(28) உளவுத்துறையினர் ஊடுருவல்
முதல் நாள்தான் அந்தச் செய்தியை வாசித் திருந்தேன். கால்சா எய்ட் (kalsa Aid) நிறுவனத்தை சார்ந்தவர்கள் மீது, வருமான வரித்துறையினரின் நடவடிக்கை என்று. இந்த தகவல் காட்டுதீ போல் போராட்டக் களத்தில் பரவத் தொடங்கியது. வருமானவரித் துறை செய்வதை, நியாயப்படுத்தி சில ஊடகங்கள், ‘கால்சா எயிட்’ செய்யும் செயல்கள் அனைத்தும் பயங்கரவாதச் செயல்கள் என்று பிரச்சாரம் செய்தன. போராட்டக் களத்தில் இருந்த எளிய மக்கள் இதைக் கேட்டு கொதிப்படைந்து போயிருந்தார்கள். அவர்கள் தான் உண்மையோடு சம்மந்தப்பட்டவர்கள்.
கால்சா எய்ட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு வந்தது. பேரிடர் காலங்களிலும், சமூக மோதல்களால் மக்கள் துயரத்தின் எல்லைக்கு செல்லும் காலங்களிலும் உதவுவதற்கு என்று உலக அளவில் பதிவு செய்து இயங்கும் சட்டப்பூர்வமான அமைப்பு தான் கால்சா எய்ட். இதற்கான இந்திய பிரிவும் இங்கு செயல்படுகிறது. இதனுடைய பணிகளை அறிந்து கொள்ள இணையதளத்தை தேடினால் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன.
நான் டெல்லிப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய பல மாதங்களுக்குப் பின் இப்பொழுது இணையதளத்தைத் தேடிப் பார்த்தில் கோவிட் இரண்டாவது அலைக்கு இவர்கள் செய்த உதவி பெரும் பட்டியலுடன் பதிவாகியிருந்தது. நான் மிகவும் வியந்துபோனேன். உலகம் முழுதிலுமிருந்து, கப்பல் கப்பலாக ஆக்ஸி ஜன் டேங்கர்கள், வெண்டிலேட்டர்கள், சிறிய அளவில் ஆக்ஸிஜன் தரும் செறிவூட்டிகள் என்று இவர்கள் திரட்டி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் நேபாளத்தின் பூகம்பத்திலும், கேரளாவை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிய வெள்ளச் சேதத்தி

இதற்கு முன்னர் நேபாளத்தின் பூகம்பத்திலும், கேரளாவை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிய வெள்ளச் சேதத்திலும் இவர்கள் பங்களிப்பு மகத்தானது. நெருக்கடி மிகுந்த இடங்களுக்கு இவர்கள் நேரில் சென்று ஆற்றிய அரிய செயல்களை வாசிக்க வாசிக்க அவர்கள் மீதான மதிப்பு கூடிக் கொண்டே சென்றது. இவர்கள் மீது ஏன் பயங்கரவாத முத்திரை என்ற கேள்வி எனக்குள் எழுத் தொடங்கியது.
போராட்டத்திற்கு யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ, அவர்களை எல்லாம் பயங்கர வாதிகள் என்று மோடி அரசு பட்டியல் தயாரித்து வைத்துக் கொள்வது போராட்டக் களத்தில் ஒரு கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது. எனக்குள்ளும் இதனால் ஒருவித கோபம் தலைதுக்கியது. அப்பொழுது சென்னையிலிருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது. இயக்குநர் ராஜூமுருகன் பேசினார். அவர் மீது என்றும் எனக்கு தனி மதிப்பு உண்டு. தமிழகத்தில் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட இயக்குநர்களில் குறிப்பிட்டு சொல்லத் தக்கவர். போராட்டக் களம் பற்றிய தகவல்களை என்னிடம் ஆர்வமுடன் கேட்டறிந்தவர், போராட் டத்தின் முக்கியப் பகுதிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்றார். இதன்பின்னர் இதற்கான திட்டமிடுதல் குறித்து தோழர் சிந்தன் என்னிடம் பேசினார் காம்ரேட் டாக்கீஸ் சார்பில் இதை தயாரிப்பதாகச் சொன்னார்கள்.
இது சார்ந்த ஒளிப்பதிவு, கால்சா எய்ட் பற்றி தெரிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பை அமைத் துக் கொடுத்தது. நேரம் ஒதுக்கி பல இடங்களின் நிகழ்வுகளை பதிவு செய்தோம். இந்தியும் ஆங்கி லமும் தெரிந்த ஒளிப்பதிவாளர் டெல்லியிலிருந்து வந்திருந்தார். இரண்டு நாள்கள் படப்பிடிப்பு. பலரை சந்தித்து பேட்டி எடுத்தோம். அப்பொழுது நாங்கள் திரட்டிய தகவல்களில் எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்த நிறுவனம், கால்சா எய்ட் நிறுவனம்.
ஒரு நீண்ட வரிசை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைக்காக வரிசையில் நின்றார்கள். அவர்களை ஒழுங்குபடுத்தி, தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள, கால்சா எய்ட் தொண்டர்கள் அங்கு காத்திருக்கிறார்கள். அவர்களிடம் கண்டிப்பு தெரிந்தாலும்,. முகத்தில் ஒருவிதமான புன்முறுவல் இருந்துகொண்டேயிருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மேஜை நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள். தனித்தனியான படிவங்கள். ஒவ்வொன்றிலும் பெயர், அலைபேசி எண் ஆகியவை நிரப்படுகின்றன. வரிசை நகர்ந்து கொண்டேயிருக்கிறது. அவர்கள் நகர்ந்து பொருள் வழங்குமிடத்துக்கு வந்து சேரும்போது, அவர்களுக்கு சேரவேண்டிய பொருள் அவர்களுக்காக அங்கு காத்திருக்கிறது.
பொறுப்பாளர்களை சந்தித்து பொருள் வைப்பறை யை பார்க்க வேண்டும் என்கிறேன். நீங்கள் யார் என்று எங்கள் பின்னணிகளைக் கேட் டார்கள். அவ்வாறு கேட்டு உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. போராட்டக் களமெங்கும் பத்திரிகை யாளர்கள் என்ற பெயரில் உளவுத்துறையினர் ஊடுருவியிருந்தனர். கால்சா எய்ட் தொண்டர்கள் எங்களை அழைத்துச் செல்கிறார்கள். எல்லா இடங்களையும் போல அதுவும் ஒரு டெண்டுதான். என்ன பொருள்தான் அங்கு இல்லை. உணவுப்பொருட்கள், குளிருக்கு தேவையான ஆடைகளிலிருந்து சோப்பு, பற்பசை, பிரஸ், எண்ணெய் என்று அனைத்தும் அங்கு இருக்கிறது. எல்லாவற்றையும் காசில்லாத அன்பளிப்பாய் வழங்குகிறார்கள். மனதுக்குள் ஒரு நிம்மதி.
குளிர் நிறைந்த நெருக்கடி மிகுந்த காலத்தில் அனைவருக்கும் உணவு வழங்குவதையும், குளிரில் தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு ஆடை வழங்குவதையும் ஒரு பயங்கரவாத நட வடிக்கை என்று அரசு மனசாட்சியை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விற்பனை செய்துவிட்டுக் கூறுவது எத்தனை மோசடித்தனமானது.
இதற்குப் பின்னர் மாதர் சங்கத்தின் செயலாளர் மஞ்சுளா தலைமையிலான குழுவினர் தங்கள் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்துகொண் டார்கள். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த எங்களை ஒரு மாலைப்பொழுதில் இருவர் அழைத்து சென்றார்கள். ‘மனுதி’ அமைப்பைச் சார்ந்த, செல்வி, வசுமதிதான் அந்த இருவர். "இரவு வருவதற்குள் நாம் அங்குசென்று பொருட்களை வாங்க வேண்டும்' என்றார்கள். "நேரமாகிவிட்டது உடனே புறப்படுங்கள்' என்றார்கள். நாங்கள் அனைவவரும் அவசர அவசரமாக புறப்பட்டோம்.
அங்குள்ள மக்கள் குளிர் என்றாலும், அதைத் தாங்கிக்கொள்கிறார்கள். நாங்கள் நடுங்கி கொண்டே சென்றோம். எங்களைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். தமிழகத்திலிருந்து வந்தோம் என்று சொன்னவுடன் வரிசையில் நின்றவர்கள் எங்களுக்கு வழிவிட்டார்கள். அதற்குள் சிலர் கால்சா எய்ட் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து விட்டார்கள். இரண்டு தொண்டர்கள் விரைந்து வந்தார்கள். எங்களை உடன் அழைத்துச் சென்றார்கள். டீ கொடுத்துவிட்டு, "சாப்பிட வேறு ஏதாவது வேண்டுமா?' என்றார்கள். உயர்ந்தபட்ச கௌவரம் எங்களுக்கு அளிக்கப்பட்டது. "வெகு தொலைவிலிருந்து போராட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களை கௌரவப்படுத்து வது, எங்கள் கடமை' என்று அவர்கள் கூறினார்கள். இதைத் தவிர அங்கே எங்களுக்கு மற்றொரு ஆச்சரியமும் காத்திருந்தது'' என்றார் மஞ்சுளா.
"விண்ணப்பங்கள் எதிலும் எங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவில்லை. முகவரி அலைபேசி எதுவுமே கேட்கவில்லை. நேரடியாக பொருட்கள் காப்பறைக்கு அழைத்து சென்றார்கள். நீண்ட விசாலானமான அறை. எல்லாப் பொருட்களும் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் அளவு எது என்று பார்த்து, உங்களுக்குத் தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். தேவையானது எது என்று தேர்வு செய்து எல்லோரும் எடுத்துக் கொண்டோம்.
குளிருக்கு ஆடை கிடைத்தது என்பதைவிட அவர்கள் செலுத்திய அன்பும் வழங்கிய கௌரவரமும் எங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. போராட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவர் குறித்து அவர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறை எங்களை மிகவும் நெகிழ வைத்துவிட்டது'' என்றார் மஞ்சுளா. இதன்பின்னர் மஞ்சுளாவிடம் அவர்கள் கூறியது இன்னமும் நெகிழ வைக்கிறது. பெண்கள் தங்குவதற்கு இடம் வேண்டுமென் றால் சொல்லுங்கள் அதையும் தருகிறோம் என்று கேட்டிருக்கிறார்கள்.
"இரண்டு நாள் ரயில் பயணம். இங்கு வந்தபின், தங்குவதற்கு ஒரு சிறிய இடம் தான் கிடைத்தது. அதில் எல்லோரும் தங்கியிருந்தோம். அது எங்களுக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. இந்த சூழலில் எங்களுக்கு தங்குவதற்கு இடம் தருகிறேன் என்று கால்சா கூறியதில் எங்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி'' என்று மஞ்சுளா கூறினார்.
போராட்டக் களத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தொடர்ந்து பல மாதங்கள் மக்கள் அங்கேயே தங்கி யிருந்தார்கள். அந்த நேரங்களிலெல்லாம் உடனிருந்து உதவி செய்தவர்கள் ’கால்சா எய்ட்’ அமைப்புதான். ஆனால் அதை பயங்கரவாத இயக்கம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இது எத்தனை கேவலமான செயல். உண்மையில் யார் பயங்கர வாதிகள் என்பதை நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
மற்றொன்றும் இதில் பகிர்ந்துகொள்ள எனக்குத் தோன்றுகிறது. அது ஒவ்வொரு இளைஞர்களின் தனிப்பட்ட செயல்பாடு பற்றியது.
(புரட்சிப் பயணம் தொடரும்)