தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் கீழ், இராணிப்பேட்டை நகரில் செயல்படுகிறது கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையம். 1932-ல் தொடங்கப்பட்ட இந்த நிலையம் 120 ஏக்கர் பரப்பளவிலுள்ளது. ஆடு, மாடு, கோழி, வாத்து, நாய்களுக்கான நோய் களுக்கு தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்து தமிழ்நாடு முழு வதும் அனுப்புகிறது. ஆந் திரா, கேரளா, கர்நாடகா வைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களுக்கு இங்கு பயிற்சியும் வழங்கப்படு கிறது. இங்கு சுமார் 200 பேர் பணி யாற்றுகின்றனர், அதில் 40 கால்நடை மருத்துவர்களும் அடக்கம். !
இந்த நிறுவனத்தில் கால் நடை மருத்துவர்களை தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் பணியில் அமர்த்தி வந்தது அரசு. அப்படித் தான் அமர்த்தவேண்டும் என்பது இந்திய அரசின் கால்நடை கவுன்சி லின் விதிமுறை. ஆனால் தற்போது ஆடு, நாய்களுக்கான மருத்துவப் பிரிவு ஏ.ஓ.வாக மருத்துவரல்லாத ஒருவரை நியமித்து அரசாணை வெளி வந்துள்ளது
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் கீழ், இராணிப்பேட்டை நகரில் செயல்படுகிறது கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையம். 1932-ல் தொடங்கப்பட்ட இந்த நிலையம் 120 ஏக்கர் பரப்பளவிலுள்ளது. ஆடு, மாடு, கோழி, வாத்து, நாய்களுக்கான நோய் களுக்கு தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்து தமிழ்நாடு முழு வதும் அனுப்புகிறது. ஆந் திரா, கேரளா, கர்நாடகா வைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களுக்கு இங்கு பயிற்சியும் வழங்கப்படு கிறது. இங்கு சுமார் 200 பேர் பணி யாற்றுகின்றனர், அதில் 40 கால்நடை மருத்துவர்களும் அடக்கம். !
இந்த நிறுவனத்தில் கால் நடை மருத்துவர்களை தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் பணியில் அமர்த்தி வந்தது அரசு. அப்படித் தான் அமர்த்தவேண்டும் என்பது இந்திய அரசின் கால்நடை கவுன்சி லின் விதிமுறை. ஆனால் தற்போது ஆடு, நாய்களுக்கான மருத்துவப் பிரிவு ஏ.ஓ.வாக மருத்துவரல்லாத ஒருவரை நியமித்து அரசாணை வெளி வந்துள்ளது. இதற்கெதிராக கால்நடை மருத்துவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.!
இந்த நிலையத்தில் அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் பி.எஸ்.சி பயோகெமிஸ்ட்ரி படித்துள்ளதாக சான்றிதழ்கள் உள்ளன. சில பதவி உயர்வுகள் மூலமாக உதவி வேதியர் பதவிக்கு வந்தார். இந்த பதவிக்கே அவர் பல விதிமுறைகளை மீறித்தான் பதவி உயர்வில் வந்துள்ளார். தொலைதூரக் கல்வியில் 2015-ல் பி.எச்டி முடித்ததாக சான்றிதழ் தந்துள்ளார். 2016-ல் அப்போதைய அ.தி.மு.க. அரசாங்கம், ஆராய்ச்சி அலுவலர் பதவியில் கால்நடை மருத்துவரைத்தான் நியமிக்கவேண்டும் என்பதல்ல... பி.எச்.டி, எம்.எஸ்.சி பயோகெமிஸ்ட்ரி படித்தவர்களையும் நியமிக்கலாமென விதிகளில் திருத்தம் கொண்டுவந்தது. “!
இதுதொடர்பாக அப்போதே இங்குள்ள கால்நடை மருத்துவர்கள் அனைவரும் கேள்வி எழுப்பினர். அவர் அலுவலக நிர்வாகப் பணியாளர், அந்த பிரிவில் பணி உயர்வில் செல்வதை நாங்கள் கேள்வி எழுப்பப் போவதில்லை. பிரிவு மாறி, விதிகளை திருத்தி வருவதைத்தான் எதிர்த்தோம். இதனால் கடந்த 4 ஆண்டுகளாக அந்தப் பதவியில் அவரை நியமிக்கவில்லை. இந்நிலையில் திடீரென 2021, அக்டோபர் மாதம் ஆராய்ச்சி அலுவலராக பதவி உயர்வு தந்து அரசாணை வெளியிட்டுள்ளார்கள். !
வெங்கடாச்சலத்தை நியமிப்பது தொடர்பான அறிவிப்பு 21-10-2021-ல் துறை சார்பில் வெளியிடப்பட்டது. அவரோடு சேர்ந்து 10 பேர் சீனியாரிட்டி பட்டியலில் இருந்தனர். அதில் உள்ளவர்கள் மீது ஏதாவது புகார் இருந்தால் தெரிவிக்கலாமென கருத்துக்கூற இரண்டு மாதம் காலக்கெடு தரப்பட்டிருந்தது. அப்படி அறிவித்த அடுத்த நான்காவது நாள், அதாவது அக்டோபர் 25-ஆம் தேதி வெங்கடாஜலத்துக்கு பணிநியமன ஆணை வழங்கி உத்தரவிடப்பட்டது. அவர் நேர்மையான முறையில்தான் வருகிறார் என்றால் காலக்கெடு முடிவதற்குள் ஏன் அவசரம் அவசரமாக நியமிக்க வேண்டும்? கடந்த ஆட்சியில் பணத்துக்காக திருத்தப்பட்ட விதியை சரி செய்யுங்கள்” என இராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து மையத்திலுள்ள 25-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் மாவட்ட அமைச்சர் காந்தி, கால்நடைத்துறை உயரதிகாரி களை சந்தித்து மனு தந்துவிட்டு வந்துள்ளனர். !
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள உதவி ஆராய்ச்சி அலுவலர் மருத் துவர் கிஷோர்குமாரிடம் கேட்டபோது, "நாங்கள் ஐந்தரை ஆண்டுகள் பி.வி.எஸ்.சி. படித்துவிட்டு அதன்பின்னர் எம்.வி.எஸ்.சி., பி.எச்டி படித்துவிட்டு பணியில் இருக்கிறோம். மருத்துவ ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டு மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பணியில் இருக்கிறோம். மருந்துகள் உற்பத்தியென்பது மிக முக்கியமானது என்பதால்தான் மருத்துவர்களை அங்கே நியமிக்கவேண்டும் என் கிறது அகில இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில். தமிழ்நாடு கால்நடை கவுன்சில் தகுதியற்ற, ஆராய்ச்சிக்கு சம்பந்தமில்லாத படிப்பை படித்தவர்களை மருந்து ஆராய்ச்சி அலுவலராக நியமித்தால் என்ன அர்த்தம்? மருத்துவம் படித்த நாங்கள் அதுபற்றி எதுவும் தெரியாத ஒருவரிடம் எப்படி விளக்கமுடியும்? மருந்து உற்பத்தியில் ஏதாவது தவறு நடந்தால் அந்த படிப்பு படிக்காத ஒருவரால் எப்படி கண்டுபிடிக்கமுடியும்? இதனால் கால்நடைகள்தான் பாதிக்கப்படும் என்பதை குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்''’என்றார்.!
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் ஞானசேகரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “"பயொகெமிஸ்ட்ரியாக இருப்பவருக்கு பதவி உயர்வு வரிசை 11, 22, 33-ன் படி தரலாம் என்கிற அரசு விதிமுறைகளின் படிதான் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த விதிமுறை திருத்தம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். நீதிமன்றத் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார். !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் கவனம் எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துவருகிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.!
மாடுகளும் மற்ற விலங்குகளும் உயிரினம் தானே! அவற்றுக்கான தகுந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் நியமனங்களில் அலட்சியம் காட்டுவது ஆபத்தானது. !
!