Advertisment

இறையன்பு கல்வி வழிகாட்டல்! கல்விமிகு நகராக உருவெடுக்கும் கண்ணகி நகர்!

ss

சென்னை நகரின் பல பகுதிகளிலும் தலைமுறை தலைமுறையாக சாலையோரத்தில் குடிசைகளில் வாழ்ந்து வந்த மக்களை, சாலை விரிவாக்கப் பணிகள், சென்னை மாநகரை அழகுபடுத்துவது மற்றும் தொழிற்பேட்டை களின் வளர்ச்சி போன்ற பல காரணங்களுக் காக அப்புறப்படுத்தி, புறநகர்ப் பகுதிகளில் வலுக்கட்டாயமாகக் குடியமர்த்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள், உடலுழைப்பை நம்பிவாழும் தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களென விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

rr

ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்விடமாகக் கருதப்படும் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் குடியிருப்புப் பகுதி மக்களின் தினசரி வாழ்க்கை யில் பல்வேறு வியத்தகு மாற்றங்கள் சமீபகாலமாக நடந்துவருகின்றன. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால் அனைவரும், டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவராகவுள்ள எ.மாரிசாமி என்ற எளிய இளைஞரையே கைகாட்டுகிறார்கள். இந்த சங்கத்தின் செயலாளர் நா. விஜயலட்சுமி, பொருளாளர் இரா.கார்த்திகேயன் ஆகியோ ர

சென்னை நகரின் பல பகுதிகளிலும் தலைமுறை தலைமுறையாக சாலையோரத்தில் குடிசைகளில் வாழ்ந்து வந்த மக்களை, சாலை விரிவாக்கப் பணிகள், சென்னை மாநகரை அழகுபடுத்துவது மற்றும் தொழிற்பேட்டை களின் வளர்ச்சி போன்ற பல காரணங்களுக் காக அப்புறப்படுத்தி, புறநகர்ப் பகுதிகளில் வலுக்கட்டாயமாகக் குடியமர்த்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள், உடலுழைப்பை நம்பிவாழும் தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களென விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

rr

ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்விடமாகக் கருதப்படும் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் குடியிருப்புப் பகுதி மக்களின் தினசரி வாழ்க்கை யில் பல்வேறு வியத்தகு மாற்றங்கள் சமீபகாலமாக நடந்துவருகின்றன. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால் அனைவரும், டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவராகவுள்ள எ.மாரிசாமி என்ற எளிய இளைஞரையே கைகாட்டுகிறார்கள். இந்த சங்கத்தின் செயலாளர் நா. விஜயலட்சுமி, பொருளாளர் இரா.கார்த்திகேயன் ஆகியோ ரும் மாரிச்சாமியுடன் இணைந்து, இப் பகுதிவாழ் இளைஞர்களின், மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பணியைத் திறம்பட செய்துவருகிறார்கள்.

இதுகுறித்து மாரிச்சாமியிடம் கேட்டபோது, "தற்போது தலைமைச் செயலாளராகவுள்ள வெ.இறையன்பு அய்யாவின் முன்னெடுப்புதான் அனைத்து மாற்றங்களையும் இங்கே சாத்தியப்படுத்தி வருகிறது. அவரது வழி காட்டுதல் மற்றும் ஆலோசனைகளின்படி, 2016ஆம் ஆண்டு முதலே இப்பகுதி மாணவ- மாணவிகளின் கல்வி வளர்ச்சியில் எங்கள் சங்கம் தனிக்கவனம் செலுத்திவருகிறது. எங்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பக்கபலமாக இருக்கிறார்கள்.

ee

Advertisment

இதுவரை 181 ஏழை மாணவர்களை, அவர்கள் விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடப்பிரிவில் சேர்த்து, அவர்களின் படிப்புக்கான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறோம். கல்லூரிப் படிப்பில் தேர்ச்சியானவர்கள், அரசுப் பணிகளில் சேர்வதற்கான விழிப்புணர்வையும், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக்கான பயிற்சிகளையும் சிறப்பாக வழங்கிவருகிறோம். இந்த ஆண்டில், தலைமைச் செயலாளர் மூலம் 63 மாண வர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளார்கள். அவர்களுக்கு பசடநஈ ஏதஞமட 4 முதல் ஏதஞமட 1 வரை தேர்வுகளுக்காக, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடப் புத்தகங்களை அவர் வழங்கியுள்ளார்.

எங்கள் சங்கத்தின் மூலம் மாலை நேரப் பயிற்சி வகுப்புகள், யோகா, விளையாட்டு, தற்காப்பு, பண்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பல மாணவர்கள் விளையாட்டு, தற்காப்புப் போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளைப் பெற்றுவருகிறார்கள். இந்தச் செயல்பாடுகளால், மாணவர்களின் கல்வி இடைநிற்றல் தவிர்க்கப்படுவதுடன், குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படுவதும் தடுக்கப்படுகிறது. இளம் வயது திருமணங்களும் பெருமளவில் குறைந்து வருகிறது. சுற்றுப்புறத் தூய்மை, நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்த்தல் போன்ற பணிகளை மாணவர்கள் செய்துவருகிறார்கள்.rr இப்பகுதி மக்களின் உடல்நலத்தைப் பேணுவதற்காக மருத்துவ முகாம்களும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.

அப்துல் கலாம் மக்கள் நலச் சங்கத்தைப் போலவே மேலும் பல சமூக நலச் சங்கங்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் போக்குவரத்துக் காவலர்களுடன் இணைந்து, அடிக்கடி விபத்துகள் நடக்கக்கூடிய ஓ.எம்.ஆர். சாலை முழுவதும், சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு தரும் பணியில் ஈடுபடுகிறார்கள். தாம்பரம் மாநகர காவல் ஆணை யர் அமல்ராஜ் ஐ.பி.எஸ்., கூடுதல் ஆணையர் காமினி ஐ.பி.எஸ்., துணை ஆணையர்கள் ஜோஸ் தங்கையா, சிபி சக்ரவர்த்தி மற்றும் உதவி ஆணையர் ஆர்.ரியாசுதீன், செம்மஞ்சேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் வே.சீனிவாசன், எஸ்.ஐ. செல்வி கோஷியா, சாலைப் போக்குவரத்து எஸ்.ஐ. கருணாநிதி மற்றும் கண்ணகி நகர் காவல்துறையினர் இணைந்து, ஓ.எம்.ஆர். சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களின் ஆதரவுடன், சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் குற்றத்தடுப்பு சீர்திருத்த நிகழ்ச்சிகளை நடத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு தருவதோடு, அச் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை முறை யையும் செம்மைப்படுத்துகிறார்கள்.

மேலும், கண்ணகி நகர்ப் பகுதிவாழ் இளைஞர்களுக்கு தனித்திறன் மேம்பாட்டுத் தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்கான தொடக்ககட்டப் பணிகளை, சென்னைப் பெருநகர மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வழிகாட்ட லுடன் டாக்டர் அப்துல்கலாம் சங்கம் செய்துவருகிறது. சென்னை நகரை அழகுபடுத்தும், விரிவாக்கும் முயற்சிக்காக, சென்னையின் பூர்வகுடி மக்கள் புறநகர்ப் பகுதிகளுக்கு துரத்தப்படும்போது, அவர்களின் வீடு, அன்றாடம் செய்துவந்த பணிகள், பிள்ளைகளின் கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்தும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இப்படியான பாதிப்புகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்து, அவர்களின் எதிர்காலத்தை கல்வியின் உதவியால் தூக்கிநிறுத்தும் அரும்பணி யில், தலைமைச்செயலாளர் இறையன்புவின் வழிகாட்டலோடு ஈடுபட்டுவரும் டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் மக்கள் நலச் சங்கத்தின் செயல்பாடுகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

-சுந்தர் சிவலிங்கம்

nkn051022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe