சிங்கம் தனது கதையைச் சொல்லும்வரை, வேட்டையை பற்றிய கதைகள், வேட்டைக்காரனின் புகழைத் தான் பாடும்.’
மிகப் பிரபலமான இந்த ஆங்கில வாசகம், சிங்கங்களுக்கு மட்டுமல்ல, புலிகளுக்கும் பொருந்தும். மறைக்கப்பட்ட எல்லா வரலாறுகளுக்கும் பொருந்தும். தமிழீழ வரலாற்றைப் பற்றி, போராட்டங்களைப் பற்றி, போராளிகளைப் பற்றி பல தவறான சித்தரிப்புகள், அவதூறுகள், விஷமப் பிரச்சாரங்கள் பல மொழித் திரைப்படங்களில் வந்துள்ளன. அப்போதெல்லாம் கண்டனங்கள், போராட்டங்கள், எதிர்ப்புகள் எழும்தான். ஆனால் அவை எல்லாவற்றையும் விட வீரியமான ஒரு எதிர்வினை, சொல்லப்படாத அந்த கதையை, வரலாற்றைச் சொல்வதுதான். அதாவது சிங்கம் தனது கதையை சொல்வதுதான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mathagu.jpg)
ஆங்காங்கே அப்படியான முயற்சிகள் நடந்திருந்தாலும், ஒரு முழுமையான, நிறைவான படைப்பு உருவாகியதா என்றால் கேள்விக் குறி தான். அப்படி ஒரு நிறைவான, அசலான முயற்சியாக உருவாகி வெளியாகியிருக்கிறது ‘"மேதகு'’ திரைப்படம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறப்பு முதல், திருப்பியடிப்பது தான் தீர்வு என்று அவர் களமிறங்கும் வரையிலான அவரது இளமைக் காலத்தை காட்சிப் படுத்துகிறது "மேதகு'.
உலகத் தமிழர்களின் பொருளாதார பங்களிப்பில் தான் இத்திரைப்படம் உருவாகியிருக் கிறது. திரையரங்கம், வணிகம் எதையும் கணக்கில் கொள்ளாமல், சொல்லப்படாத, ஆனால் சொல்லப் பட்டே ஆகவேண்டிய ஒரு வரலாற்றை, அழுத்தம் திருத்த மாக சொல்லியே தீரவேண்டும் என்ற நோக்கத்துடனே "மேதகு'வை உருவாக்கியிருக்கிறார் இயக்கு னர் தி.கிட்டு. இந யஹப்ன்ங் என்கிற தளத்தில் 70 ரூபாய் கொடுத்து 24 மணி நேரத்திற்கு இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
ஒரு தெருக்கூத்துடன் துவங்குகிறது படம். பிரபாகரனின் பிறப்பு முதல் கதையின் மிக முக்கியமான தருணங்களில் எல்லாம் இடம்பெறும் தெருக் கூத்துக் காட்சிகள் மிக அழகாக, அட்டகாசமாக பயன்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம், ஒளிப்பதிவு. படத்தின் பொருளா தார நெருக்கடிகள் எங்குமே தெரியாதபடி, அத்தனை நிறைவானதொரு உழைப்பு. பிரபா கரனின் இளவயது தோற்றத்தை அப்படியே வார்த்தெடுத்திருக் கிறார் நடிகர் குட்டி மணி.
பிரபாகரன் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் குறித்த விமர் சனங்கள் இன்றுவரை தொடர்கின் றன. சமீபகாலமாய் சமூக வலைத் தளங்களிலும் இது பேசுபொருளா னது. "மேதகு' திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின் தேவை குறித்தும் துவக்கம் குறித்தும் அழுத்தமாக பேசுகிறது. புத்த பிக்குகளின் வழிகாட்டுதல்களின் படி இலங்கை அரசுகள் தமிழர் களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளையும் அதற் கெதிரான தந்தை செல்வா அவர் களின் ஜனநாயகப்பூர்வமான போராட் டங்களையும் காட்டுவதன் மூலம், மாறுபட்ட, வீரியமான ஒரு போராட்ட முறை ஏன் அங்கே அவசியப்பட் டது என்பது உணர்த்தப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற காத்திரமான வரலாறுகளை பட மாக்க முனைபவர்கள், கலைத் தன்மையை அதிகம் கவனத்தில் கொள்ளமாட்டார்கள். அல்லது பேசும் விஷயத்தில் இருக்கும் மெனக்கிடல் அதை பேசும் விதத் தில் குறைவாய் இருக்கும். இயக்கு னர் கிட்டு இந்த விஷயத்தில் எந்த சமசரங்களும் செய்யவில்லை. உண்மையால் மட்டுமல்லாமல், கலையாலும் கலங்கடிக்கும் பல இடங்கள் படத்தில் உள்ளன.
இளவயது பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தையே தனது வாழ்வாக்கிக் கொள்ளும் முடி விற்கு வருகிறான். அவனுக்கு புத்திகூறி வீட்டிற்கு அழைத்துப் போக அவன் தந்தை வருகிறார். அவரிடம் பிரபாகரன், தனது லட்சியம் குறித்தும் திருப்பி அடிப்பதின் அவசியம் குறித்தும் சொல்கிறான். அதே சமயம் ஒரு சிங்கள போலீஸ்காரன், அங்கு வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருக்கும் ஒரு இளம்பெண்ணிடம் அத்துமீற முயற்சிக்கிறான். இந்த இரண்டு காட்சிகளும் இன்டர்கட்டில் மாறி மாறி காட்டப்படுகின்றன. இறுதியில், பிரபாகரனோ அல்லது இயக்கத்தினரோ அந்த வீட்டிற்குள் வந்து, போலீஸ்கார னிடமிருந்து அந்தப் பெண்ணை காப்பாற்றுவார்கள் என நாம் எண்ணும் சமயத்தில் அங்கே நிகழும் முடிவு, மேலே சொன்னதற்கு சரியான உதாரணம்.
புதிய தலைமுறை, குறிப்பாக 2000-களில் பிறந்தவர்களுக்கு இந்தப் படம் பல விஷயங்களை புரிய வைத்திருக்கிறது. இத்தனை விஷயங்கள் அங்கே நடந்திருக்கின்றதா, இதனால்தான் தலைவர் ஆயுதம் ஏந்தினாரா என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டி ருக்கிறது. இதுதான் இந்தப் படத்தின் நோக் கம். இது நிறைவேறியது பெரு மகிழ்ச்சி யளிக்கிறது. நிச்சயம் அடுத்தடுத்த பாகங் கள் வரும். தலைவர் சொன்னது போல அவர்களின் ஆயுதத்தை வைத்தேதான் அவர்களை திருப்பி அடிக்க வேண்டும். அதற்கு இன்னும் நிறைய நிறைய இளைஞர் கள் வரவேண்டும். சொல்லப்படாத நம் வர லாற்றை திரையில் பதிவு செய்யவேண்டும். அதற்கு தமிழ் மக்களும் ஆதரவு தரவேண் டும்''’என்கிறார் இயக்குனர் தி.கிட்டு.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் திரைப்படங்களில் இடம்பெறும் போது உடனடியாக எதிர்க்கும் பலரிடமிருந்து, பிரபாகரனின் வாழ்க்கைப் படமாகிய "மேதகு' விற்கு எந்தவொரு ஆதரவும் வரவில்லையே என்று கேட்டபோது, இயக்குனர் தி.கிட்டு சொன்னது, “யாருடைய மௌனமும் "மேதகு'வின் வீச்சை தடுக்க இயலாது!”
உண்மைதான். இது ஒரு பெரும்பயணத்தின் துவக்கம். வியாபார வெற்றி -தோல்வியை கணக்கிலிடாமல், சம ரசங்களின்றி வரலாற் றைக் கூறும் பெருயத் தனம். சிங்கங்கள் தங்கள் கதைகளை கர்ஜிக்கத் துவங்கிவிட் டன. இனி வேட்டை களின், வேட்டைக் காரர்களின் முகமூடிகள் கிழியத்தான் வேண்டும்!
-ஜெயச்சந்திர ஹாஷ்மி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/mathagu-t.jpg)