Advertisment

"8 மாவட்டங்களுக்கு மட்டும் போ' இடைநிலை ஆசிரியர்களை விரட்டிய அரசு!

teachers

ந்த ஆண்டாவது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தோடு காலத்தைக் கழிக்கலாம் என, பொது மாறுதல் கலந்தாய்விற்காக விண்ணப்பித்த 2,319 இடைநிலை ஆசிரியர்களின் எண்ணத்தில் இடியாய் இறங்கியிருக்கிறது அந்த அறிவிப்பு. கலந்தாய்வு நடக்கவிருந்த ஜூன் 21-ஆம் தேதிக்கு முந்தைய தேதியிட்டு, தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்ட கடிதம்தான் அது.

Advertisment

teachers

அந்தக் கடித்ததில் அதிகமான ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மேற்கு மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடாது. மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டுமே வரவேண்டும். மற்ற மாவட்டங்களுக்கு செல்லமுடியாது. இ

ந்த ஆண்டாவது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தோடு காலத்தைக் கழிக்கலாம் என, பொது மாறுதல் கலந்தாய்விற்காக விண்ணப்பித்த 2,319 இடைநிலை ஆசிரியர்களின் எண்ணத்தில் இடியாய் இறங்கியிருக்கிறது அந்த அறிவிப்பு. கலந்தாய்வு நடக்கவிருந்த ஜூன் 21-ஆம் தேதிக்கு முந்தைய தேதியிட்டு, தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்ட கடிதம்தான் அது.

Advertisment

teachers

அந்தக் கடித்ததில் அதிகமான ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மேற்கு மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடாது. மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டுமே வரவேண்டும். மற்ற மாவட்டங்களுக்கு செல்லமுடியாது. இது, தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை சமன்செய்யும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டன. திடீரென்று வெளியான இந்த அறிவிப்பால், விரக்தியில் யாரும் கலந்தாய்வில் கலந்துகொள்ளாத நிலையில், 2,319 பேர் விண்ணப்பித்து சுமார் 100 பேருக்கு மட்டும் நள்ளிரவுவரை அதிகாரிகளால் கலந்தாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், அரசு வேண்டுமென்றே காலிப்பணியிடங்களை மறைத்து கலந்தாய்வு நடத்துவதாகக் கூறி இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலந்தாய்வினை முறையாக நடத்தக்கோரி புதுக்கோட்டை பேரங்குளம் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வை புறக்கணித்து இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினர்.

Advertisment

teachersபாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ரமேஷ், ""கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென்மாவட்டங்களில் தலா 50 முதல் 100 காலிப் பணியிடங்கள் இருந்தன. ஆண்டுதோறும் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொண்டு பணிமாறுதல் ஆணை பெறுவார்கள். நடப்பாண்டில் தென்மாவட்டங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல், அரசு கூறிய எட்டு மாவட்டங்களுக்கு மட்டும் செல்ல கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், குடும்பத்தைப் பிரிந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிற மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் சொந்த ஊருக்குச் செல்லும் ஏக்கத்திற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது''’என்கிறார் ஆதங்கத்துடன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைச்செயலாளர் நா.சண்முகநாதன், “""கன்னியாகுமரியில் 53, தூத்துக்குடியில் 31, விருதுநகரில் 29, இராமநாதபுரத்தில் 17, கோயம்புத்தூரில் 60, மதுரையில் 9, திருவாரூரில் 21, காஞ்சிபுரத்தில் 75, புதுக்கோட்டையில் 61, சிவகங்கையில் 47 என காலிப் பணியிடங்கள் இருந்தும் வேண்டுமென்றே அதை மறைத்து, கலந்தாய்வினை நடத்தியிருக்கிறது அரசு. குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களுக்கு மட்டும் பிற மாவட்ட ஆசிரியர்களை மாறுதல்பெற கட்டாயப்படுத்துவது ஏன்? இதன்மூலம், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். இது இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெருத்த மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அரசின் இந்த முடிவை மாற்றி எல்லா மாவட்ட ஆசிரியர்களுக்கும் மாவட்ட பணி மாறுதலை முறையாக வழங்கவேண்டும்''’என வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் இருந்தும் அமைச்சர் செங்கோட்டையன், "ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லை' என்கிறார். அதேபோல, கடந்தாண்டு மாணவர்கள் எண்ணிக்கையை வைத்து பல இடங்களில் உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரித்து பணிநிரவல் செய்துவிட்டனர். இதனால், மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கும் சூழலில், ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை முறையாக நடத்தி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று காத்திருப்பவர்களை நியமித்தால் மட்டுமே ஆசிரியர், மாணவர் நலன் காக்கப்படும். இல்லையென்றால், காலியிடங்கள் "வேறு கணக்கில்' நிரப்பப்படும்!

-இரா.பகத்சிங்

nkn06.7.2018
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe