வீடியோக்களில் பெண்கள்! விபரீத கொலைகள்! -விருதுநகர் மாவட்ட பகீர்!

rr

மிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் வாடிக்கையாக நடப்பது தான் என்றாலும், விருதுநகர் மாவட்டம் -சிவகாசியில் நடந்த சில குற்றச் சம்பவங்கள், ஒரு மாதிரியானவை.

சம்பவம்-1

சிவகாசியில் ஜெயக்குமார் வைத்திருந்த ஸ்கோரிங் நிறுவனத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேலை பார்த்தார் பாண்டிச்செல்வி. அப்போது, இருவரும் நெருங்கிப் பழகினார்கள். தங்களுக்கென்று குடும்பம், குழந்தைகள் இருந்தும் தகாத உறவைத் தொடர்ந்தார்கள். இந்த விவகாரம் பாண்டிச் செல்வியின் வீட்டுக்குத் தெரிந்துவிட, வேலையில் இருந்து நிற்க வேண்டியதாயிற்று.

murder

தற்போது, வேறொரு நிறுவனத்தில் பாண்டிச்செல்வி வேலை பார்ப்பதை அறிந்த ஜெயக்குமார், ‘மீண்டும் என்னுடன் பழகியே ஆகவேண்டும்’ என்று தொடர்ந்து அழைப்பு விடுத்தார். பாண்டிச்செல்வி கறாராக மறுத்து விட, ‘அப்போது நாம் ஒன்றாக இருந்ததை, உனக்குத் தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். நான் சொன்னபடி கேட்கவில்லை என்றால், அந்த வீடியோவை உன் உறவினர்

மிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் வாடிக்கையாக நடப்பது தான் என்றாலும், விருதுநகர் மாவட்டம் -சிவகாசியில் நடந்த சில குற்றச் சம்பவங்கள், ஒரு மாதிரியானவை.

சம்பவம்-1

சிவகாசியில் ஜெயக்குமார் வைத்திருந்த ஸ்கோரிங் நிறுவனத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேலை பார்த்தார் பாண்டிச்செல்வி. அப்போது, இருவரும் நெருங்கிப் பழகினார்கள். தங்களுக்கென்று குடும்பம், குழந்தைகள் இருந்தும் தகாத உறவைத் தொடர்ந்தார்கள். இந்த விவகாரம் பாண்டிச் செல்வியின் வீட்டுக்குத் தெரிந்துவிட, வேலையில் இருந்து நிற்க வேண்டியதாயிற்று.

murder

தற்போது, வேறொரு நிறுவனத்தில் பாண்டிச்செல்வி வேலை பார்ப்பதை அறிந்த ஜெயக்குமார், ‘மீண்டும் என்னுடன் பழகியே ஆகவேண்டும்’ என்று தொடர்ந்து அழைப்பு விடுத்தார். பாண்டிச்செல்வி கறாராக மறுத்து விட, ‘அப்போது நாம் ஒன்றாக இருந்ததை, உனக்குத் தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். நான் சொன்னபடி கேட்கவில்லை என்றால், அந்த வீடியோவை உன் உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைப்பேன்’என்று மிரட்டினார். பாண்டிச் செல்வியோ இசையவில்லை. உடனே ஜெயக் குமார், அந்த வீடியோக்களை பாண்டிச் செல்வியின் கணவர் ஜெயசீலனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பினார்.

ஜெயக்குமாரின் இந்த வக்கிரச்செயலால் நிலைகுலைந்துபோன பாண்டிச்செல்வியின் குடும்பத்தினர், ஜெயக்குமாரின் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த டூ வீலர்களை அடித்து நொறுக்கினர். மேலும், ஜெயக்குமார் மனைவி பத்மாவிடம், ‘உன் புருஷனை வெளியே வரச்சொல். வீட்டைக் காலி செய்யாவிட்டால் குடும்பத்தோடு கொளுத்திவிடுவோம்’என்று கோபத்தில் திட்டித் தீர்த்தனர். இதுகுறித்து, ஜெயக்குமாரின் மனைவி பத்மா அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார், ஜெயக்குமாரை கைது செய்தனர்.

சம்பவம்-2

மது போதை போதாதென்று, மாத்திரை போதைக்கு தங்களை மாற்றிக்கொண்ட சிவகாசியின் தினேஷ்குமார், மகேந்திரன், ஹரிபிரியன், செண்பக ராஜன், வெங்கடேஷ்குமார் உள்ளிட்ட 8 இளைஞர் களுக்கு வயது 20-ல் இருந்து 22 வயதுக்குள்தான். மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு வலி தெரியாமல் இருப்பதற்கும், சிசேரியன் மூலம் பிரசவித்த பெண்கள் வலியைத் தாங்கிக்கொள்வதற்கும் தரப்படும் மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, போதையில் உச்சம் காணமுடியும் என்பதை இந்த 8 பேரும் அறிந் திருந்தனர். சிவகாசியில் உள்ள மருந்துக்கடைகளுக் குச் சென்று, 5-ல் இருந்து 10 மாத்திரைகள் வரை வாங்கி உட்கொண்டு, கஞ்சாவைக் காட்டிலும் அதிக போதையை அனுபவித்து வந்தனர்.

லோடு வேன் டிரைவரான ஆனந்தராஜ், இந்த இளம் வயதில் இப்படி ஒரு தவறான போதைப் பழக்கத்தில், தனக்குத் தெரிந்த இளைஞர்கள் சிக்கித் தவிப்பதைக் கண்டு வேதனையுற்று, திருந்தும்படி அறிவுறுத்தியிருக்கிறார். ஆனந்தராஜ் கூறிய புத்திமதி, போதை இளைஞர்களுக்கு பிடிக்காமல் போய், "நாங்க என்னமும் பண்ணிட்டு போறோம். நீ யாருடா கேட்கிறது?'’ என்று எகிறியிருக்கின்றனர். ஒருகட்டத் தில், தன் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆனந்த ராஜை போனில் அழைத்த ஹரிபிரியன், "ஆனந்த ராஜை, மணிநகரில் வந்து பார்' என்று கூற, அந்த இடத்துக்குப் போன ஆனந்தராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டனர்.

murders

சம்பவம்-3

சிவகாசியை அடுத் துள்ள அருணாச்சலபுரத் தைச் சேர்ந்த சந்தனக்குமார், போர்வெல் தொழில் பார்த்து வந்தார். அவரிடம் வேலை பார்த்த செந்தில் குமார், ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்ததால் விரட்டப்பட்டார். சந்தனக்குமாரோ, செந்தில்குமா ருக்கு நெருங்கிய உறவுக்காரப் பெண்ணிடம் பழக்கம் வைத்து, அந்தரங்கத்தை மொபைலில் பதிவு செய்திருந்தார். இதையறிந்த செந்தில்குமார், "நீ மட்டும் என்ன யோக்கியமா?' என்று தட்டிக் கேட்டார். இதனைத் தொடர்ந்து ஆவேசமான செந்தில்குமார், சந்தனக்குமாரைக் கடுமையாக மிரட்ட வேண்டுமென்று, சோனைக்குமார் உள்ளிட்ட 5 பேரை ஏவினார். காருக்கு ரூ.5000, ஐவருக்கும் ரூ.5000 என மொத்தம் ரூ.10 ஆயிரம் தந்து, மதுவும் வாங்கிக் கொடுத்தார். சந்தனக் குமாரை வழிமறித்து காரில் ஏற்றிச்சென்று மிரட்டி யது சோனைக்குமார் கும்பல். அப்போது ஒருவன், மிதமிஞ்சிய போதையில் சந்தனக்குமாரின் கழுத்தை இறுக்க... எதிர்பராதத விதமாக உயிர் பிரிந்தது.

இதையடுத்து, ஈஞ்சார் கண்மாய் பகுதியில் சந்தனக்குமாரின் உடலை வீசிவிட்டுச் சென்ற சோனைக்குமார் கும்பல், திருத்தங்கல் காவல்நிலைய போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டது.

இறந்த சந்தனக்குமாரின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, 10-க்கும் மேற்பட்ட பெண்களு டன் பழகியபோது எடுத்திருந்த அந்தரங்க வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சியானது காவல்துறை. சம்பந்தப்பட்ட பெண்களை அழைத்துவந்து விசாரித்து, அவர்களுடைய மொபைலையும் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, ஆளாளுக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பில் இருந்ததை அறிந்து, ‘அட கொடுமையே!’ என்று தலையில் கைவைத்திருக்கிறார்கள் போலீசார்.

"இதுபோன்ற குற்றச் சம்பவங்கள், ‘நல்லதுக்கு காலமில்லை; நல்லதே நடப்பதில்லை'’ என்ற அச்ச உணர்வை, மக்களிடம் ஏற்படுத்துவதாக உள்ளன.

nkn080921
இதையும் படியுங்கள்
Subscribe