ண்ணாமலை ஒரு பெரிய மனக்குழப்ப வியாதியில் பாதிக்கப்பட்டவர்போல் நடந்து கொள்கிறார். டெல்லி "இனி தமிழ்நாட்டில் தொடர வேண்டாம்' என அவருக்கு டெட்லைன் விதித்துள்ளது. அவரே தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராகத் தொடர நினைத்தாலும் அவரால் தொடர முடியாத மனநிலைக்கு அண்ணாமலை வந்துவிட்டார் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

அண்ணாமலை இதுவரை தமிழகத்தில் கடந்த 20 மாதங்களில் வசூல் செய்த தொகை பல நூறு கோடி. போலி நிதி நிறுவனங்கள், இன்கம்டாக்ஸில் மாட்டியவர்கள், தமிழக அரசின் பெரிய காண்ட்ராக்ட்டுகளை எடுப்பவர்கள் சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் என அனைவரிடமும் அமர்பிரசாத் ரெட்டியை வைத்து மிரட்டி இதுவரை சம்பாதித்துள்ள அண்ணாமலை, அந்தப் பணத்தை பெங்களூரிலும், விஜயபாஸ்கர் மூலமாக அமெரிக்காவிலும் முதலீடு செய்துள்ளார். அண்ணாமலை தலைவராக வந்து பா.ஜ.க.வை வளர்ப்பதை விட கலெக்ஷன் பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.

annamalai

Advertisment

அவரது மச்சான் பேரில் ஏகப்பட்ட சொத்துக்களை தமிழகத்தில் வாங்கிக் குவித்துள்ளார். ஆட்டுக்குட்டி அண்ணாமலையாக தமிழகத்திற்கு வந்த அவர், பண்ணையார் அண்ணாமலையாக அவதாரமெடுத்துள்ளார்.

அண்ணாமலையின் எழுச்சிக்கு முக்கிய காரணம் தமிழகம் மட்டுமல்ல, அவரது குருவான கர்நாடகாவைச் சேர்ந்த பி.எல்.சந்தோஷ், கர்நாடகத்தில் செய்துள்ள குழப்பங்கள் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பி.எல்.சந்தோஷ் கர்நாடகாவைச் சேர்ந்த லிங்காயத் சமூகப் பிரிவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு எதிராக சி.டி.ரவி என்கிற கவுடா சமூகப் பிரிவைச் சேர்ந்த தலைவரை உருவாக்கினார்.

சி.டி.ரவிக்கு தமிழ்நாடு, கேரளா, கோவா, மகா ராஷ்டிரா ஆகிய மாநிலங்களை நிர்வகிக்கும் தேசிய செயலாளர் பதவி வாங்கிக் கொடுத்தார். தமிழகத்தில் அண்ணாமலை, கேரளாவில் சுரேந்திரன் போன்றவர்களை பி.எல்.சந்தோஷ் உருவாக்கினார். கர்நாட காவில் எப்படியும் தான் முதலமைச்ச ராக வேண்டும் என ஹனி டிராப் உட்பட அனைத்து வேலைகளையும் செய்தார்.

அந்த ஹனி டிராப்பை தமிழகத்தில் அண்ணாமலை அறிமுகப்படுத்தினார். கேரளா வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை ஹனி டிராப் செய்ய சொப்னா சுரேஷ் என்கிற பெண்ணை சுரேந்தர் மூலம் பி.எல்.சந்தோஷ் களமிறக்கினார். கேரளாவில் சொப்னா சுரேஷ் செய்த ஹனி டிராப் தோல்வியில் முடிந்தது.

தமிழகத்தில் கே.டி.ராகவன் என்கிற பா.ஜ.க. தலைவர் அதில் பலியானார். கர்நாடகா வில் எடியூரப்பாவை ஹனி டிராப்பில் இழுத்து விட்டு, தான் முதலமைச்சராக வேண்டும் என் கிற பி.எல்.சந்தோஷின் கனவு நிறைவேறவில்லை.

எடியூரப்பாவின் ஆதரவாளரான பொம்மை முதலமைச்சராக வந்தார். இந்த வெறியில் எடி யூரப்பாவுக்கு எதிராக சி.டி.ரவியை களமிறக்கி ஏகப்பட்ட சித்து வேலைகளை பி.எல்.சந்தோஷ் செய்ய, ஒட்டுமொத்த கர்நாடகமும் பி.எல்.சந்தோஷக்கு எதிராகத் திரும்பியது.

dd

Advertisment

அங்கு பிராமணர் பி.எல்.சந்தோஷா, லிங்காயத் எடியூரப்பாவா என மோதல் மாறியது. இதனால் கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கும் நிலை உருவானது. ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. எந்த மாநிலத்திலும் இதுவரை தோற்கவில்லை. அது கர்நாடகத்தில் நிகழ்ந்தால் சீட்டுக்கட்டுகள் போல இந்தியா முழுவதும் பா.ஜ.க. தோற்றுவிடும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.

இதுவரை வடஇந்திய மாநிலங்களில் கவனம் செலுத்திவந்த பா.ஜ.க., கர்நாடகாவை கவனிக்க ஆரம்பித்தது. ஜே.பி.நட்டா, நரேந்திர மோடி, அமித்ஷா உட்பட பா.ஜ.க. தேசிய தலைவர்கள் கர்நாடகாவில் வலம் வரத் தொடங்கியதில், அங்கு பி.எல்.சந்தோஷ் செய்த வேலைகள் தெரிய வந்தது. அலறிய பிரதமர் மோடி, நேரடியாக எடியூரப்பாவையும், எடியூரப்பா மகனையும் தொடர்புகொண்டு எப்படியாவது பா.ஜ.க.வை கர்நாடகத்தில் வெற்றி பெற வையுங்கள் என சொன்னபோது, பி.எல்.சந்தோசை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை எடியூரப்பா முன்வைத்தார்.

பி.எல்.சந்தோஷின் நடவடிக்கைகளை ஆராய்ந்த போது, அவர் தமிழ்நாடு, கேரளா என எல்லா இடத்திலும் செய்த குழப்படிகள் அமித்ஷாவுக்கும், மோடிக்கும் தெரிந்தது. அண்ணாமலை தமிழகத்தில் கொள்ளையடிப்பதை மட்டுமே தனது கொள்கையாக வைத்திருக்கிறார். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வுடன் மோதலை கடைப்பிடிக்கிறார். எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கும் ஒத்துவரவில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரனுடன் சேர்ந்து மூன்றாவது அணியை அமைத்து போட்டியிட அண்ணாமலை விரும்புகிறார் என்பது டெல்லி மேலிடத்திற்கு தெரிய வந்தது.

மூன்றாவது அணி அமைத்தால் நாகர்கோவிலில் மட்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார். மற்றபடி தமிழ்நாடெங்கும் பி.ஜே.பி. தலைமையிலான அணி துடைத்தெறியப்படும் என்பதை புரிந்துகொண்ட பா.ஜ.க., எடப்பாடியுடன் சமரசம் செய் என அண்ணா மலைக்கு உத்தரவிட்டது. இந்த சமரசத்தை எடப்பாடி ஏற்கவில்லை. அதனால் சமீபத்தில் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் "அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வது எடப்பாடியை புகழ்ந்து பேசுவது என ஒரு நிலை வந்தால் நான் ராஜினாமா செய்வேன்' என அண்ணாமலை அறிவித்தார்.

‘அண்ணாமலையை எப்படி நீக்குவது? அவருக்கு என்ன பதவி கொடுப்பது? என்கிற ஆலோசனையில் டெல்லி மேலிடம் இறங்கியுள்ளது என்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள்.

ஹனி டிராப் விஷயத்தில், புதிய வீடியோக்கள் எதுவும் வரவில்லை. கே.டி.ராகவனைத் தவிர வேறு யாரும் சிக்கவில்லை என்பதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ள தமிழக நிர்வாகிகள், அண்ணாமலைக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளார்கள்.

தீரன் சின்னமலை, கொங்கு நாடு கட்சி என்கிற புதிய கட்சியை பதிவு செய்து சிறையிலிருக்கும் யுவ ராஜ்டன் கைகோர்த்து களத்தில் இறங்க ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை .

அண்ணாமலைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் இந்த புதிய கட்சியின் நிர்வாகிகளாக இருப்பார்கள். அமர் பிரசாத் ரெட்டி ஆந்திர அரசியலுக்கு பயணமாக தயாராகிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க. நிர்வாகிகள்.

-தாமோதரன் பிரகாஷ்