Advertisment

பெண் அதிகாரிகள் சுருட்டிய 10 கோடி! -சிவகங்கை பகீர்!

corruption

போலி ஆவணங்களை தயார் செய்து சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்குக்கூட தெரியாமல் ரூபாய் பத்து கோடியைச் சுருட்டியிருக்கிறார்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி குழுவினரும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநராக இருந்த காஞ்சனா குழுவினரும்.

Advertisment

கோப்புகளில் கொள்முதல் செய்த கும்பல்களை விட்டுவிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு 17பி (அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக) சார்ஜ் நோட்டீஸ் வழங்கியிருக்கிறது ஊரக வளர்ச்சித்துறை.

Advertisment

rupees

அப்படி என்ன கொள்முதல் செய்ததாக கோப

போலி ஆவணங்களை தயார் செய்து சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்குக்கூட தெரியாமல் ரூபாய் பத்து கோடியைச் சுருட்டியிருக்கிறார்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி குழுவினரும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநராக இருந்த காஞ்சனா குழுவினரும்.

Advertisment

கோப்புகளில் கொள்முதல் செய்த கும்பல்களை விட்டுவிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு 17பி (அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக) சார்ஜ் நோட்டீஸ் வழங்கியிருக்கிறது ஊரக வளர்ச்சித்துறை.

Advertisment

rupees

அப்படி என்ன கொள்முதல் செய்ததாக கோப்புகளைத் தயாரித்திருக்கிறார்கள்? திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு ரூ.44 லட்சத்திற்கு 73 மின்மோட்டார்களும் உதிரிப்பாகங்களும், சிவகங்கை ஒன்றியத்திற்கு ரூ.27 லட்சத்திற்கு 86 மின் மோட்டார்களும், உதிரிப்பாகங்களும்... தேவகோட்டை ஒன்றியத்திற்கு ரூ.52 லட்சத்திற்கு 106 மின் மோட்டார்களும் உதிரிப்பாகங்களும் குளோரின் பவுடரும் வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து முழு பரங்கிக்காயை சோற்றில் மறைத்து முழுங்கியிருக்கிறார்கள்.

சென்னையில் இருந்து சிவகங்கைக்கு வந்து ஆய்வு நடத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க உயர்நிலை அதிகாரிகள்தான் இந்தப் பத்துகோடி மோசடியைக் கண்டுபிடித்தவர்கள்.

""கடுமையான தண்ணிப் பஞ்சம் வரப்போகுது. அதை சமாளிக்கிறதுக்காக மின்நீர்மூழ்கி மோட்டார் பம்புகளும் அதற்கான உதிரிப்பாகங்களும் குளோரின் மருந்துகளும் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் கடிதம் கட்டாயமாகப் பெறப்பட்டிருக்கிறது. அதேநாளில், அவற்றுக்கான விலைப்புள்ளிப் பட்டியல்களும் பெறப்பட்டிருக்கிறது. அதை கலெக்டர் மலர்விழி வெளியிட்டிருக்கிறார். இந்தக் கொள்முதல் குழுவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஒருவர்கூட இல்லை. அப்போதைய ஆட்சியர் மலர்விழியின் கணவர் பெயரில் டெண்டர் கோரப்பெற்று, தஞ்சையிலுள்ள டெக்கான் கம்பெனியில் சுமார் ஏழாயிரம் பெறுமானமுள்ள மோட்டாரை தலா ரூ.39 ஆயிரத்துக்கு வாங்கியதாக கோப்புகளை தயார் செய்திருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களிலும் 10 கோடிக்கும் அதிகமாகவே இதில் ஊழல் நடந்திருக்கிறது'' என்கிறார் சிவகங்கை தி.மு.க. ந.செ. ஆனந்த்.

""இதைக் காட்டிலும் பட்டப்பகல் கொள்ளை எங்கும் நடந்திருக்காது. தேவகோட்டை ஒன்றியத்தில் நூறு விழுக்காடு மின்மோட்டார் பம்புகளும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. 106 மின் மோட்டார் பம்புகளும் உதிரிப்பாகங்களும் 52 லட்சத்திற்கு கலெக்டரின் கணவர் வாங்குகிறார். கொள்ளை விவகாரம் வெளியே வந்ததும் சம்பந்தமே இல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பலி கொடுக்கிறார்கள்'' குமுறினார் மார்க்சிஸ்ட் கட்சியின் சிவகங்கை கன்வீனர் சின்னதுரை.

காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் மாங்குடி நம்மிடம், ""மின் மோட்டார் பம்புகள் ரிப்பேராகிவிட்டால்கூட ஒண்ணு, ரெண்டுதான் வாங்க முடியும். இவுக என்னடான்னா 106 வாங்கினதா புருடாவிடுறாகளே... அடேங்கப்பா'' திகைப்பைக் காட்டினார்.

அரசியல்வாதிகளைக் காட்டிலும் அதிகாரிகள் இமயமலை முழுங்கிகளாகிவிட்டனர்.

-நாகேந்திரன்

nkn03-08-2018
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe