Advertisment

டென்ட்டில் பிரசவம்! உயிரிழந்த கர்ப்பிணி! -இருளர்களின் துயரம்!

ss

நாடு சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் தற்போதுவரை ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசின் உதவிகள், நலத்திட் டங்கள், பல்வேறு சலுகைகள் முழுமையாகச் சென்றடையவில்லை.

திருவண்ணாமலை மாவட்டம், தூசி அடுத்த மாமண்டூர் பகுதியிலுள்ள, கீழ்க்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி செல்வி. சமீபத்தில் திருமணமான இவர்கள், இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களோடு ஆறு உறவினர்களின் குடும்பங்களும் இணைந்து, சுமார் 20க்கும் ம

நாடு சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் தற்போதுவரை ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசின் உதவிகள், நலத்திட் டங்கள், பல்வேறு சலுகைகள் முழுமையாகச் சென்றடையவில்லை.

திருவண்ணாமலை மாவட்டம், தூசி அடுத்த மாமண்டூர் பகுதியிலுள்ள, கீழ்க்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி செல்வி. சமீபத்தில் திருமணமான இவர்கள், இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களோடு ஆறு உறவினர்களின் குடும்பங்களும் இணைந்து, சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள், நாடோடி வாழ்க்கையாக, தற்காலிகக் கூடாரம் அமைத்து, மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த, திருப்பிலிவனம் கிராமத்திலுள்ள தோப்புப் பகுதியில் டெண்ட் போட்டு, அப்பகுதியிலுள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டிச் சேகரிக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, திங்கட்கிழமை நள்ளிரவில் செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. செல்வியின் அலறல் சத்தத்தை கேட்டு உறவினர்கள் எழுந்து அவர்களே பிரசவம் பார்த்துள்ளார்கள்.

Advertisment

dd

அவர்கள் அமைத்திருந்த தற்காலிகக் கூடாரத்திலிருந்து சில மீட்டர் தூரத்திலே ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அருகாமையில் களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அங்கு செல்லவில்லை. செல்விக்கு குழந்தை பிறந்த நிலையில், அதிக ரத்தப்போக்கு காரணத்தால் செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இந்நிலையில், மறுநாள் அழுகுரல் சத்தம் கேட்க, அந்த வழியாக வந்த ஊர் பொதுமக்கள் விவரமறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரி மற்றும் சுகா தாரத்துறை அதிகாரிகள் வந்து குழந்தையை மீட்டு கலியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிரசவத்தால் உயிரிழந்த செல்வியின் உடல், அன்று மதியம் 2 மணி அளவில், அதே ஊரில் பிரேதப் பரிசோதனை செய்யாமல், எந்தவொரு விசாரணையும் நடத்தப்படாமல் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் பேசினோம். காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் தாசில்தார் இவ்விவகாரத்தை விசாரிப்பதாகத் தெரிவித்தார். அவர்களைத் தொடர்புகொண்ட போது செல்போனை எடுக்கவில்லை.

இதுபோன்ற நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதியை அழைக்கக்கூட அவர்களிடம் விழிப் புணர்வு இல்லை என்பதும், திருமணமாகி கர்ப்ப மாக உள்ளதை அருகிலுள்ள அரசு மருத்துவமனை யில் பதிவு செய்ய வேண்டுமென்ற அடிப்படை விவரம்கூட தெரியாதிருப்பதும் வேதனையளிக்கிறது.

nkn120325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe