"திரைகடலோடியும் திரவியம் தேடு'’ என்பது முன்னோர் வாக்கு. திரைகடல் தாண்டி திரவியம் தேடும்போது... அதை முறையாகச் செய்யவேண்டும். போலி ஏஜெண்டுகளை நம்பிச் செல்வதோ, டூரிஸ்ட் விசாவில் செல்வதோ நம்மை இக்கட்டுக்கு ஆளாக்கும். முறையான வழியில் வெளிநாடுகளுக்குச் செல்லாததால், அந்நாடுகளில் கொத்தடிமை களாகவும் சிறையிலும் இருப்போர் ஆயிரக்கணக்கான பேர்.

ff

சென்னையைச் சேர்ந்த மூன்று பெண்கள் பிழைப்புக்காக டூரிஸ்ட் விசா மூலமாக போலி ஏஜெண்டுகளை நம்பி பெஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்காகச் சென்று கொத்தடிமையாக்கப்பட்டு, மீண்டும் சொந்த நாட்டிற்குத் திரும்பிய கதையை, “"வெளிநாட்டில் கொத்தடிமைகளாகும் தமிழர்கள்- மீட்கப்பட்டவர்கள் கண்ணீர்'’ என்ற தலைப்பில் 2021, ஜூலை 28-30 நக்கீரன் இதழ் விவரித்திருந்தது. இதேபோன்று மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் டூரிஸ்ட் விசா மூலமாக போலி ஏஜெண்டுகளை நம்பி துபாய் நாட்டிற்கு சென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

"என் கணவர் இறந்துட்டார். என் பசங்கதான் என் உலகம். இப்போ என் இளைய மகனைக் கொன்னுட்டாங்க. என் புள்ள முகத்தைக்கூட பாக்கமுடியல'' என்று அவர் கதறியது கண்கலங்க வைத்தது. என்ன நடந்தது என்பதை விவரிக்கக்கூட ffதெம்பில்லாதவராக இருந்தார் பிரபாகரனின் தாய் செல்வி.

Advertisment

பிரபாகரனின் அண்ணன் பிரகாஷ்ராஜ் நடந்ததை நம்மிடம் விவரித்தார், "எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பரணி கடை நடத்திவருகிறார். அவர்தான் எங்களிடம் எனது தம்பி துபாயில் நிறுவனம் நடத்தி வருகிறான், அவனிடம் பிரபாகரனை அனுப்புங்க. மாதம் 30,000 ரூபாய் சம்பளம். 8 மணி நேரம் வேலை, ஓவர்டைம் வேலை பார்த்தால் அதற்குத் தனி வருமானம், தங்கும் இடம், உணவு எல்லாம் கொடுப்போம் என்று ஆசை வார்த்தை கூறினார். வெளிநாட்டிற்கு அனுப்புமளவுக்கு எங்களிடம் வசதி இல்லை என்றார் எங்கம்மா. அவரோ, "எல்லாம் நான் பார்த்துக்கிறேன்' என்றார்.

எல்லாம் பேச்சுதான். நாங்கள்தான் 1,50,000 வட்டிக்கு வாங்கி எனது தம்பியை கடந்த 2019 செப் டம்பர் 17-ஆம் தேதி அனுப்பி வைத்தோம். பரணியின் தம்பி ராஜா என்பவரின் நிறுவனத் திற்கு வேலைக்குப் போனான். இங்க சொன்னது எல்லாமே பொய் சார். வேலை பிழிஞ்சு எடுத்திருக்காங்க, சாப்பாடு போடல, வெறும் 15,000 ரூபாய்தான் சம்பளம். அதுவும் கடைசி 4 மாசம் கொடுக்கல.

ஒருநாள் தம்பி எனக்கு போன் பண்ணி, "இங்க எல் லாமே தப்பா இருக்கு. எனக்கு சாப்பாடு போடமாட்றாங்க, என்ன கொடுமைப்படுத்து றாங்க'ன்னு சொன்னான். "நீ உடனே கௌம்பி வாடா, நாம இங்க எதாவது தொழில் செய்து பிழைச்சுக்கலாம்' என்று கூறினேன். "என்னால வரமுடியாது என்னுடைய பாஸ்போர்ட், விசா எல் லாமே ஓனர் ராஜா வாங்கி வைச்சிருக்கார். அவரு தர மாட்டார்'னு சொன்னான்.

Advertisment

"கடைசியா அவன் பேசி னதுக்கு அப்புறம் அவன் கிட்ட இருந்து எந்த தகவலும் வரல, போன் சுவிட்ச் ஆப். அவன் ஓனருக்கு கால் பண்ணி பேசுனா அவரும் சரியாய் தகவல் கொடுக்கல. இந்த நிலையிலதான் ஓனர் ராஜா, மே மாதம் 21-ஆம் தேதி எனக்கு போன் பண்ணி உன் தம்பி தலைமறைவாயிட் டான்... எங்க போனான்னு தெரியலைன்னு சொன்னாரு.

அவனுடைய உடைமை எல்லாம் உங்ககிட்டதான் இருக்கு. எப்படி ஊரு பேரு மொழி தெரியாத இடத்துல அவன் ஓடிப் போவான்னு கேட்டோம். அதற்கு ராஜா பதிலே சொல்லல. ராஜா வின் அண்ணன் பரணிகிட்ட பேசுனா அவரும் எங்களை மதிக்கல. இப்படியே 4 மாசம் போய்டுச்சு. இப்போ துபாய்ல அநாதைப் பிணம் இருக்கும் இடத்தில என் தம்பி உடல் இருக்குன்னு சொல்றாங்க. அவன் எப்போ செத்தான்னுகூட தெரியல.

தினமும் அவன் இன்னைக்கி வருவான்... நாளைக்கி வருவான்னு நம்பி வீட்டுக் கதவை பாத்துக்கிட்டு இருந்த எங்களுக்கு அவன் செத்துட்டானு சொன்னா எப்படியிருக்கும்... நம்பித் தானே வேலைக்கு அனுப்பினோம், வெளிநாடு போய் அவன் சம்பாதிச்சது, சாவை மட்டும்தான். என் தம்பி உடலை இப்போ எங்க ஊருக்குக் கொண்டுவரப் போராடுறோம். எங்க ஒடம்புல தெம் பில்லை. தமிழக முதல்வரும் இந்திய அரசும் உடனே தலையிட்டு எனது தம்பி யின் உடலை சொந்த நாட்டிற்குக் கொண்டுவர முயற்சி எடுத்தால் இறுதிச் சடங்காவது செய்து புதைப்போம். அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளி களை அரசாங்கம் விடக்கூடாது. இப்படி வெளிநாட்டிற்குப் போய் உயிரைவிடுறது பிரபாகரன்தான் கடைசியா இருக்கணும்'' என்றார் பரிதாபமாய்.

ff

இதுகுறித்து சமூகச் செயற்பாட்டா ளர் கன்யாபாபுவிடம் விசாரித்தபோது, “"இதுபோன்று வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்று கொத்தடிமையாக்கப் படும் தொழிலாளர்களை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டுவருகிறோம். பிரபா கரனை 4 மாதங்களாகக் காணவில்லை என்று அவர் அண் ணன் என்னை அழைத்தார். துபாயில் வசிக்கும் நமது தமிழ்ச் சொந்தங் களின் உதவியால் பல இடங்களில் தேடி னோம். பிறகு மனநல மருத்துவமனை மற்றும் ஆதரவற்ற சடலங்கள் இருக்கும் அறையில் சோதனை நடத்தச் சொன் னோம். அவர்களும் சோதனை செய்து ஒரு ஆதரவற்ற சடலம் இருப்பதாகக் கூறினர். பிறகு ஓனர் ராஜாவை வைத்து அந்த சடலம் பிரபா கரனின் சடலம் என்று உறுதிசெய் தோம். தற்போது பிரபாகரின் உடலைக் கொண்டு வரவேண்டும் என்றால் துபாய் அரசாங்கம் பிரபாகரனின் உடலை புகைப்படம் அல்லது காணொலி மூலமாக அவரின் தாய்க்கு அனுப்பவேண்டும். இங்கு இவர்கள் அது பிரபாகர்தான் என உறுதி செய்யவேண்டும். ஆனால் அதை துபாய் அரசாங்கம் செய்ய மறுக்கிறது. அத்தோடு, பிரபாகரன் காணாமல் போய் 4 மாதமாகிறது, 4 மாதம் முன்பே பிரபாகரன் இறந்திருந் தால் தற்போது அவரின் உடல் அழுகிய நிலையில் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. துபாய் அரசாங்கம் தற்போது உடற்கூறாய்வு செய்வதாகக் கூறுகிறார்கள். அப்படிச் செய்தால் இது கொலையா தற்கொலையா என்று தெரியும். அதன்படி மேல்விசாரணையும் செய்வோம் என்றார்கள்.

எங்களுக்கு இதில் ஓனர் ராஜாமீது சந்தேகம் இருக்கிறது. பிரபாகரன் காணவில்லை என்று இரண்டு நாள் கழித்து வீட்டிற்குத் தகவல் கொடுக்கிறார். ஆனால், காவல் நிலயத்திலோ இரண்டு மாதம் கழித்து அப்ஸ்காண்ட் என்று புகார் கொடுக்கிறார். அப்ஸ்காண்ட் என்ற வார்த்தையை ஏன் அவர் பயன்படுத்தவேண்டும். அதே நேரத்தில் ராஜாவின் தம்பி பரணி முன்னுக்குப் பின்னாக காவல் நிலையத்தில் கூறுகிறார். எனவே காவல்துறை உடனடியாக தீரவிசாரித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண் டும். பிரபாகரின் உடலை மீட்டுக் கொண்டுவர நாங்களும் உரிய முயற்சிகள் எடுக்கிறோம்.

வெளிநாடுகளுக்கு வேலைக் குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய அரசாங்கம் எவ்வளவோ விழிப்புணர்வு கொடுக்கிறார்கள். வேலை தேடிச் செல்லும் இந்தியர் கள் போலி ஏஜென்டுகள் மற்றும் டூரிஸ்ட் விசாக்கள் மூலமாக செல்வது சட்டப்படி குற்றம். அது மட்டுமின்றி டூரிஸ்ட் விசா காலம் முடிந்ததும் கொத்தடிமையாக்கப் படும் சூழலும் அதிக அளவில் அங்கு நிகழும். அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி வெளிநாட் டிற்குச் சென்றால் மட்டுமே பிற் காலத்தில் எந்த பிரச்சினை என் றாலும் நாம் அதைச் சமாளிக்க முடியும்''’என்றார் அக்கறையாக.

இந்நிலையில் பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பின் நவம்பர் 5-ஆம் தேதி அதிகாலை பிரபாகரின் உடல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

துபாய் அரசாங்கமோ, உடற்கூறாய்வுக்குப் பின் அவர் தூக்கில் தொங்கி இறந்திருக்கிறார் என்பதை உறுதிசெய்துள்ளது. அதேசமயம் அவரைத் தூக்கை நோக்கி நெருக்கியவர்களை என்ன செய்யப்போகிறது என்பது குறித்து துபாய் அரசாங்கம் எதுவும் தெரிவிக்கவில்லை.