ந்த அனல் வார்த்தைகளால் ஆன பதிலால் நான் எங்கோ அழைத்துச் செல்லப்படுகிறேன். கோபம் கொண்டு அவர்கள் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகள் மீண்டும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

""உங்களுக்குப் பகத்சிங் தெரியுமா?'' என்றார் ஒருவர். அவரது பெயர் பக்சி சிங். ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று பூர்வீக நிலத்தில், பூர்வீகக் கிராமத்தில் விவசாயம் செய்கிறார். அவரது கோபத்தின் காரணத்தை நான் புரிந்துகொண்டேன். பஞ்சாப்பின் பகத்சிங் யாருக்குத்தான் தெரியாது? அவர் கேட்டதன் பொருள் வேறு.

dd

என் உணர்வுகள் கிளர்ந்தெழத் தொடங்கின. அந்த மாவீரன் எழுப்பிய "இன்குலாப் ஜிந்தாபாத்', "புரட்சி வாழ்க' என்ற முழக்கம் என் மனக்குகையில் ஒரு நூறுமுறை அந்தத் தருணத்தில் அதிர்வுகளை உருவாக்கத் தொடங்கியது.

Advertisment

மேலும் அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் முக்கியமானவை... ""அன்றைய சுதந்திரத் திற்கு பகத்சிங் உயிர். இன்றைய விவசாயிகளின் வாழ்க்கையைப் பறிக்கும் சட்டங்களை ரத்து செய்ய எங்கள் உயிர்''’என்றார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை, என் கண்ணுக்குத் தெரியாமல் பனி போர்த்திய டிராக்டர் வண்டிகளிலும், இருள் கவிந்த டெண்டுகளிலும் இருப் பவர்கள் பகத்சிங்கு களாகவே எனக்குத் தெரிந்தார்கள். இதன்பின்னர் இதே கேள்வியை மேலும் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். அனைவரும் "செய் அல்லது செத்து மடி' என்பதை, நெஞ்சில் நிறுத்தி பதிலளித்தவர்களாகவே தெரிந்தார்கள்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்கள் எவ்வாறு மோசடித்தனமானவை என்பதை முதலில் உணர்ந்து கொண்டவர்கள் பஞ்சாப் மக்கள்தான். அவர்களின் கடந்த கால வரலாறு பல்வேறு புரட்சிகரமான உள்ளடக்கங் களைக் கொண்டிருந்தது. பகத்சிங், உத்தம்சிங் என்று இவர்களின் புரட்சிகர அனுபவம் தனித்துவம் வாய்ந்தது.

பகத்சிங் இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் கட்சியைத் தொடங்கி, லாலா லஜபதிராயை கொன்றவனுக்கு மரண தண்டனை அளித்து, சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம், பெருமை பேசியவர்களின் பிரிட்டிஷ் இந்திய நாடாளுமன்றத்தில் வெடி குண்டு வீசி, தூக்குத் தண்டனையை மன மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டவன். உத்தம்சிங், ஜெனரல் டயரை இங்கிலாந்திலேயே சுட்டுக் கொன்றான். இந்த சபதத்தை நிறைவேற்ற இவனுக்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டன. காஷ்மீர் வழியாக ஜெர்மன் தப்பிச்சென்று, இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் சில ஆண்டுகள் தங்கியிருந்து, உரிய தருணத்திற்காக காத்திருந்தான். 1940-ஆம் ஆண்டில் ஜாலியன் வாலாபாக் கொலைகாரன் ஜெனரல் டையரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக, இங்கிலாந்து பென்டோனோ சிறையில் தூக்கிலிடப்பட்டான்.

Advertisment

mm

இன்றும் உலகின் பல நாடுகளில் வாழும் இந்தியர்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறவர்கள் பஞ்சாப் மக்கள்தான். குறிப்பாக சீக்கிய இன மக்கள். அவர்களுடைய இந்த உலக அனுபவம், ஒரு தேசத்தின் நிலத்தையும், வளத்தையும் எவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்கள் மோசடியாக கைப்பற்றிக்கொள்கின்றன என்பதை நன்கு உணர்ந்திருக்கிறது. மத்திய அரசு இந்த மூன்று விவசாய விரோதச் சட்டங்களை கொண்டு வந்தபோது அதை எதிர்த்து முதலில் போர்க்குணம் கொண்ட இந்த மக்கள்தான் போராடத்தொடங்கினார்கள்.

பஞ்சாபில் மொத்தம் 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து விவசாயிகளின் அந்தோலன் என்ற கூட்டு அமைப்பை முதலில் விவசாயிகள் உருவாக்கினார்கள். இவர்கள் செய்த தொடர் பிரச்சாரத்தின் மூலம் இந்த கொடிய சட்டங்களின் அபாயத்தை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதற்கான கோபத்தீ பஞ்சாப் முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் கதவடைப்பு, போக்குவரத்தை நிறுத்துவது என்று போராட்டம் தொடங்கியது. கடைசியில் முழு ரயில் ஓட்டத்தையும் நிறுத்திவிட்டார்கள்.

பஞ்சாப் விவசாயிகளுக்கு யாரை எதிர்த்து போராடுகிறோம் என்பது மிகவும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. இதுதான் இவர்கள் போராட்டத்திற்கான முதல் வெற்றியாக நான் உணருகிறேன். அவர்கள் நால்வர் கூட்டணியை எதிர்த்து நிற்பதாக அறிவித்தார்கள் மோடி, அமித்ஷா, அம்பானி, அதானி என்று பட்டிய லிட்டார்கள். கார்ப்பரேட் அரசியலுக்கு இருவர். கார்ப்பரேட் வியாபாரத்திற்கு இருவர் என்று, தங்கள் எதிரிகளை எவ்வளவு தெளிவாகக் கண்டுபிடித்து, இவர்களால் சொல்ல முடிகிறது என்று நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அம்பானியின் கார்ப்பரேட் கொள்ளை உலகறிந்த ஒன்று, குஜராத்தில் மோடி ஆட்சியைக் கைப்பற்றியபோது, தேவையான பணத்தை கொடுத்து, ஆரம்பத்தில் தேர்தலுக்கு உதவியவரும், ஆட்சிக்கு வந்தபின்னர் பயன் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டவர் அதானி. காலப்போக்கில் மோடி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இவரது வியாபாரக் கொள்ளை கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. மோடியின் கூட்டு, அக்ரோ இண்டஸ்ட்ரி என்ற பெயரில் இந்திய நிலங்களில் பெரும் பகுதியையும் விவசாயப் பொருள்களின் விற்பனை உரிமையையும் கைப்பற்றிக் கொள்ளும் சூழ்ச்சிக்குத் தூண்டியது.

இன்று விவசாயம் ஒரு தொழில் என்று அழைக்கப்படுகிறது. தங்கள் பொருளை மதிப்பூட்டும் பொருளாக மாற்றி தாங்களே விற்பனை செய்யும் கூட்டு விநியோக முறை பற்றி விவசாயிகள் இன்று பரவலாக யோசித்து வருகிறார்கள். இதை அக்ரோ இன்டஸ்ட்ரியாக மாற்றி, விவசாயிகளின் முழு விற்பனை உரிமை யையும் நிலத்தையும் தானே எடுத்துக்கொள்ள ஆசைப்படும் அதானியின் சூழ்ச்சியை விவசாயிகள் ஆரம்பத்திலேயே புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

far

இந்தச் சூழலில் பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் பிரமாண்டமான சேமிப்புக் கிடங்குகளை கட்டத் தொடங்கினார் அதானி. தங்கள் மாநிலத்தில் விவசாய விளை பொருளையும் குறைந்த விலைக்கு வாங்கி கிடங்கில் பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்கும் சூழ்ச்சி நிறைந்த அயோக்கியத்தனம் இது என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டார்கள் விவசாயிகள். அரியானா மாநில விவசாயிகளும் இந்த ஆபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத்தொடங்கினார்கள். போராட்டம் வேகம் கொண்டது.

இதை மோடி அரசால் எதிர்கொள்ள முடியவில்லை. மூடி மறைக்க கைக்கூலிகளை கையில் வைத்துக்கொண்டு, அவதூறு பிரச்சா ரம் செய்யத் தொடங்கினர். காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் கூறியது அவர்களைக் கோபப்படுத்தியது. தந்தை விவசாயி என்றால், மகன் ராணுவ வீரன். இதுதான் பஞ்சாப் மக்களின் வாழ்க்கை. இவர்களை தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்றால் யாருக்குத்தான் கோபம் வராது.

புகழ் பெற்ற டெல்லி "சலோ இயக்கம்' இதன் பின்னர்தான் புறப்பட்டது. விவசாயிகள், நவம்பர் மாதம் 26-ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலிருந்து புறப்பட்டார்கள். கிட்டத்தட்ட 10,000 டிராக்டர்கள், டிராலி களுடன் இவர்களது பயணம் தொடங்கியது. ஒன்றின் பின் ஒன்றாக டிராக்டர்கள் அணி வகுத்து டெல்லியை நோக்கிப் புறப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர்சிங். அவரது காங்கிரஸ் அரசு இதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. அரியானா மாநிலம் அவ்வாறு இல்லை. அங்கு பி.ஜே.பியின் மனோகர் லால் கட்டேரியின் ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு அரியானா முதலமைச்சரைப் பயன்படுத்தி, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த பெரும் முயற்சி எடுத்தது.

பெரிய தடைகளும் தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டன. அரை கிலோ மீட்டர் தூரம் அமைந்த இந்த தடைகளை விவசாயிகளால் எதுவுமே செய்ய முடியாது என்று ஆட்சியாளர்கள் கருதினார்கள். வேடிக்கை என்னவென்றால் இந்தத் தடைகளை அகற்றிக்கொள்ள போராட்டக்காரர்களுக்கு இரண்டுமணி நேரம் மட்டுமே தேவைப்பட்டது. இது விவசாயிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி.

மோடி அரசு மிகவும் அதிர்ச்சி அடைந்து போனது. கோபம் கொண்ட விவசாயிகள் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லிக்குள் நுழைந்துவிடுவார்கள் என்ற அச்சம் வந்துவிட்டது அரசுக்கு. கூடுலாக ராணுவப் பொறியாளர்கள் தருவிக்கப்பட்டு 17 அடி ஆழமுள்ள பெரும் குழிகளை டெல்லி எல்லையில் வெட்டினார்கள்.

விவசாயிகள் திரும்பிப் போக வேண்டும் என்பதற்காகவே வெட்டப்பட்ட குழிக்குள்ளேயே மோடி, அமித்ஷா ஆகியோரின் ராஜதந்திரம் எப்படி வீழ்ந்து, விழிபிதுங்கி நின்றது என்பது தனிக் கதை

(புரட்சிப் பயணம் தொடரும்)