"வெட்கத்தை விட்டுக் கதறவேண்டிய நிலைக்கு ஆளாயிட்டேன். இருந்தாலும் என் நிலை மத்தவங்களுக்கு வரக்கூடா துன்னுதான் நக்கீரன் கிட்ட நான் மனம் திறந்து என் அதிர்ச்சியான அனுபவங்களைச் சொல்ல விரும்புறேன். சரியான விழிப்புணர்வு இல்லாததால், என் னையே இழந்து இப்ப நடக்க முடியாத நிலைக்கும் ஆளாயிட் டேன்'' என்று நம்மைத் தொடர்பு கொண்டு பதறியது அந்தப் பெண் குரல்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 23 வயதான அந்த இளம் பெண் சிவகாமியை (பெயர் மாற்றப்பட் டுள்ளது) சந்தித்தோம். கண்ணீருடன் பேச ஆரம்பித்த அவர் ""எங்க அப்பா கடந்த வருடம் இறந்துட்டார். என்னோட அம்மா லதா மற்றும் அண்ணனுடன் இந்த சாலிகிராமத்துல வாடகை வீட்ல, வாழ்ந்துட்டுக்கிட்டு இருக்கோம். பி.சி.ஏ. படிச்சி முடிச்சிட்டு தனியார் நிறுவனத்துல வேலை செய்றேன். 2019, செப்டம்பர் மாசம் 24 ஆம் தேதி கோடம்பாக்கத்துல இருக்கும் மேகிவாலா உணவகத்துல சாப்பிட்டுகிட்டு இருந்தப்போ, அங்க வேலை செய்யும், அருண்குமார் என்கிட்ட வந்து பேசினான். ஓட்டல் ஆஃபர் பற்றி சொல்லி, என் போன் எண், இன்ஸ் டாகிராம் ஐ.டி. என எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டான். அன்னைல இருந்து தினமும் மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சான். என்னை லவ் பண்றதாக வும் என்னை கல்யாணம் செய்துகிட்டு வாழ ஆசைன்னும் சொன்னவன், ஒரு நாள் மனம் விட்டுப்பேச மெரினா பீச்சுக்குக் கூப்பிட்டான். நானும் அவனை நம்பிப்போனேன், கண்டிப்பா உன்னத்தான் கட்டுவேன்னு சத்தியம் செய்தான். அப்பாவை இழந்த நேரத் தில் ஆறுதல் இல்லாமல் இருந்த நான், அவன் காதலை ஏத்துக்கிட்டேன்.
அவனோட வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போனான். எல்லோரிடமும் அறிமுகம் செய்தான். இதனால் எங்க நட்பு குடும்ப உறவாயிடிச்சி. காதலும் நெருக்கமா ஆச்சி. நாம்தான் கல்யாணம் செய்துக்கப்போறோமேன்னு ஆசையாப் பேசி, ஆன்லைனில் புக் பண்ணி, முகப்பேர்ல இருக்கும் அமுதா ரெசிடென்சி ஓட்டலுக்கு அழைச்சிக்கிட் டுப் போய், வலுக்கட்டாயமாக என்னை சீரழிச் சான். பிறகும் கொரோனா காலத்திலும் ஆன் லைனில் ரூமை புக் பண்ணி அடிக்கடி என்னைத் தன் ஆசைக்குப் பயன்படுத்திக்கிட்டான். மிருகம் போல நடந்துக்குவான். நானும் வருங்காலக் கண வர்தானேன்னு எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டேன்.
இந்த நிலையில் அவனுக்கு மோனிஷாங்கிற காதலி இருப்பது தெரியவந்தது. அதுபத்திக் கேட்டப்ப என்னை அடிச்சான். மோசம் போனதை உணர்ந்த நான், என் அம்மாவுடன் ஷெனாய்நகர் பாரதிபுரம் முதல் தெருவில் உள்ள அவன் வீட்டுக்கே போய் நியாயம் கேட்டேன். எங்களை அவன் அம்மா சாந்தியும் அக்கா அர்ச்சனாவும் சேர்ந்துகொண்டு அடித்துத் துரத்தினார்கள். அதன்பின்னும் அவன் ஓட்டலுக்குக் கூப்பிட்டு தொல்லை கொடுத்தான். அவன் தொல்லை தாங் காமல், தூக்குமாட்டிக்கிட்டேன். ஆனால் எப்படி யோ எங்கம்மா என்னைக் காப்பாத்தி மருத்துவ மனையில் சேர்த்துட்டாங்க'' என்று தேம்பினார்.
சிவகாமியின் அம்மா லதா, ""தூக்கில் தொங்கிய என் மகளை, எதிர் வீட்டுத் தம்பியின் உதவியோடு மீட்டு, வடபழனியில் இருக்கும் தனியார் ஆஸ்பிட்டல்ல சேர்த்தோம். ரெண்டு நாள் கழிச்சிதான் சிவகாமிக்கு நினைவு திரும்புச்சு. தூக்குக் கயிற்றால் நரம்பு கட் ஆனதால், அவளோட இடது கால் செயல் இழந்து போச்சு. வாழ் கையையும் தொலைத்து, தன் காலையும் இழந்து கிடக்கும் என் மகளுக்கு நேர்ந்த கதி வேற யாருக்கும் வரக்கூடாது. வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு எங்களை அடிக்கடி வரவச்ச போலீஸ்காரங்க, பேருக்கு அந்தப் படுபாவி மீது எஃப்.ஐ.ஆர். போட்டுட்டு, அவனை சுதந்திரமாக திரியவிட்டுட்டாங்க'' என்றார் கண்ணீருடன்.
இது தொடர்பாக சிவகாமியின் வழக்கறிஞர் லலிதாவிடம் பேசியபோது, ""குற்றவாளி அருண் குமார் போலீசால் முற்றிலும் காப்பற்றப்பட்டு வருகிறார். அவரது முன்ஜாமீன் ரத்து செய்யப்பட் டும் இடையில் நடக்கும் பண விளையாட்டால் இதுவரை கைது செய்யப்படலை. திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்து ஏமாற்றிய குற்றவாளி மீது, உச்சநீதிமன்ற அறிவுரையின்படி 375 ஆவது பிரிவின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருக்கனும். அதைத் தவிர்த்து விட்டு 417ஆவது பிரிவிலும் (ஏமாற்று தல்), 323 பிரிவிலும் (காயப்படுத்துதல்) மற்றும் 506 பிரிவிலும் (பெண்களின் மாண்பை குறைக்கும் செயலில் ஈடுபடுதல்) மட்டுமே வழக்கைப் பதிவு செய்திருக்கிறது போலீஸ். தற்கொலைக்கு தூண்டியது பற்றி வழக்கே பதியவில்லை. தவறுக்குத் துணை போகும் போலீசார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றார் அழுத்தமான குரலில். வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேணுகாதேவியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, பதில் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
மேலும் சென்னை மாநகர பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியைத் தொடர்பு கொண்டு, சிவகாமிக்கு நேர்ந்தது குறித்து விவரித்தோம். சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளிக்கு உரிய தண்டனை வாங்கித் தருவோம் என்றும் உறுதியளித்தார்.
மன்மத மிரு கத்தால் பாதிக்கப்பட்ட சிவகாமிக்கு நீதி கிடைக்குமா?
-அரவிந்த்