Advertisment

கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்! -கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!

cc

லங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இரு நாட்டுப் பாதுகாப்பையும் கேள்விக்குறி யாக்கிவருகிறது.

2009ஆம் ஆண்டுக்கு முன்பு வான்வழியாக நடந்துவந்த கடத்தல்கள், இப்போது கடல்வழியாக நடக்கிறது என்கிறார்கள். விடுதலைப்புலிகள் இருந்தவரை கடல்வழிக் கடத்தல் நடக்காதவாறு அவர்கள் பாதுகாப்பாக இருந்த நிலையில், இப்போது நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்றும் கவலைப்படுகிறார்கள் விபரமறிந்த வர்கள்.

இந்தியாவில் குஜராத் போன்ற வட மாநிலங்களிலிருந்து போதைப் பவுடர்களை கண்டெய்னர் போன்ற பெரிய வாகனங்களில் எடுத்து வருகின்றனர். அதிலும் பல்வேறு பொருட்களை அடுக்கி அதற்குள் போதை பொருட்களை மறைத்து வைத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வருகின்றனர். பின்னர் இங்கிருந்து கிழக்கு கடற்கரைக்கு கொண்டு போய், பைபர் படகுகள் மூலம் இலங்கைக்கு அவற்றைக் கடத்துகிறார் களாம்.

Advertism

cs

இதேபோல ஆந்திராவில் உற்பத்தியாகும் கஞ்சா இலைகளை பண்டல் பண்டல்களாகக் கட்டி, காற்று மற்றும் தண்ணீர் புகாமல், டேப் ஒட்டி லாரி, கார் போன்ற வாகனங்களில் ரகசிய அறைகள் அமைத்து, அவற்றை திருச்சி வழியாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் கடற்கரைக்கு கொண்டு வந்து அங்குள்ள பண்ணை வீடுகள் மற்றும் இறால் பண்ணைகளில் பதுக்கி வைத்துவிடுகின்றன ராம். அவர்களுக்கு சிக்னல் கிடைத்த பிறகு, பைபர் படகுகள் மூலம் கடல் வழியாக கஞ்சா பண்டல்களை இலங்கைக்கு கடத்துவதும் வழக்கமாக உள்ளதாம்.

ஒவ்வொரு மாதமும் சுமார் 15 போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அரங் கேறுகிறதாம். கஞ்சா கடத்தல் மட்டுமின்றி மாணவர், இளைஞர்களைக் குறிவைத்து உள்ளூர் விற்பனைகளும் நடப்பதால் சட்டம் ஒழுங்குச் சீரழிவும், விபத்துகளும் அதிகமாகிவிட்டன என்கிறார்கள். இளை ஞர்களே கஞ்சா வியாபாரிகளாக மாறிவரும் நிலையில், அவர்களின் ரகசிய வார்த்தைகள் போலீசாரையே திடுக்கிட வைக்கிறது. கஞ்சா விற்பனை இளைஞர்களை பிடிக்கும்போது அவர்கள் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தியாக "கடிச்சிருச்சு' என்று அனுப்புகின்றனர். அதன் அர்த்தம் போலீஸ் பிடிச்சிருச்சு என்பதாம். அதனால் எதிர் முனையில் உள்ளவர்கள் அலர்ட் ஆகின்றனர்.

இந்தியாவிலிருந்து கஞ்சா போன்ற போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்திச் செல்லும் படகுகளில், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுகிறது. போதைப் பொருளுக்கு பண்டமாற்று முறையாக தங்கம் வியாபாரம் நடக்கிறது.

இந்த நிலையில்தான் அண்மையில் ஆந்திராவிலிருந்து ஒரு காரில் கஞ்சா பண்டல்கள் ஏற்றப்பட்டுள்ளது. அந்த கார் திருச்சி வந்த பிறகு புதுக்கோட்டை வழியாக போகிறார்களா அல்லது தஞ்சாவூர் வழியாக கடற்கரை கிராமங்களுக்கு போகிறார்களா என்பது தெரியவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளதால் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை போலீசார் அலர்ட்டாக இருந்தனர்.

தஞ்சை டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், எஸ்.பி. ஆஷிஸ்ராவத் ஆகியோர் அமைத்த தனிப்படை போலீசார் தயாராக இருந்த நிலையில்... கரந்தை கோடியம்மன் கோயில் தெரு வழியாக பதிவு எண் இல்லாமல் வந்த அந்த குறிப்பிட்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரின் பின்பக்க இருக்கைக்கு கீழே பெட்டி அமைத்து அதில் கஞ்சா பண்டல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆந்திரா வில் இருந்து கிடைத்த தகவல் சரிதான். 103 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட் டிருக்கிறது என்கிற தகவலை சம்பந்தப் பட்ட போலீசார் உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.

கஞ்சா பண்டல்கள், கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் காரிலிருந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, போத்தம்பட்டி சோனி (எ) ரவிக்குமார், இடையாத்திமங்கலம் வீரப்பன் ஆகி யோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ”"ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட இந்த கஞ்சாவை மணமேல்குடியைச் சேர்ந்த ஒருவர் வழிகாட்டுதல்படி கொண்டுவருகிறோம். அவர் சொல்லும் இடத்தில் இறக்கி வைக்க வேண்டும். அத்துடன் எங்கள் வேலை முடிஞ்சிடும். தஞ்சை வந்த பிறகு எங்கே வரணும்னு சொல்றதா சொன்னாங்க. ஆனால் அதற்குள் பிடிபட்டதால் எங்கே இறக்குறதுனு தெரியல''” என்றனர்.

மேலும் ”"எங்களைத் தொடர்ந்து ஒரு கும்பல் பாலோ பண்ணிவரும். நாங்க பிடிபட்டதும் அவங்க தப்பிப் போயிருப்பாங்க''’என்றும் கூறியுள்ளனர். இதே போல அடிக்கடி பண்டல் பண்டலாக கஞ்சா பிடிபட்டாலும்கூட, கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து கடத்தல்கள் நடந்துகொண்டுதான் உள்ளது.

"சமீபகாலமாக தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கடத்தல்கள் அதிகரித்துவருவதால் அதனைத் தடுக்க போலீசார் தடுமாறிவருகின்றனர். மேலும் போலீசாரின் பற்றாக்குறையால் தடுப்பு நடவடிக்கைகள் குறைந்துவருகிறது' என்கின்றனர் காவல்துறையினர்.

கடத்தல்களுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

nkn281224
இதையும் படியுங்கள்
Subscribe