ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்! EXCLUSIVE

ss

ருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான். ஆனால் அந்த இருவரது பிரிவு லட்சக் கணக்கானோரின் கவனத்தையும் நேரத்தையும் இழுக்கிறது. இருவர் குறித்து வெவ்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. எது உண்மை என்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பதும் மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தை இணைப்பதும்தான் நமது நோக்கம்.

ss

"இது கடினமான முடிவுதான்... ஆனால் தவிர்க்கமுடியவில்லை. இருவரின் நலன் கருதியும் இருவரை சார்ந்தவர்களின் நலன் கருதியும் இந்த முடிவை எடுக்கிறோம். மனம் ஒத்துப் பிரிகிறோம்'' -இப்படிப்பட்ட வார்த்தைகளுடன் விவாகரத்து அறிக்கைகள் வருவது தமிழ் சினிமாவில் சகஜமாகிவிட்டது. ஆனாலும் இந்த முறை அப்படி ஒரு அறிக்கை, இப்படி ஒருவரிடமிருந்து வந்தது, பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சியையே தந்தது. ஆம்... ஆறு மாதம் முன்புகூட அனைவரின் கண்படும்படி வாழ்ந்துவந்த ஜெயம் ரவி -ஆர்த்தி ரவி இருவரும் பிரிவதாக, ரவியிடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்தது. இது குறித்து முன்பே சின்னச் சின்ன செய்திகள் வந்தபோதும் அவை வதந்தியாக இருக்குமென்பதே ஜெயம் ரவி -ஆர்த்தி ரவி இருவரையும் அறிந்தவர்கள், ரசிகர்கள் நம்பிக்கையாக இருந்தது. இந்த அறிவிப்பில் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது... தனுஷ், ஜி.வி.பிரகாஷ் என சமீபத்தில் தங்களது பிரிவை அறிவித்தவர்கள், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வரிகளில் கணவன் -மனைவி இருவரின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டு தனித்தனியே அறிவிப்புகள் வந்தன. ஆனால் இந்த முறை ஜெயம் ரவி மட்டுமே அறிவிப்பு வெளியிட, ஆர்த்தி தரப்பில் எதுவும் கூறவில்லை. ஓரிரு நாட்கள் கழித்து வந்த ஆர்த்தியின் அறிவிப்பு அனைவரையும் அதிர வைத்தது.

"இந்த விவாகரத்து குறித்து என்னிடம் ரவி ஆலோசிக்கவில்லை. என் ஒப்புதல் இல்லாமல் இந்த விவாகரத்து அறிவிப்பு வந்துள்ளது. இத்தனை ஆண்டுகால உறவில் ஒரு மரியாதையான முடிவை நான் எதிர்பார்க்கிறேன். நானும் எனது இரண்டு மகன்களும் என்ன நடக்கிறதென்று புரியாமல் தவிக்கிறோம்...' என்று கூறி ஜெயம் ரவியுடன் இணைந்து வாழும் தனது விருப் பத்தை வலி நிறைந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருந் தார் ஆர்த்தி. அ

ருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான். ஆனால் அந்த இருவரது பிரிவு லட்சக் கணக்கானோரின் கவனத்தையும் நேரத்தையும் இழுக்கிறது. இருவர் குறித்து வெவ்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. எது உண்மை என்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பதும் மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தை இணைப்பதும்தான் நமது நோக்கம்.

ss

"இது கடினமான முடிவுதான்... ஆனால் தவிர்க்கமுடியவில்லை. இருவரின் நலன் கருதியும் இருவரை சார்ந்தவர்களின் நலன் கருதியும் இந்த முடிவை எடுக்கிறோம். மனம் ஒத்துப் பிரிகிறோம்'' -இப்படிப்பட்ட வார்த்தைகளுடன் விவாகரத்து அறிக்கைகள் வருவது தமிழ் சினிமாவில் சகஜமாகிவிட்டது. ஆனாலும் இந்த முறை அப்படி ஒரு அறிக்கை, இப்படி ஒருவரிடமிருந்து வந்தது, பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சியையே தந்தது. ஆம்... ஆறு மாதம் முன்புகூட அனைவரின் கண்படும்படி வாழ்ந்துவந்த ஜெயம் ரவி -ஆர்த்தி ரவி இருவரும் பிரிவதாக, ரவியிடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்தது. இது குறித்து முன்பே சின்னச் சின்ன செய்திகள் வந்தபோதும் அவை வதந்தியாக இருக்குமென்பதே ஜெயம் ரவி -ஆர்த்தி ரவி இருவரையும் அறிந்தவர்கள், ரசிகர்கள் நம்பிக்கையாக இருந்தது. இந்த அறிவிப்பில் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது... தனுஷ், ஜி.வி.பிரகாஷ் என சமீபத்தில் தங்களது பிரிவை அறிவித்தவர்கள், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வரிகளில் கணவன் -மனைவி இருவரின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டு தனித்தனியே அறிவிப்புகள் வந்தன. ஆனால் இந்த முறை ஜெயம் ரவி மட்டுமே அறிவிப்பு வெளியிட, ஆர்த்தி தரப்பில் எதுவும் கூறவில்லை. ஓரிரு நாட்கள் கழித்து வந்த ஆர்த்தியின் அறிவிப்பு அனைவரையும் அதிர வைத்தது.

"இந்த விவாகரத்து குறித்து என்னிடம் ரவி ஆலோசிக்கவில்லை. என் ஒப்புதல் இல்லாமல் இந்த விவாகரத்து அறிவிப்பு வந்துள்ளது. இத்தனை ஆண்டுகால உறவில் ஒரு மரியாதையான முடிவை நான் எதிர்பார்க்கிறேன். நானும் எனது இரண்டு மகன்களும் என்ன நடக்கிறதென்று புரியாமல் தவிக்கிறோம்...' என்று கூறி ஜெயம் ரவியுடன் இணைந்து வாழும் தனது விருப் பத்தை வலி நிறைந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருந் தார் ஆர்த்தி. அந்த அறிக்கையில் "ஆர்த்தி ரவி' என்றே அவரது பெயர் இடம் பெற்றிருந்தது. இப்படி இவர் தவிக்கும்போதே, சமூக ஊடகங்களில் ஆளாளுக்கு தங்கள் கற்பனைகளை, யூகங்களைக் கூறிவந்தனர். தனுஷ் புகைப்படம், மாமியார்... ரவியை அடக்கி ஆண்டார், தயாரித்த படம் நஷ்டமானதால் பிரச்சனை என ஆளாளுக்கு கற்பனைகளை வெளிப்படுத்திவந்தனர். என்னதான் நடக்கிறது, உண்மை என்ன? விசாரித்தோம். ஒரு குடும்பம் பிரியும்போது ஏற்படும் துயர் பெரியது. அதில் கற்பனைகளை கலந்து கதை கட்டக்கூடாது. அத னால் என்ன நடந்தது என்று உண்மையைத் தேடினோம்.

2009இல் ஜெயம் ரவி- ஆர்த்தி திருமணம் கோலா கலமாக நடைபெற்றது. அதற்கு சில வருடங்கள் முன்பிருந்தே இருவருக்கும் காதல் இருந்தது. முதலில் ரவியின் பெற்றோர் எதிர்ப்பைக் காட்டினாலும் பிறகு இருவரின் உறுதியையும் பார்த்து அவர்களது காதலை அங்கீகரித்தனர். குஷ்பு உள்ளிட்ட நண்பர்களின் பரிந்துரையும் அந்தத் திருமணத்தில் பங்காற்றியது. பின்பு எல்லாமே "கோயிங் ஸ்டெடி'யாகத்தான் இருந்தது. ஜெயம் ரவியின் சினிமா பயணமும் அவர்களது காதல் பயணமும் இனிமையாகவே இருந்தன. இன்ஸ்டாக்ராம் ஃபோட்டோக்களும், நண்பர்களுடன் பார்ட்டிகளும், யூ-டியூப் பேட்டிகளும் அவற்றை உறுதிப்படுத்தின. "டிக் டிக் டிக்' படத்தில் தனது மூத்த மகனை நடிக்க வைத்திருந்தார் ஜெயம் ரவி. மகன் மீதான பாசம் அதில் வெளிப்பட்டது. இப்படி ஒரு நல்ல குடும்பஸ்தனாகவே இருந்தார் ஜெயம் ரவி. சில படங்கள் சரியாகப் போகாத போது, ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்த "அடங்க மறு' கை கொடுத்தது. அடுத்தடுத்து சில படங்களில் தனது மருமகனுக்காக கோடிகளை செலவு செய்தார் சுஜாதா. ஜெயம் ரவியும் "அம்மான்னுதான் சொல்லணும், அவுங்க பொண்ணுக்கும் எனக்கும் ரெண்டரை வயசுதான் வித்தியாசம், எனக்கு அவுங்க அம்மாதான்' என்று பாசத்துடன்தான் இருந்தார். த்ரிஷா, தனுஷ் இன்னும் பலருடனான இவர்களது சினிமா நட்பு வட்டமும் நன்றாகத்தான் இருந்துள்ளது. த்ரிஷாவுக்கு ரவி சகோதரர் போலவாம். ஆர்த்தி, தனுஷை "அண்ணா' என்றுதான் சகோதர பாசத்துடன் அழைத்துள்ளார். அதை ரவியும் அங்கீகரித்துள்ளார். இரண்டு குடும்பங்களுக் குமே பணம் பிரச்சனை அல்ல. ஜெயம் ரவியின் குடும்பமும் சரி, ஆர்த்தியின் குடும்பமும் சரி, செல்வ வளம் உள்ளவர்கள்தான். பெற்றோர், திரைப்படங்கள், நண்பர்கள், இரண்டு மகன்கள் என நல்லதொரு குடும்பமாக இருக்க, இடையில் இடியாக வந்தது யார்?

jayamravi

ஒரு பாடகி....!

ஜெயம் ரவி, தன்னுடைய நெருக்கமான நண்பர்களுடன் அவ்வப்போது கோவா செல்வது வழக்கம். அந்த நண்பர்கள் சினிமாவுக்கு முன்பிருந்தே ரவிக்கு நெருக்கமாக இருப்பவர்கள். அப்படி சென்ற ஒரு கோவா பயணத்தில் அறிமுகம் ஆகிறார் கெனிஷா ஃபிரான்சிஸ். பெங்களூரை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் கோவா பப்களில் பாடி வந்தவர். பிறகு பல இண்டிபென்டண்ட் ஆல்பம்களில் பாடி நடித்துள்ளார். தமிழில் நடிகர் ஜீவா தயாரித்த ஆல்பம் ஒன்றிலும் இவர் பாடியுள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் கணவர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. கெனிஷாவின் குரலுக்கு ரசிகரான ரவி, பிறகு அவரது நண்பராகிறார். இவரது நட்பு ரவியை திசை திருப்பியுள்ளது. ஆர்த்தி -ஜெயம் ரவி இருவருக்குமிடையே கடந்த சில மாதங்களாக விரிசலை ஏற்படுத்துகிறது. உச்சகட்டமாக கடந்த ஜூன் மாதத்தில் தனது திருமண நாளன்றுகூட ஆர்த்தியுடன் இல்லையாம் ஜெயம் ரவி. ஷூட்டிங் இருப்பதாகக் கூறிக் கிளம்பிவிட்டாராம். ஆனால் நடந்தது ஷூட்டிங் இல்லை.

இதையறிந்து, எப்படியாவது ரவியை சந்தித்துப் பேசித் தீர்க்கலாம் என்று கோவா சென்ற ஆர்த்தியால், ரவியை சந்திக்க முடியவில்லை. கடந்த ஜூன் 24ஆம் தேதி ஜெயம் ரவியின் பெயரில் பதிவான விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை கோவாவின் கலாங்கட் பகுதியில் ஓட்டி ஃபைன் கட்டியுள்ளார் கெனிஷா ஃபிரான்சிஸ். உள்ளே இருப்பது வெளியில் தெரியாமல் இருக்க, கார்களில் போடப் படும் டிண்ட் ஸ்டிக்கர், அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக இருந்ததற்காக அபராதம் விதித்துள்ளது கோவா போலீஸ். பிறகு அதே காரை, அதே கோவாவில் ஜூலை 14 அன்று அதிவேகமாக ஓட்டி அபராதம் கட்டியுள்ளார் ஜெயம் ரவி. இந்த இரண்டுக்குமான சலான் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. சில கோடிகள் விலையுள்ள அந்த ரேஞ்ச்ரோவர் கார் சென்னையில் ஜெயம்ரவியும் ஆர்த்தியும் பயணித்தது.

தங்கள் திருமண நாளன்று கூட உடனில்லாமல் ரவி போனது ஆர்த்திக்கு ஏமாற்றத்தை அளிக்க, கூடுதலாக இந்த புது நட்பு விஷயமும் தெரிய வர, Instagram-இல் தாங்களிருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை நீக்கினார் ஆர்த்தி. ஆனால், ரவியை தனது மனதில் இருந்து நீக்க முடியாத அவர், தொடர்ந்து பேச முயற்சித்துள்ளார். ரவி லிகெனிஷாவின் கோவா நட்பு பெங்களூர்வரை தொடர்ந்துள்ளது. இது ரவி -ஆர்த்தி விரிசலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இடையில் இரண்டு மகன்களும் "அப்பா ஷூட்டிங் போயிருக்கார், அவரது பிறந்தநாளுக்கு வந்துவிடுவார்' என்று காத்திருக்க, அப்பாவின் பிறந்தநாள் வரும் முன்னரே அதிர்ச்சி அறிவிப்பு வந்தது. ஆம், செப்டம்பர் 10 ஜெயம் ரவியின் பிறந்தநாள். அதற்கு முன்பு வந்துவிட்டது அவரது விவாகரத்து அறிவிப்பு. இங்கே அதிர்ச்சியை கொடுத்துவிட்டு கோவாவில் கொண்டாட்டம் நடந்ததாம். ஆர்த்தியின் சம்மதம் இல்லாததால் குடும்ப நல நீதிமன்றத்தில் இருக்கிறது வழக்கு. சில மாதங்களாக நடந்துவரும் இந்தப் பிரச்சினைகளை அறிந்த ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார், ரவியின் தந்தை எடிட்டர் மோகன், அண்ணன் இயக்குனர் மோகன்ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர், இருவரையும் சேர்த்து வைக்க பல முயற்சி களை மேற்கொண்டும் பலனில்லை. ரவி அவர்களது பேச்சைக் கேட்கும் நிலையில் இல்லையாம். ஆனாலும் குடும்பத்தினர் முயற்சி தொடர்கிறது.

ss

ரவியின் சமீபத்திய நடவடிக்கை கள் அனைத்தும் கெனிஷாவின் இயக்கத்தில் நடக்கிறதாம். ஆன்மிக -மனவள சிகிச்சையாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் கெனிஷா ஃபிரான்சிஸ், ரவியை ஆட்டி வைக்கிறார் என்று கூறுகிறார்கள் அந்தக் குடும்பத்தின் மீது அக்கறை உள்ளவர்கள். கெனிஷாவின் தொலைபேசி எண்ணை ட்ரூ காலரில் சோதித்துப் பார்த்தால் "கெனீஷா ரவி' என்று வருகிறது. யார் செய்த வேலை என்று தெரியவில்லை. ஜூலை மாதத்தில் ஒருமுறை ஜெயம் ரவி, கெனிஷா இரு வரும் சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாகத் தகவல் வர... எப்படி யாவது அவரை பார்த்துவிட வேண்டு மென்று ஹோட்டல், அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற ஆர்த்தியை எங்கும் அனுமதிக்காமல் தவிர்த்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த சம்பவம் நடந்து முடிந்தவுடன் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் "செக் மேட்' என்ற வார்த்தைகளுடன் காலை நீட்டி ஒரு புகைப்படத்தை பதிவேற்றியிருக்கிறார் கெனிஷா. ரவி சார்ந்த இடங்களில் ஆர்த்தியை அனுமதிக்க வேண்டா மென்று இன்ஸ்ட்ரக்ஷன் இருக்கிற தாம். ஜெயம் ரவி நடித்திருக்கும் "ப்ரதர்' மற்றும் "காதலிக்க நேரமில்லை' படங்களின் குழுக்கள் அவரது பிறந்த நாளுக்கு சிறப்பு வாழ்த்துப் பதிவு, சிறப்பு வீடியோக்கள் வெளியிட, ஜெயம் ரவியோ விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் மகிழ்ச்சி இல்லை. அடுத்த மாதம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும். "ப்ரதர்' திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது படத்தின் ப்ரமோஷன் நிகழ்வு களுக்கு ரவி வரவேண்டுமே என்ற கவலை அந்தத் தயாரிப் பாளர்களுக்கு. இப்படி அவசர, அவசரமாக ஜெயம் ரவி செயல்பட ஏதோ நெருக்கடிதான் காரணமாக இருக்கிறது.

ss

"சைரன்' படத்தின் இயக்கு னர் ஆண்டனி பாக்யராஜின் திருமணம் கடந்த மே மாதம் நடந்தது. படம் தோல்வியடைந் தாலும் கூட ஜெயம் ரவியும், படத்தின் தயாரிப்பாளரான மாமியார் சுஜாதாவும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கடந்த மே - ஜூன் வரை சுமூகமாக சென்றுகொண் டிருந்த குடும்பம், திடீரென இந்த அளவுக்கு வந்தது அனைவருக்கும் அதிர்ச்சி. உச்சகட்டமாக, 13 செப்டம் பர் அன்று சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில், தங்கள் வீட்டிலுள்ள தனது பொருட்களை மீட்டுத் தரவேண்டுமென்று கோரி மனைவிமீது ஒரு புகாரை அளித்துள் ளார் ஜெயம் ரவி. அன்பாக வாழலாம் என்று அழகாகக் கட்டிய ஊஈத பங்களாவில் அப்பா இன்றி இரண்டு மகன்களும், கணவரைப் பிரிந்து ஆர்த்தியும் தவிப்போடு இருக்கிறார் கள். ஜெயம் ரவி, தனது வீட்டில் முதன் முதலில் ஆர்த்தியுடனான காதலை வெளிப்படுத்தி திருமண விருப்பத்தை சொல்லியபோது ரவியின் தந்தை எடிட்டர் மோகனும் தாயாரும் ஒத்துக்கொள்ளவில்லை. அப்போது கத்தியை எடுத்து கை நரம்பருகே வைத்து "அறுத்துக்கொள்வேன்' என்று மிரட்டி அவர்களை ஒத்துக்கொள்ளவைத்தார் ஜெயம் ரவி (இந்தச் செய்தியை நக்கீரன் அப்போதே பதிவு செய்திருந்தது) அந்த காதல் எங்கே போனது என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள் ஆர்த்தியும் குடும்பத்தினரும். பக்கத்து வீட்டுப் பையன், நம்ம வீட்டுப் பையன் என்று தனது திரைப்பட பாத்திரங்களாலும் வெளியிலும் நல்ல பெயரை எடுத்த ஜெயம் ரவி மனம் மாறி வருவாரா?

-கீரன்

nkn180924
இதையும் படியுங்கள்
Subscribe