வேதாரண்யம் கடற் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு கள் மூலம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும், அங்கிருந்து தங்கக்கட்டிகள் கடத்தி வருவதும் தொடர்கதையாக இருந்துவருகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பெட்டிகள் கடலில் கரை ஒதுங்கியிருப் பதை மீனவர்களின் உதவி யோடு கைப்பற்றியிருக் கின்றனர் கடலோர காவல் படையினர்.

cc

கடந்த 24-ஆம் தேதி வேளாங்கண்ணி அருகில் உள்ள செருதூர் கடற்கரை யோரம் மிதந்து வந்த மரப்பெட்டியை கண்ட மீனவர்கள், கடலோர காவல் படையினருக்கு தகவல் கூறி கைப்பற்றியுள்ளனர். அந்தப் பெட்டியில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ ஹெராயின் பவுடர் இருந்த தைக் கண்டு அதிர்ச்சியடைந் துள்ளனர். அந்த ஹெராயின் எங்கிருந்து வந்தது, யாரால் கடத்தப்பட்டது என்பது குறித்தான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வேதாரண்யம் அருகில் உள்ள வேட்டைக்காரன் இருப்பு சல்லிக்குளம் கடற்பகுதியில் மீண்டும் ஒரு மரப்பெட்டி மிதந்து கரை ஒதுங்கியதைக் கண்ட மீனவர்கள், கடலோர காவல் படையிடம் கூற, அந்தப் பெட்டியை கைப்பற்றி திறந்து பார்த்து அதிர்ந்து போயிருக் கிறார்கள். முதலில் கைப்பற்றப் பட்ட பெட்டியை போலவே அடுக்கடுக்கான உள்ளறைகள் கொண்ட பெட்டியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் இருந்துள்ளது.

cc

Advertisment

இது குறித்து நம்மிடம் பேசிய மீனவர்கள்,’""சில நாட் களுக்கு முன்பு சுமார் 175 கோடி ரூபாய் மதிப்புடைய 75 கிலோ ஹெராயின் மற்றும் மெதம் பிடமைன் எனும் போதைப் பொருட்கள் கடத்திய சிலரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசா ரணை நடத்தியதில், சர்வதேச கடற்பகுதியில் இலங்கை படகிற்கு மாற்றும்போது கடற்படை வந்ததால் அவர்கள் கையில் சிக்காமல் கடலில் வீசப்பட்ட பெட்டிதான் தற்போது மிதந்து வருகிறது'' என்கிறார்கள்.

வேதாரண்யம் பகுதியில் நீண்ட நாட்களாக இருக்கும் விவரம் அறிந்த காக்கி ஒருவர், ’’""ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு 7 கடலோர மாவட்டங் களில் கடலோர பாதுகாப்பு குழுமத்தை 1991-ல் உருவாக் கினார் அன்றைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா. இலங்கை உள்ளிட்ட நாடு களில் இருந்து கடத்தல்காரர் களும், சமூக விரோதிகளும் கடல்மார்க்கமாக நாகை மாவட்டம் கோடியக்கரை யின் காட்டுப்பகுதியை பயன் படுத்தி தமிழகத்திற்குள் எளி தாக நுழைந்துவிடுகிறார்கள் என்பதை உறுதிசெய்து மேலும் பாதுகாப்பை பலப்படுத்தி னார்.

அந்தவகையில் நாகை கடலோர பகுதிகளில் 8 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்கீழ் 19 சோதனைச் சாவடிகள் செயல் பட்டுவந்தன. நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 அதி நவீன ரோந்து விசைப்படகு களும், தண்ணீரிலும் மணலிலும் சீறிக்கொண்டு போகக்கூடிய 4 இருசக்கர வாகனங்களும், 2 நான்கு சக்கர வாகனங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

Advertisment

தோப்புத்துறையிலும், கோடியக்கரையிலும் விமானப்படை கண்காணிப்புத் தளத்தையும், கடற்படை கண்காணிப்புத்தளத்தையும் அமைத்தார். ஆனால் இன்று அதன் நிலைமை தலைகீழாக மாறியிருப்பதோடு, அத்தனை சோதனைச்சாவடிகளும் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. நான்கு ரோந்துப் படகுகளையும் ஓரங்கட்டி போட்டுவிட்டனர். கடற்படை பாதுகாப்புத் தளமும், விமானத்தளமும் பெயருக்கே செயல்பட்டு வருகின்றன.

கடலோரத்தில் பாது காப்பு குறைவு என்பதை சாதகமாக்கிக் கொண்ட கடத்தல்காரர்கள், சில காவல் துறையினரை கையில் போட்டுக்கொண்டு மீண்டும் சுதந்திரமாக கடத்தல் வேட் டையில் ஈடுபட்டுவருகின்றனர். தங்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை மிக எளிதாக கடத்திச் செல்கின்ற னர். மீனவர்கள் போர்வை யிலும் சிலர் கடத்தல் தொழிலைச் செய்யத் துவங்கி விட்டனர். ஒருசில வாரங் களுக்கு முன்பு இரண்டு டாரஸ் லாரியில் கஞ்சா கடத்தி வந்ததை பின்தொடர்ந்து வந்த சென்னை போலீஸார் வேதா ரண்யம் பகுதியில் பிடித்தனர். இங்கு கடத்தல் ஜரூராக நடப்பது இங்குள்ள காக்கிகள் அனைவருக்குமே தெரியும்; ஆனாலும் எந்த நடவடிக் கையும் பெருசா எடுக்கமாட் டாங்க''’என்கிறார்

புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், ""கோடியக்கரையில் இருந்து 20 நிமிடத்தில் இலங்கை எல்லைக்கு சென்று விடலாம். அது கடத்தல்காரர் களுக்கு சாதகமாக இருக்கும். இருதரப்பும் ஒரு இடத்தை முடிவுசெய்து 10 நிமிடத்தில் சரக்கை கைமாற்றிவிடுவார்கள். மீனவர்கள் பெரும்பகுதி இந்தத் தொழிலைச் செய்யமாட்டாங்க. ஆனால் மீனவர்களின் போர்வையில் இந்தத் தொழில் நடப்பது உண்மை. மீனவர் களுக்கும் கடத்தல்காரர்களுக் கும் நடுக்கடலில் அடிக்கடி அடிதடிகள் நடந்துகிட்டுதான் இருக்கின்றன'' என்கிறார்.

மரப்பெட்டியை கைப் பற்றி விசாரித்துவரும் சுங்கத் துறை அதிகாரிகளோ, ""பிடிபட் டது ஹெராயின் கிடையாது. ஹெராயின் போன்ற வேறு பொருள். கடத்தல்காரர்கள் வேறு எதற்காகவோ இதை கடலில் வீசியுள்ளனர். கடத்தலுக்காக கடலோர காவல்படையை திசை திருப்பி கடத்தல் செய்தார்களா என்பது புரியவில்லை''’ என் கிறார்கள்.

அமைச்சரும், வேதாரண் யம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியனிடம் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நாம் கேட்டபோது, ""முதலமைச்சர் வரவிருக்கிறார். அதற்கான வேலைகள் நடக்கின்றன, பிறகு பேசுங்கள்''’எனக்கூறி போனை துண்டித்துவிட்டார்.

""ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட கடலோர பாதுகாப்பு மையத்தினை, அவர் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசே முடமாக்கிவிட்டது, அதனாலேயே கடத்தல் ஜரூராக நடக்கிறது''’என்று கவலை கொள்கிறார்கள் நாகை மக்கள்.

-க.செல்வகுமார்