸ்வரி என்பது தெரியவந்தது. புகார் கள் ஏதுமில்லாததால் குழந்தையிடம் நகை பறிக்கமுயன்ற பெண்ணை விசாரணைக்குப் பிறகு உறவினர்களை வரவைத்து போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இப்படி குழந்தைகள் அணிந்துள்ள நகைகளை, குறிவைத்து திருட ஏராளமான பெண்கள் களமிறங்கி யுள்ளனர். பெற்றோரே உஷார்!
-செம்பருத்தி
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us