Advertisment

தமிழ்ப் பேரகராதி உருவாக்கும் ஜெர்மன் பேராசிரியர்!

ss

"தமிழ் என் தாய்மொழி யில்லை. ஆனால் தமிழ் செய் யுள்கள் என் காதலுக்குரிய வை'”என்கிறார் ஈவா வில்டன்.

ஈவா வில்டன் யார் என்கிறீர்களா?

ஜெர்மனியின் ஹாம்பர்க் பல்கலைக்கழக தமிழ்ப் பேரா சிரியை. அதே பல்கலைக்கழகத் தில் வேதச் சடங்குகள் குறித்துப் படித்து முனைவர் பட்டம்பெற்ற அவர், புதுச் சேரி வந்து அங்குள்ள பிரெஞ்சு நிறுவனத்தில் இருந்தபோது தமிழ் மீதான ஆர்வத்தால் ஈ.வே. கோபால ஐயரிடம் நற்றிணை, குறுந்தொகை குறித்து பாடம் கற்றார். தற்போது ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் தம

"தமிழ் என் தாய்மொழி யில்லை. ஆனால் தமிழ் செய் யுள்கள் என் காதலுக்குரிய வை'”என்கிறார் ஈவா வில்டன்.

ஈவா வில்டன் யார் என்கிறீர்களா?

ஜெர்மனியின் ஹாம்பர்க் பல்கலைக்கழக தமிழ்ப் பேரா சிரியை. அதே பல்கலைக்கழகத் தில் வேதச் சடங்குகள் குறித்துப் படித்து முனைவர் பட்டம்பெற்ற அவர், புதுச் சேரி வந்து அங்குள்ள பிரெஞ்சு நிறுவனத்தில் இருந்தபோது தமிழ் மீதான ஆர்வத்தால் ஈ.வே. கோபால ஐயரிடம் நற்றிணை, குறுந்தொகை குறித்து பாடம் கற்றார். தற்போது ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் தமிழ் எக்ஸ் (பஹம்ண்ப்ங்ஷ்) திட் டத்துக்கு தலைமை தாங்குகிறார். செம்மொழித் தமிழ் துறையில் அவர் ஆற்றிய சிறந்த வெளிநாட் டுப் பங்களிப்புகளுக்காக குடியரசுத் தலைவர் விரு தான குறள் பீடம் விருதை 2015-ல் வென்றுள்ளார்.

Advertisment

hh

ஐரோப்பாவின் ஒரே தமிழ்ப் பேராசிரியை யாக அறியப்படும் ஈவா வில்டன், தமிழின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி செலவில் ஒரு திட்டத்தை முன்னெடுத்திருக்கிருக்கிறார். இத்திட்டத்தில், ஜெர்மனியின் ஹாம்பர்க் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியையான ஈவா வில்டனும் அவ ரது மாணவர்களும் செவ்வியல் மொழியான தமி ழுக்கு ஒரு பேரகராதியை உருவாக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

"முதன்முதலில் இந்தியா வுக்கு கோபால ஐயரை சந்திக்க வந்திருந்தேன். அவருக்கு வெற்றி லை போடும் பழக்கமிருந்ததால் அவர் பேசுவதைப் புரிந்து கொள்ளச் சிரமப்பட்டேன். குறுந்தொகை பற்றி படிக்க விரும்புவதாகக் கூறியதும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந் தார்''’என்று கடந்த காலத்தை நினைவுகூர்கிறார்.

Advertisment

தமிழ் எக்ஸ் திட்டத் துக்கு இந்திய மதிப்பில் ரூ.100 கோடியை ஹாம்பர்க் பல் கலைக்கழகத்தை ஒதுக்க வைத்து, ஒரு முன்னோடித் திட்டத் தில் ஈடுபட்டு வருகிறார். “"சங்க கால தமிழ் இலக்கியம் குறித்து சுமார் 100 மணி நேர உரைகள் எங்களிடம் இருக்கின்றன. எதிர் காலத்தில் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்காக இதனை பாதுகாத்துவைப்பது அவசியம். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம்''’என்கிறார் ஈவா வில்டன்.

"சங்ககாலத் தமிழுக்காக, ஒரு பிரத்யேக தரவுத் தளத்தை உருவாக்குவதே எங்கள் முயற்சி. மக்கள் எளிதில் புரிந்துகொள்ள அவை நடைமுறைத் தமிழிலும் ஆங்கிலத் திலும் இடம்பெற்றிருக்கும். இதற்காக வென்றே ஒரு அகராதியையும் உருவாக்கிவரு கிறோம். நாங்கள் செய்வது ஒரு ஆக்ஸசிபிள் வெர்ஷன். யார் வேண்டுமானாலும் ஒரு செய்யுளை எடுத்துப் படிக்கமுடியும்படி செய்யப்போகிறோம். இது ஒரு முக்கியமான வேலை''’என்கிறார். சென்னையைச் சேர்ந்த நீலா பாஸ்கர், சிங்கப்பூரைச் சேர்ந்த மானஸா விஸ்வேஸ்வரன், ரஷ்யாவைச் நிக்கோலாய், இந்தியாவைச் சேர்ந்த லியோ ரிஷி ஆகியோர் இத்திட்டத்தில் ஈவா வில்ட னுக்கு பக்கத் துணையாக இருக்கின்றனர்.

nkn091124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe