Advertisment

ராங்கால் : இனப்படுகொலை ராஜபக்சேக்கள்! சைலன்ட் கில்லர் ரணில்! தலைமைக் கழகம் வழக்கு! எடப்பாடியின் முதல் வெற்றி! விடாமல் விரட்டும் டெல்லி!

rr

"ஹலோ தலைவரே, இலங்கையில் மீண்டும் ராஜபக்சே சகோதரர்களின் கை ஓங்குது!''”

"ஆமாம்பா, இலங்கையின் புதிய குடியரசுத் தலைவராக, ராஜபக்சேக்களின் ஏஜண்ட் என்று வர்ணிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுவிட்டாரே!''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணிலை, அங்குள்ள சிங்களர்களே சைலண்ட் கில்லர்னு வர்ணிக்கிறாங்க. இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதாரச் சரிவினால், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான கிளர்ச்சி வெடித்ததால், அவர் உயிருக்குப் பயந்து இலங்கையை விட்டு வெளிநாட்டுக் குத் தப்பியோடி இருக்கிறார். இதனால் தற்காலிக அதிபராக ரணில் பொறுப்பேற்றார். புதிய அதிபர் தேர்தலில் ரணிலுடன், நாடாளுமன்ற உறுப்பினர் களான டளஸ் அழகபெருமவும், அநுர குமார திசநாயக்கவும் களத்தில் இறங்கிய நிலையில், ஒற்றை ஆளாக நின்ற ரணில் தோற்கும் நிலைமைதான் இருந்தது.''”

rr

"ஆனாலும் அங்கே மொத்தமுள்ள 225 எம்.பி.க்களில் பெரும்பான்மை பலத்துடன் ராஜபக்சேக்களின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் இருக்காங்களே.''”

"ஆமாங்க தலைவரே, தோற்கும் நிலையில் இருந்த ரணில், தலைமறை வாக இருந்த ராஜபக்சே சகோதரர்களிடம் ரகசியமாகப் பேசித் தனக்கு ஆதரவு கேட்டார். அவர்களும் சில டீலிங்குகளுடன் அவரை ஆதரிக்க முன்வந்தார்கள். இதனால் அங்கே பதிவான 219 வாக்குகளில் 134 வாக்குகளைப் பெற்று புதிய குடியரசுத் தலைவராக ரணில் வெற்றி பெற்றுவிட்டார். அடுத்து ரணில் வகித்த பிரதமர் பதவிக்கு, புதிதாக ஒருவரைத் தேர்வு செய்ய ஆலோ சனைகள் நடக்குது. ஜனாதிபதி பதவியை ரணில் ஏற்பதற்கு முன்பாகவே அவரை எதிர்த்து அங்கே மீண்டும் கிளர்ச்சி தொடங்கியிருக்கிறது. இன்னொரு முக்கிய விசயம், அந்த நாட்டிலேயே தலைமறைவாக ஒளிந்திருந்த மகிந்த ராஜபக்சே, நேரில் மிகுந்த பாதுகாப்போடு வந்து இந்தத் தேர்தலில் வாக்களித்திருக்கிறார். அவர் அங்கே வருகிற செய்தி, அவர் வந்து போகிறவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.''”

"அ.தி.மு.க. அதிகார யுத்தத்தில் ஓ.பி.எஸ். தரப்புக்கு அடுத்தடுத்து அடிகள் விழுந்திருக்கே?''”

"உண்மைதாங

"உண்மைதாங்க தலைவரே, கட்சியின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனைத் தேர்ந்தெடுத்த எடப்பாடித் தரப்பு, கட்சியின் வரவு செலவுகளை சீனிவாசன் நிர்வகிப்பார்னு வங்கிகளுக்குக் கடிதம் அனுப்பியது. உடனே ஓ.பி.எஸ்., அ.தி.மு.க.வின் வங்கிக் கணக்குகளை என்னைத் தவிர வேறு யாரும் ஆப்ரேட் செய்ய அனுமதிக்கக் கூடாதுன்னு கடிதம் அனுப்ப, அதை நிராகரித்த வங்கிகள், எடப்பாடித் தரப்பு கணக்குகளைத் தொடர அனுமதி கொடுத்து, ஓ.பி.எஸ். தரப்பைப் பஞ்சராக்கின. இந்த நிலையில், அடிதடி மோதலைக் காரணம் காட்டி, தி.மு.க. அரசால் பூட்டப்பட்ட அ.தி.மு.க. அலு வலகத்தின் சாவியைக் கேட்டு நீதிமன்றத்தை இருதரப்பும் அணுகிய வழக்கிலும், எடப்பாடித் தரப்பிடமே சாவியை ஒப்படைக்கும்படி உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. சீல் வைத்த ஆபீஸ் இப்ப எடப்பாடித் தரப்பிடம் வருவதை, முதல் ரவுண்டு வெற்றியா பார்க்குறாங்க. டெல்லி யின் மறைமுக ஒத்துழைப்பு தனக்கு இருப்பதாக மகிழ்ந்திருந்த ஓ.பி.எஸ்., அடுத்தடுத்து அடி விழுந்ததால் அப்செட் ஆகிவிட்டார்.''”

"அதனால்தான் பிரதமர் மோடியைச் சந்திக்க ஓ.பி.எஸ். தவிக்கிறாரா?''”

"ஆமாங்க தலைவரே, பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்க ஓ.பி.எஸ். எடுத்த முயற்சி கள் பலிக்கலை. அதனால், தி.மு.க. அரசு நடத்தும் சர்வதேச ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்காக, வருகிற 28-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் பிரதமர் மோடியை எப்படியும் சந்திச்சிடனும்னு, இப்பவே டெல்லித் தொடர்புகள் மூலம் பரபரத்துக்கிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தன் ஆதரவாளர்களி டம் தீர்ப்பு பற்றிக் கலக்கமாகப் பேசிய ஓ.பி.எஸ்.ஸிடம், நீதிமன்றம் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். தேர்தல் ஆணையத்தின் முடிவுதான் நமக்கு முக்கியம். அங்கே நமக்கு பா.ஜ.க. உதவும்னு அவரைச் சமாதானப்படுத்தி இருக்காங்க. இப்போது நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யலாமான்னு வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறார் ஓ.பி.எஸ்.''”

"எல்லாம் சாதகமாக அமைந்த போதும் எடப்பாடி, ஆடிப்போயிருக்காரே?''”

"உண்மைதாங்க தலைவரே, நீதிமன்றத் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக அமைந்ததை ஒன்றிய பா.ஜ.க. ரசிக்கவில்லை. அதனால், எடப்பாடிக்கு எதிரான கணைகளைத் தேடித் தேடி அது வீசிக்கொண்டு இருக்கிறது. எடப்பாடிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்த 20-ஆம் தேதியே, அவர் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் நடந்த குட்கா விவகாரத்தில், தீவிரம் காட்டும்படி தமிழக அரசுக்கு குறிப்பு அனுப்பியிருக்கிறதாம் டெல்லி. மாஜி மந்திரிகளான விஜயபாஸ்கர், ரமணா மற்றும் அன்றைய டி.ஜி.பி.யான டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மீதான அந்த வழக்கை மீண்டும் துருவுவது எடப்பாடித் தரப்புக்கு சிக்கலையே உண்டாக்கும். அதே போல் அவர் தரப்பைக் குறிவைத்து, வடவள்ளி சந்திரசேகர், செய்யாதுரை என்று ஆரம்பித்து ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் வரை வருமானவரித் துறை புகுந்து விளையாடுகிறது. அதேபோல் பொள்ளாச்சி பாலியல் விவகாரத் தையும் விரைவுபடுத்தி, மாஜி சபாநாயகரின் மகன் பிரவீனை துருவும் படியும் டெல்லியில் இருந்து சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லியின் திருவிளையாடலால் ரொம்பவே மிரண்டுபோயிருக்கிறார் எடப்பாடி.''”

"அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தி யிலும் எடப்பாடிக்கு எதிரான அதிருப்தி கிளம்பியிருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, இனி ஓ.பி.எஸ்.ஸால் தன்னை ஒன்றும் செய்யமுடியாதுன்னு கொண்டாட்ட மனநிலையில் இருந்த எடப்பாடி, நிர்வாகிகள் குறித்த முடிவெடுப்பில் சங்கடங்களைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக, ஓ.பி.எஸ்.ஸிடம் இருந்த, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பை மாஜியான ஆர்.பி.உதயகுமாருக்குக் கொடுத்திருக் கார். இந்தப் பதவியை யாருக்குக் கொடுக்கலாம்னு அவர் யோசிப்பதற் குள், கட்சியின் சீனியர்களான கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தின்னு பலரும் வரிஞ்சுகட்ட ஆரம்பிச்சிட்டாங்க.''”

Advertisment

rr

"இவ்வளவு போட்டிக்கு இடையில் உதயகுமாரை எப்படித் தேர்ந்தெடுத்தார் எடப்பாடி?''”

"ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப் பது தொடர்பாக எடப்பாடி நடத்திய எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை எடப்பாடிக்கு வழங்கினார்கள். இருந் தும் அந்த கூட்டத்தில், தனது சாய்ஸ் யார் என்பதை அவர் அறிவிக்கவில்லை. அங்கிருந்து வீட்டிற்குத் திரும்பிய எடப்பாடி, கே.பி. முனுசாமி, தங்க மணி, வேலுமணி ஆகியோரிடம் மட்டும் இது தொடர்பாக விவாதிச்சார். அப்போது, "ஓ.பி.எஸ்.ஸிடமிருந்து பறிக்கப்பட்ட, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலை வர் பதவிக்கு, செங்கோட்டையனை நியமிக்கலாம்னு தோணுது. ஆனால், அப்படி நியமிச்சா, என் சமூகத்துக்கார ருக்கே இதைக் கொடுத்துட்டேன்னு விமர்சிப்பார் களே'ன்னு தன் தயக்கத்தையும் அவர் சொல்லி இருக்கார்.''

"ம்...''”

"அது ஓ.பி.எஸ்.ஸிடமிருந்து பறிக்கப்பட்ட பதவி என்பதால், அதை முக்குலத்தோருக்கே கொடுப்பதுதான் சரியாக இருக்கும்னு சொன்ன எடப்பாடி, அது குறித் தும் விரிவாவே பேசியிருக்கார். முக்குலத்தோரில் ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் சீனிவாசன் இந்த இருவருக்குக் கொடுத்தாலும் விமர்சனம் வரும். அதனால், உதய குமாரை நியமிக்கலாம்னு இருக்கேன். முக்குலத்தோரில் ஓ.பி.எஸ். மறவர், உதயகுமாரும் மறவர். அதனால் மறவர் சமூகத்துக்கே அந்த வாய்ப்பு கிடைக்கும் வகையில் உதயகுமாரை முடிவு பண்ணியிருக்கேன்னு சொல்லி இருக்கார் எடப்பாடி. இதைக்கேட்டு அங்கிருந்த சீனியர்கள் இறுக்கமாவே இருந்திருக்காங்க. தான் எடுத்த முடிவுப்படியே அவர் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆக்கிவிட்டார். இதனால் ஓ.எஸ். மணியன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அதிருப்தியில் இருக்காங்க.''”

"கொங்கு மண்டல தி.மு.க.வில் சலசலப்பு தெரியுதே?''”

"கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய, அ.தி.மு.க.வைச் சேர்ந்த சஜீவனுக்கு, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், அப்போது அமைச்சராக இருந்த வேலுமணி, அங்குள்ள மாநகராட்சிக் கடைகள் இரண்டை குறைந்த வாடகைக்கு ஒதுக்கிக் கொடுத்திருந் தார். இப்போது அந்த சஜீவனுக்கு, அந்தக் கடை களுக்கான லைசென்ஸ் தி.மு.க ஆட்சியிலும் புதுப்பித்துக் கொடுக்கப்பட்டிருக்காம். டென்ஷனான லோக்கல் தி.மு.க.வினர், இதை ஆ.ராசா எம்.பி.யின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர், இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, கடைகள் விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறாராம்.''”

"கள்ளக்குறிச்சி விவகாரம் முதல்வருக்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, கள்ளக் குறிச்சிக்கு அருகே தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம், பரவலா அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. தொற்றிலிருந்து விடுபட்டு மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், வீட்டில் இருந்தபடியே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயரதிகாரிகளு டன் வீடியோ கான்ஃபரன்சில் ஆலோசனை நடத்தினார். மாணவியின் மரணம் எதனால் நிகழ்ந்தது? கலவரம் உருவானது குறித்து காவல் துறைக்கும் உளவுத்துறைக்கும் தெரியாதா? என்றெல்லாம் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய அவர், உடனடி நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டி ருக்கிறார். இதற்கிடையே இந்த விவகாரத்தை டெல்லியில் உள்ள தேசிய குழந்தைகள் நலவாரி யம் தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறது. இதன் தலைவரான பிரியங்காவுக்கு ஒன்றிய அரசிடமிருந்து சில உத்தரவுகள் கிடைத்த நிலையில் அவர், 27-ஆம் தேதி, விசா ரணைக்காக கள்ளக்குறிச்சிக்கு வருகிறாராம்.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கிறேன். கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி முதல்வர் ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்தபோது, அங்கே கலவரம் ஏற்படப்போவதை உளவுத்துறை முன்னதாகவே தெரியப்படுத்தாததால், அந்தத் துறையின் மேலே இருந்து கீழே வரை மாற்ற வேண்டும் என போலீஸ் தரப்பிலிருந்தே சொன்னாங்களாம். அதே நேரத்தில், இப்போதுதான் பா.ஜ.க. அண்ணாமலை, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத் துறை தலைமை மேலே குற்றம்சாட்டினார். நாம அதற்கு பதில் கொடுத்திருக்கோம். இப்போது மாற்றினால், அண்ணாமலைக்காக மாற்றியது போல் ஆகிவிடும்னும் சொல்லப் பட்டிருக்கு. எந்தளவு நடவடிக்கை எடுக்கலாம்னு ஆலோசிக்கப்பட்டதுல, தி.மு.க.வினரையே வேவு பார்த்து வந்த உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாளை அதிரடியாக மாற்றிவிட்டு, அந்த இடத்திற்கு ஐ.பி.எஸ். அதிகாரியான செந்தில்வேலனை போட்டிருக்காங்க.''’

nkn230722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe