விருதுநகர் மாவட்டத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் என்பது அடிக்கடி நடக்கும் குற்றச் சம்பவமாகிவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம், விருதுநகரில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். ஹரிஹரன், ஜுனத் அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்ட அந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்ட நிலையில், நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த 4 மாதங்களில் கடந்த 22-ஆம் தேதி, அருப்புக்கோட்டை அருகே சீனிவாசன், ஜெயகுமார், ராம்குமார், பிரபாகரன், விஜய் மற்றும் இரண்டு சிறுவர்கள் ஆகிய 7 பேரால், 40 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியிருக்கிறார். அந்த 7 பேரும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டு சிறையிலும், சிறார் சிறையிலும் அடைக் கப்பட்டுள்ளனர்.

rcase

Advertisment

கூட்டு பாலியல் குற்றம் நடந்த பின்னணி இது -

அந்தப் பெண்ணுக் கும் முத்துச்செல்வம் என்பவருக்கும் 16 வயதி லிருந்தே காதல் (?) தொடர்பு இருந்திருக்கிறது. அப்பெண்ணுக்கு பெற் றோர் வேறொருவருடன் திருமணம் செய்து வைத்துவிட்டதால், மூன்று மகன்களுக்கு தாயானார். ஆனாலும், முன்னாள் காதலன் முத்துச்செல் வத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந் திருக்கிறார்.

22-ஆம் தேதி விருதுநகருக்கு உறவினர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்த அந்தப் பெண், முத்துச்செல் வத்தை பாலவநத்தம் வரச்சொல்லியிருக்கிறார். அங்கிருந்து முத்துச் செல்வத்துடன் காரில் ஏறி, பாலவநத்தம் -கோபாலபுரம் சாலையிலுள்ள முனியாண்டி கோவிலைத் தாண்டியதும், காட்டுப் பகுதிக்குள் சந்தோஷமாகப் பேசலாம் என்று நடந்து சென்றுள்ளனர். இவ்விருவரையும் மோப்பம் பிடித்து பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேரும், காரில் (பச 12-ஆ 2578) வந்த 5 பேரும் மறித்து முத்துச்செல்வத்தைத் தாக்கி, அந்தப் பெண்ணைத் தங்களது காரில் கடத்திச் சென்றனர்.

காரிலிருந்து கோவிலாங்குளம் ஓட்டக்கண்மாய் பக்கம் அந்தப் பெண்ணை இழுத்துச்சென்றனர். அங்கு அப்பெண்ணை, இயற்கைக்கு மாறான விதத்தில் பலவந்தப்படுத்தி, பகல் 3 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி கடந்தும், ஒருவர் மாறி ஒருவர் சீரழித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணிடமிருந்து, 7 பவுன் நகை, 180 ரூபாய் ரொக்கம், பட்டன் செல்போன் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த முத்துச்செல்வம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணிடம் புகாரைப் பெற்று நடவடிக்கை எடுத்துள்ளது, அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையம்.

rr

Advertisment

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ப்ரீத்தியை தொடர்புகொண்டோம்.

"அந்தப் பெண்ணும் முத்துச்செல்வமும் நண்பர்கள். அவ்வளவுதான். முத்துச்செல்வத்தை தாக்கியிருக்காங்க. இது ஒரு கேங் ரேப். அந்தப் பெண்ணோட விருப்பம் இல்லாம நடந்திருக்கு. ஏழுபேருமே பாலியல் பலாத்காரம் பண்ணுனாங்களான்னு ஒரு கேள்வி இருக்கு. சம்பவம் நடக்கிறப்ப கதவுக்கிட்ட நின்னாகூட, அவங்களும் ரேப்ல ஈடுபட்டவங்க லிஸ்ட்ல, அந்த ஆக்ட்ல (பிரிவு 376 உ) வந்திருவாங்க. அந்தப் பெண்ணை பலாத்காரம் பண்ணுனாலும் பண்ணலைன்னாலும், சம்பவம் நடந்தப்பகூட இருந்தா, அவங்களும் குற்றவாளிதான். தொடர்ந்து விசாரணை நடந்துக்கிட்டிருக்கு''’என்றார்.

கூட்டுப் பாலியலில் ஈடுபட்டவர்களில் சிலர், சிறையில் இருந்தபோது நண்பர்கள் ஆனதும், வழக்கு விசாரணைக்காக அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது, இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியதும் கொடுமை என்றால், அந்த 7 பேரில் சீனிவாசன் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், பிரபாகரனும் விஜய்யும் அண்ணன் தம்பி என்பதும், 2 பேர் சிறுவர்கள் என்பதும் அதைவிடக் கொடுமை!