வால்பாறையில் தாயின் கண்முன்னே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி சிறுத்தையால் இழுத்துச் செல்லப்பட்டு, மறுநாள், உடல் துண்டுதுண்டான நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறு குழந்தைகள், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளால் தொடர்ச்சியாகக் கொல்லப்படுவதற்கு மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமையே காரணமாகிறது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை வால்பாறையில், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் கள் 54க்கும் அதிகமாக உள்ளன. தலைமுறை தலைமுறையாக அங்கே வேலைபார்க்கும் தொழிலாளர்கள் தவிர, பீகார், ஒரிஸ்ஸா உள்ளிட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் மட்டும் சுமார் 35,000க்கும் மேற்பட்டோர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/valparai_0.jpg)
இதில், பச்சைமலை எஸ்டேட் பகுதியி லுள்ள காளியம்மன் கோவில் முன்புள்ள லைன் குடியிருப்பில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா, மோனிகா தேவி தம்பதியினர் தங்களது இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக் கிழமையன்று மாலை 5.30 மணியளவில் தொழிலாளர்களின் குழந்தைகள் காளியம்மன் கோவில் லைன் குடியிருப்பின்முன் விளையாடிக்கொண்டிருக்க, அங்குள்ள பெண்கள் அருகிலிருந்த தண்ணீர்க் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
"கொஞ்சம் இருட்டியிருந்தது. மழை தூறிக்கொண்டிருந்தது. அவரவர் வீட்டிற்குத் தேவையான தண்ணீரைப் பிடிக்க இங்க நிக்கையில் எங்கிருந்தோ வந்த சிறுத்தை ஒன்று மோனிகா தேவி மக ரோஸ்லி குமாரியை இழுத் துட்டுப் போயிருச்சு. அம்மா கண் முன்னே குழந்தையை சிறுத்தை இழுத்துட்டுப் போன நிலையில், சத்தம் போட்டு அத்தனை பேரையும் கூப்பிட்டுத் தேடிப் பார்த்தோம். அதன்பின்னர் எஸ்டேட்டில் தகவலைக்கூறி குழந்தை ரோஸ்லி குமாரியை எஸ்டேட்காரர்கள், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் தேடிப் பார்த்தோம். சிறிது தூரத்தில் ரோஸ்லி குமாரி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்தக் கறையுடன் தேயிலைத் தோட்டப் பகுதியில் கிடந்தது. ஆனால் சிறுமியின் உடல் கிடைக்கவில்லை. இரவு சுமார் 9.30 மணி வரை தேடியும் இருட் டும், மழையும் அதிகமாயிட்டதால் வேறு வழியில்லாமல் வீட்டிற்கு திரும்ப வேண்டியதாச்சு. அவங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல." என்கின்றார் அவர்களின் உறவினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/valparai2.jpg)
சனிக்கிழமையன்று அதிகாலையி லேயே உள்ளூர் பகுதியினர் உதவியுடன் காவல்துறையும், வனத்துறையும் சிறுமி ரோஸ்லி குமாரியை தேடத் துவங்கியது. மோப்ப நாய் மற்றும் ட்ரோன் உதவியுடன் அந்தப் பகுதியை சல்லடையாக சலிக்க, 300 மீட்டர் தொலைவிலுள்ள யூகலிப்டஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் காலை 9.30 மணியளவில் துண்டாக சிதைக்கப்பட்ட மார்புடன் கூடிய தலைப்பகுதியை மட்டும் மீட்டனர் மீட்புக்குழுவினர். மேலும், பல்வேறு இடங்களில் சிதறிக்கிடந்த சிறுமியின் உடல் பாகங்களை மீட்ட மீட்புக்குழு, பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
"போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்த இறப்பிற்குக் காரணம். 1995லிருந்து தற்போது வரை ஏறக்குறைய 20-க்கு மேல் பலி நிகழ்ந்திருக்கிறது. 17ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் காபி மற்றும் தேயிலைக்காக வால்பாறை பகுதிக்கு வந்து சுமார் 220 சதுர
கி.மீ பரப்பளவில் காடுகளை அழித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அன்று இங்குள்ள காடர் உள்ளிட்ட பழங்குடியினரோடு சமதளத்தில் வசித்தவர்களையும் வேலைக்காக அமர்த்தினர் பிரிட்டிஷார். காடுகளைத் திருத்தி அழிக்கும் போது மேடு, பள்ளமான சில துண்டுச் சோலைகளை தவிர்க்கவேண்டிய சூழல் அப்போது. அந்த துண்டுச் சோலைகளே விலங்குகளுக்கு இப்பொழுது மறைவிடம். இங்கு வசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அருகே சுமார் 2 கி.மீட்டரில் காடு இருக்கின்றது. ஆகையால் விலங்குகளோடு வசிக்க வேண்டிய கட்டாயம் மனிதர்களுக்கு. இருப்பினும் விலங்குகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பொதுவாக சிறுத்தைகள் கூச்ச சுபாவம் கொண்டவை. மனிதர்களைப் பார்த்தால் விலகி ஓடும். தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுக்குள்ளும், வளர்ப்புப் பிராணிகளை பாதுகாப்பான கூண்டிற்குள்ளும், கால்நடைகளை வீட்டை விட்டுத் தூரமாக அடைத்தும், வீட்டுக் குப்பைகளையும், மாமிசக் கழிவுகளையும் உடனடியாக அப்புறப்படுத்தினாலும் மட்டுமே சிறுத்தை வராது.
பெரும்பாலான தொழிலாளர்களின் வீடுகளில் குழந்தைகள் மறைவான இடங்களில் விளையாடுவதை கண்டுகொள்வதில்லை. அதுபோல் தங்கள் வீட்டு உணவுப் பொருட் களை அருகிலுள்ள வீடுகளுக்கு கொடுக்க இரவு நேரம் பாராது அனுப்பி வைக்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டும். இன்னொன்று, இப்பொழுது இங்குள்ள தொழிலாளர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள். என்ன தான் உரக்கக் கூறினாலும் அதற்கு செவிமடுப்பதில்லை. அதனால்தான் இதுபோன்ற பலிகள். விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே உயிர்ப் பலியை தடுக்க முடியும்'' என்கின்றார் வனவிலங்குகள் ஆராய்ச்சியாளரான கணேஷ் ரகுநாதன்.
தமிழக அரசு சார்பில் வனத்துறை, காவல்துறை மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை எனும் தனியார் அமைப்பு உள்ளிட்டவைகள் போட்டி போட்டுக்கொண்டு விலங்குகளை எதிர்கொள்ளுதல் குறித்தான விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றன. இதில் நாடகம், தெருக்கூத்து ஆகியன அடக்கம். ஆனால் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை புரிந்து செயல்படுவது மக்களின் வேலைதானே?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/valparai-t.jpg)