தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி செப்டம்பர் 11-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதும், அடுத்த முதல்வராக யாருமே எதிர்பாராத பூபேந்திர படேல் முதல்வராகப் பதவியேற்றிருப்பதும் பலரது புருவங்களையும் உயர வைத்துள்ளது.
செப்டம்பர் 11-ஆம் தேதி குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரதாஸிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த விஜய் ரூபானி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "எனது மாநிலத்துக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இனி கட்சி என்னை என்ன செய்யக் கேட்டுக்கொள்கிறதோ அதனைத் தொடர்ந்து செய்வேன்' என்றதோடு பதவி விலகல் குறித்த மேலதிக காரணங்களைச் சொல்லாமல் மௌனமானார்.
விஜய் ரூபானியின் பதவி விலகல் குறித்து அம்மாநிலத் தில் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் சொல்லப்படு கின்றன. அவற்றில் முதன்மையானது, கோவிட் தொற்று இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் தோற்றுப்போனதுதான்.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் தானாகவே முன்வந்து கொரோனா நிர்வாகத்தில் மாநில அரசின் குறைபாடு களைச் சுட்டிக்காட்டிய குஜராத் உயர்நீதிமன்றம், கோவிட் பிரச்சனையை குஜராத் அரசு சரிவரக் கையாளவில்லை என பட்ட வர்த்தனமாக அறிவித்தது. தனியார் வாகனங்களில் வந்தவர்களுக்கு சிகிச்சை யளிக்காதது, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் அனைத்தையும் விமர்சனம் செய்தது. மருத்துவமனைக்கு வெளியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் சாகக்கூடாது என கண்டித்தது.
தீபக் படேல் எனும் பத்திரிகையாளர் "திவ்ய பாஸ்கர்' எனும் பத்திரிகையில் கொரோனா மரண எண்ணிக்கையில் மாநில அரசு செய்யும் ஊழல்களை, அரசு வழங்கும் இறப்புச் சான்றிதழ்களின் துணைகொண்டு மாவட்டவாரியாக இறப்புகளைக் கணித்து வெட்டவெளிச்சமாக்கினார்.
எதிர்க்கட்சிகள் குஜராத் பா.ஜ.க. அரசின் கொரோனா தடுமாற்றத்தையும் செய லின்மையையும் கடுமை யாக விமர்சனம் செய் தன. மக்களின் ஆத்திரத்தை மடை மாற்றுவதற்காக விஜய் ரூபானி பலிகடாவாக மாற்றப் பட்டார் என பா.ஜ.க. தரப்பிலே சொல்கிறார்கள்.
விஜய் ரூபானியின் தலைமைப் பண்பு மேலேயே விமர்சனம் வைக்கிறார்கள் இன் னொரு தரப்பினர். அமைதியான சுபாவம் கொண்ட ரூபானி யால் சக அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் கடிந்து, தான் விரும்பும் பலன்கள் கிடைக்கும்படி வேலைவாங்கத் தெரியவில்லை. விளைவு, பல்வேறு அரசியல், கட்சிப் பணிகளில் தேக்கம். தேர்தலுக்குள் கட்சிக்குள் சுறுசுறுப்பைக் கொண்டுவருவதற்காக ரூபானியை வெளியே சொல்லி பூபேந்திர படேலுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.
குஜராத்தின் பா.ஜ.க. தலைவர் சி.ஆர். படீலுக்கும் விஜய் ரூபானிக்குமென கெமிஸ்ட்ரி சரிவர வேலை செய்யவில்லை எனவும், படீலின் தொடர் புகார்கள் கனிந்துவரவும், விஜய் ரூபானி முதல்வராகப் பதவியேற்று ஐந்து வருடம் முழுமை பெற்றதையடுத்தும் அவர் வெளியேற்றப்பட்டார் எனவும் சொல்கிறார்கள்.
விஜய் ரூபானி விலகியதும், அன்றைய தினமே அடுத்த முதல்வர் யார் என சமூக ஊடகங்களில் சூடுபறக்க விவாதிக்கப் பட்டது. துணை முதல்வரான நிதின்படேல் பெயரும் மாநில பா.ஜ.க. தலைவரான சி.ஆர். படீல் பெயரும் முதன்மையாகச் சொல்லப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாளவியா பெயரும் அதற்கு இணையாகச் சொல்லப் பட்டது. லட்சத்தீவு விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளான பிரபுல் கோடா படேலுக்கும் வாய்ப்பிருப்பதாக பா.ஜ.க.வில் பேச்சு அடிபட்டது. ஆனால், யாருமே எதிர் பாராத வகையில் பா.ஜ.க. தலைமை பூபேந்திர படேல் பெயரை சிபாரிசு செய்து திகைப்பில் ஆழ்த்தி யுள்ளது. பூபேந்திர படேல், குஜராத்தின் முன்னாள் முதல்வரான ஆனந்திபென் படேலுக்கு நெருக்க மானவர் என்கி றார்கள். மன்சுக் மாளவியா, நிதின் படே லைப் பின்னுக் குத் தள்ளி, பூபேந்திர படேல் தேர் வாகிறார் என்றால், பின்னணியில் ஆனந்திபென் னின் ஆதரவு இல்லாமலிருக்காது என் கிறார்கள். தவிரவும் காங் கிரஸின் ஹர்திக் படேலைப் போலவே, படேல் சமூகத் தினரின் பெருவாரியான ஆதரவைப் பெற்றவர் பூபேந்திர படேல்.
டெல்லியில் மட்டும் கோலோச்சிக்கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், பஞ் சாப்புக்கு அடுத்தபடியாக குஜராத் மேலும் தன் கவனத் தைத் திருப்பியிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 77 தொகுதிகளில் குஜராத்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு தோல்வி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் திகில் தெரியும் இந்தச் சூழலில்தான் குஜராத் முதல்வரை மாற்றியிருக்கிறது பா.ஜ.க.
கொரோனாவின் பாரத்தை விஜய் ரூபானியின் தோளில் ஏற்றிவிட்டு, இருப தாண்டுகளுக்கு மேலாகத் தொடரும் வெற்றிச் சித்திரத்தை குஜராத்தில் தொடர நினைக் கிறது பா.ஜ.க. குஜராத் வாக் காளர்கள் என்ன நினைத் திருக்கிறார்கள் என்பதுதான் இன்னும் தெளிவாகவில்லை.
கடந்த ஓராண்டில் மட்டும் பா.ஜ.க. தலைமையின் கெட்-அவுட் உபச்சாரத்துக்கு உத்தரகாண்டின் திரிவேந்திர ராவத், தீரத்சிங் ராவத், கர்நாடகாவின் எடியூரப்பா, குஜராத்தின் விஜய்ரூபானி ஆளாகியிருப்பதால், மற்ற பா.ஜ.க. முதல்வர்கள் மத்தியில் மெல்லிய பதற்றம் எழத் தொடங்கியுள்ளது.