Advertisment

வேலை கொடுங்க! குழந்தைகள் பேசட்டும்! -மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை

ed

ரபணு கோளாறு, நெருங்கிய உற வில் திருமணம், ஊட்டச்சத்து குறைவு, காது நரம்பு பாதிப்பு என சில பிரச்ச னைகளால் பிறந்த குழந்தைகளுக்கு காது கேளாத பிரச்சனை, பேசுவதை உள்வாங்க முடியாத, பதில் பேசமுடியாத நிலை உருவாகும். இப்படிப்பட்ட குழந்தைகளை உதட்டு அசைவு மூலமாகவும், கை செய்கை மூலமாக பேச கற்றுத்தரும் படிப்பே ஆடியோலஜி அன்ட் ஸ்பீச் பெத்தாலஜிஸ்ட் (பேச்சு மொழி மற்றும் கேட்பியல் நிபுணர்) என்கிற டிகிரி கோர்ஸ் 4 ஆண்டு படிப்பு. இந்த படிப்பு படித்தவர்களை மருத்துவ உலகம் மருத்துவர்கள

ரபணு கோளாறு, நெருங்கிய உற வில் திருமணம், ஊட்டச்சத்து குறைவு, காது நரம்பு பாதிப்பு என சில பிரச்ச னைகளால் பிறந்த குழந்தைகளுக்கு காது கேளாத பிரச்சனை, பேசுவதை உள்வாங்க முடியாத, பதில் பேசமுடியாத நிலை உருவாகும். இப்படிப்பட்ட குழந்தைகளை உதட்டு அசைவு மூலமாகவும், கை செய்கை மூலமாக பேச கற்றுத்தரும் படிப்பே ஆடியோலஜி அன்ட் ஸ்பீச் பெத்தாலஜிஸ்ட் (பேச்சு மொழி மற்றும் கேட்பியல் நிபுணர்) என்கிற டிகிரி கோர்ஸ் 4 ஆண்டு படிப்பு. இந்த படிப்பு படித்தவர்களை மருத்துவ உலகம் மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை தந்து மருத்துவ ராகவே பார்க்கிறது.

Advertisment

education

தமிழ்நாட்டில் முதன்முதலில் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் இந்த கோர்ஸ் 1980-களின் இறுதியில் தொடங்கப்பட்டது. மிகவும் அரிதாகவே இந்த கோர்ஸ் தமிழகம் மட்டும்மல்ல இந்தியாவில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகங்களிலும் உள்ளன. இந்தியா முழுவதும் 5 கோடி பேர் காது கேளாமை, தொண்டை பிரச்சனை, பேசுவதை புரிந்துகொள்ளும் தன்மை குறைபாடு உடையவர்களாக உள்ளனர். இவர்களுக்கான நிபுணர்கள் இந்தியா முழுமைக்கும் 1500 பேர் தான் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோர்ஸை ஆயிரக்கணக்கானவர்கள் படித்து முடித்திருந்தாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதற்கான படிப்பை பெரும்பாலும் தொடங்க வில்லை. அரசு மருத்துவமனைகளில் இந்த வேலையைக் காலியாகவே வைத்துள்ளார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தனியார் மருத்துவமனை யில் பணியாற்றும் பேச்சு, மொழி, கேட்பியல் நிபுணர், "மருத் துவர்களுக்கு இணையான படிப்பு இது. நமது அரசு மருத்துவக்கல்லூரிகளில் 32 பணியிடங்கள் காலியாகவுள்ளன. காலியாகவுள்ள சில இடங்களில் இளங்கலை, முதுகலை முடித்தவர் களை நியமிக்காமல் டிப்ளமோ படித்தவர்களை ஒப்பந்த அடிப் படையில் நியமனம் செய்துள் ளார்கள். அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான முறை யான படிப்பும், பயிற்சியும் கிடையாது. இளங்கலை, முதுகலை, ஆய்வுப் படிப்பு என முறையாக படித்தவர்களாலே குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்சியளித்து சரி செய்ய முடியும், அறுவை சிகிச்சைக்கு சிபாரிசு செய்ய முடியும். இதுகுறித்து கடந்த காலத்தில் பலமுறை அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. தற்போது முதல்வர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் சிலர் மனு தந்துள்ளார்கள்'' என்றார்.

Advertisment

"ஊரகப் பகுதிகளிலிருந்து அதிகளவிலான குழந்தைகள் பேச்சு வரவில்லை என அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வருகிறார்கள். முறையான பயிற்சி முடித்தவர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனைகளை நோக்கி கைகாட்டுகிறார்களாம். பல ஆயிரங்கள் செலவு செய்து சிகிச்சை பெற முடியாத ஏழை மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள், அதனால் அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்' என்கிறார்கள் மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள்.

nkn040921
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe