லைஞர் கொண்டுவந்த நல்லதங்காள் அணைக்கட்டு திட்டத்தை ஆமைவேகத்தில் நகர்த்திக் கொண்டு போகிறது அரசு. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, தொகுதி மக்களை திரட்டி போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார் எம்.எல்.ஏ. சக்கரபாணி.

ss

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதி களில் ஒட்டன்சத்திரம் சட்ட மன்றத் தொகுதிதான் விவசாயம் நிறைந்த தொகுதி. இத் தொகுதி யில் உள்ள தொப்பம்பட்டி ஒன்றியத்தில் இருக்கும் கொத்தையம் நல்லதங்காள் ஓடையில் தடுப்பணை கட்டினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக் கும் என கடந்த 2010-ல் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணியிடம் அப்பகுதி விவசாயிகள் முறையிட்டனர். அப்போது முதல்வராக இருந்த கலைஞரிடம் தொகுதி மக்களுக்காக நல்லதங்காள் அணைக்கட்டு கட்டி கொடுக்க வேண்டும் என சக்கரபாணியும் வலியுறுத்தியதின் பேரில்தான் நிதி நிலை அறிக்கையில் நல்லதங்காள் அணை கட்டப்படும் என கலைஞரும் அறிவித்து நிதி ஒதுக்கினார். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியும் அணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி பணிகளையும் தொடங்கி வைத்தார்.

தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கொத்தையம், தேவத்தூர், கொடுவார்பட்டி, வாகரை, பொருளூர், கள்ளிமந்தையம், கோடாங்கிபட்டி, கப்பல்பட்டி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமப்பகுதியில் விவசாயநிலங்களும் பயனடையும். குடிநீர் பிரச்சனைக்கும் இந்த அணையின் மூலம் தீர்வு கிடைக்குமென அப்பகுதி மக்கள் கனவு கண்டு வந்தது பகல் கனவாகவே இருந்து வருகிறதே தவிர அணையின் பணிகள் முடிந்தபாடில்லை.

Advertisment

""கடந்த ஒன்பது வருடமாக இந்த அணையின் பணிகளை முடித்துக்கொடுக்க இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை. ’’247 ஏக்கரில் 17கோடியே 50லட்சம் செலவில் அணை கட்டப்பட்டு வந்தாலும் கூட பணிகள் இன்னும் ஆமை வேகத்தில்தான் நடந்துவருகிறது. அணையை சுற்றி மண் மூலம் தடுப்புச் சுவர் எடுத்தும்கூட அதில் கல் பதிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். அதன்மூலம் சமீபத்தில் பெய்த மழைக்கே அங்கங்கே தடுப்புச் சுவரில் மண்அரிப்பு ஏற்பட்டு வருகிறது''’என்று வேதனையுடன் கூறுகிறார் கொத்தையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ்.

நிலத்தடி நீரும் கேணிகளுக்கு தண்ணீர் வரத்தும் இல்லாததால் மக்காச்சோளம், பருத்தி, முருங்கை, கண்வள்ளிக்கிழங்கு போன்ற விவசாயமும் சரிவர செய்ய முடியவில்லை. அதைவிட கொடுமை என்னவென்றால், குடி தண்ணீர் கூட பணம் கொடுத்துதான் வாங்குகிறோம். அரைகுறையாக உள்ள அணையின் பணிகளை சீக்கிரம் முடித்துக்கொடுத்தால் வரக்கூடிய மழையின்மூலம் அணையில் தண்ணீரும் பெருகும். அதன்மூலம் வருடத்திற்கு இரண்டு போகவிவசாயமும் செய்ய முடியும். குடிதண்ணீரும் நிரந்தரமாகக் கிடைக்கும்''’’என்கிறார் கப்பல்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன்.

dda

Advertisment

இத்திட்டம் வருவதற்கு காரணமாக இருந்த ஒட்டன் சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், கொறடாவுமான ddaசக்கரபாணியிடம் இது குறித்து நாம் பேசியபோது, ""கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே அணையின் பணிகளை கிடப்பில் போட்டுவிட்டனர். அதனால், கடந்த 2015-ல் விவசாயிகளை யும், மக்களையும் திரட்டி கொத்தையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினேன். அதன்பின் சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதை தொடர்ந்து உண்ணாவிரதம், பஸ் மறியல் போராட்டங் களை மக்களை திரட்டி செய்தேன். அப்படியிருந்தும் பணிகளை முழுமையாக முடிக்க இந்த அரசு ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறது''’என்று வெடித்தார்.

அவர் மேலும், ""தற்போதுகூட இத்திட்டத்தை உடனே முடித்துக்கொடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறேன். அதன்மூலம் உடனடி யாக பணிகளை முடித்து கொடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தொகுதியில் உள்ள மக்களையும், விவசாயிகளையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறேன்''’என்றார்.

சக்கரபாணியின் மனு தொடர்பாக மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, ""எம்.எல்.ஏ. கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் அணையின் பணிகள் குறித்து விளக்கம் கேட்டிருக்கிறேன். அது வந்த பின்புதான் மேல் நடவடிக்கை என்னவென்று சொல்லமுடியும்''’’ என்கிறார்.

ஆமை வேகத்தில் இருந்து நகர்ந்து புலியின் பாய்ச்சலில் அரசு நடவடிக்கை எடுத்தால் 50 கிராம மக்களுக்கும் நலம்தருவாள் நல்லதங்காள்.

-சக்தி