ன்றிய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராடிவரும் விவசாயிகள், "டெல்லியைக் கலக்க எங்களை அனுமதியுங்கள்''’என்று குரல் எழுப்புகிறார்கள்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லியில்... பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ff

கடந்த ஆண்டு 2020 நவம்பர் மாதம் துவங்கிய இந்த போராட்டம் இன்றுவரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசு அவர்களிடம் கெடுபிடி காட்ட... விவசாயிகளோ, "வரும் நவம்பர் 26-ம் தேதி வரைதான் ஒன்றிய அரசுக்கு அவகாசம் கொடுப்போம். அதற்கு மறுநாளே, மீண்டும் அதிக அளவிலான விவசாயி கள் தங்கள் கிராமங்களிலிருந்து டிராக்டர்கள் மூலம் டெல்லியை முற்றுகையிடுவார்கள்''’என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை போல திருச்சியிலும் தொடர் போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அச்சங்கத்தின் தலைவரான அய்யாக்கண்ணு, வேளாண் சட்டங்களை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக, விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தர வேண்டும். அதுவரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உ.பி.யில் விவசாயிகள் மீது கார் ஏற்றி, அவர்களைக் கொலை செய்தவர்களுக்கும், செய்யத் தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், கடந்த 12-10-2021 முதல் தங்களுடைய போராட்டத்தை நடத்திவருகின்றார். இந்தப் போராட்டம் குறித்து அவர்களிடம் நாம் கேட்டபோது...

"முதல்நாள் சட்டை இல்லாமலும், இரண்டாவது நாள் கோவணம் கட்டிக் கொண்டும் விவசாயிகள் போராடினோம். மூன்றாவது நாள் பிச்சை எடுக்கும் போராட்டம். பின்னர் மண்டை ஓட்டு டன் போராட்டம், நாமம் போட்டுப் போராட்டம், பாடை கட்டிப் போராட் டம், வாயைக் கட்டியும் போராட்டம் என்று தினமொரு போராட்டத்தை நடத்திய நாங்கள், தீபாவளி சமயத்தில் விவசாயிகளின் நிலைமையை உணர்த்தும் விதமாய்... சணல் சாக்கை கோமணமாகக் கட்டிக்கொண்டு... "மோடியே எங்களைக் காப்பாற்று! மோடியே எங்களைக் காப் பாற்று'! என்று போராட்டம் நடத்தினோம்.

Advertisment

ff

அதுமட்டுமல்ல பதினைந்தாம் நாள், மோடி அய்யா விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் நெஞ்சில் கல்லை போட்டு விட்டதால் விவசாயிகள் இறந்து விட்டனர், அவர்களுக்காக சங்கு ஊதி மணி அடித்துப் போராட்டம். இரண்டு மடங்கு லாபம் தருகிறேன் என்று கூறிவிட்டு இரண்டு மடங்கு லாபம் தராமல் ஏமாற்றி விவசாயிகள் நெஞ்சில் கல்லை போட்டு விட்டதால் இறந்த விவசாயிகளின் எலும்புகளுக்கு பால் தெளித்து ஈமக்காரி யம் செய்யும் போராட்டம். விவசாயி களின் அஸ்தியை காவிரிக்கு ஊர்வலமாக சென்று கரைக்கும் போராட்டம்.

ரத்தக் காயக்கட்டுடன் போராட் டம், முக்காடு போட்டுப் போராட்டம். புஸ்வாணம் விட்டுப் போராட்டம். அப்புறம், விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும், செய்யத் தூண்டியவர்களுக்கும் தூக்குத் தண்டனை வழங்கக் கோரி, திருச்சியி லிருந்து பேப்பர் ராக்கெட் மூலம் மோடிக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் என்று வகை வகையாய் போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்'' என்கிறார்கள் ஆதங்கமாய்.

அய்யாக்கண்ணு தரப்பினர் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்த அனுமதி கேட்டு வருகின்றனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இவர் தரப்பு டெல்லியில் 40 நாட்கள் நடத்திய போராட்டம், டெல்லியை அதிர வைத்ததால்தான், அனுமதி தராமல் பிரேக் போடுகிறது டெல்லி.

இது குறித்து நம்மிடம் பேசிய அய்யாக்கண்ணு, "எங்களை டெல்லி செல்ல அனுமதிக்கவேண்டும் என்று இப்போது இருக்கும் எல்லா அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும், அதிகாரிகளிடமும் பேசிப்பார்த்து விட்டேன். ஆனால் யாரும் எங்களை அனுமதிக்கத் தயாராக இல்லை. இங்குள்ள தி.மு.க. அரசு ஏன் டெல்லிக்கு இப்படி பயப்பட வேண்டும்? அங்கு பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், நாங்கள் மட்டும் இங்கு அமர்ந்து போராட்டம் நடத்துவது சரியா?''’என்று கேட்கிறார் அழுத்தமாக.

தமிழக விவசாயிகளின் போர்க்குரல் டெல்லியை அதிரவைத்து பயமுறுத்தி வருகிறது.