Advertisment

சூதாட்டம்! ஆளுங்கட்சிப் பிரமுகர் பஞ்சாயத்து! -குடியாத்தம் திகு... திகு...!

gg

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தமிழக -ஆந்திர எல்லை அமைந்துள்ளது. அங்குள்ள சைனகுண்டா சோதனைச் சாவடி அருகே மலையடிவாரத்திலுள்ள மாந்தோப்பில் பலர் பணம் வைத்து சூதாடுவதாக எஸ்.பி. மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது.

Advertisment

குடியாத்தம் சரகத்துக்கு தகவல் தெரிவிக்கா மல் ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த 17 பேரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடமிருந்து 52 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 15 செல்போன்கள், மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisment

gg

எஸ்.பி.யின் தனிப்படையினரால் கைது செய்யப்பட்ட கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. துணை செய லாளர் அவதானப்பட்டி சீனிவாசன், திருப்பத்தூர் மாவட்டம் கஜல்நாயக்கன் பட்டி கவுன்சிலர் வெற்றிவேல், குடியாத்தம் அக்ரஹாரம் ஊராட்சி மன்ற துணைத்தல

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தமிழக -ஆந்திர எல்லை அமைந்துள்ளது. அங்குள்ள சைனகுண்டா சோதனைச் சாவடி அருகே மலையடிவாரத்திலுள்ள மாந்தோப்பில் பலர் பணம் வைத்து சூதாடுவதாக எஸ்.பி. மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது.

Advertisment

குடியாத்தம் சரகத்துக்கு தகவல் தெரிவிக்கா மல் ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த 17 பேரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடமிருந்து 52 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 15 செல்போன்கள், மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisment

gg

எஸ்.பி.யின் தனிப்படையினரால் கைது செய்யப்பட்ட கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. துணை செய லாளர் அவதானப்பட்டி சீனிவாசன், திருப்பத்தூர் மாவட்டம் கஜல்நாயக்கன் பட்டி கவுன்சிலர் வெற்றிவேல், குடியாத்தம் அக்ரஹாரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழரசி கணவர் பிரபாகரன், ஆற்காடு பாரதி, அரக்கோணம் சங்கர், குடியாத்தம் பிரதீப்குமார், சென்னை நெற்குன்றம் பாஸ்கர், சென்னை போலிப்பாக்கம் சேட்டு, ஆந்திரா சித்தூர் கார்த்தி, யுகந்தன், சித்தூர் உபேந்திரன், பெங்களுரு காங்கிரஸ் கட்சி முனிராஜ், நல்லமங்களா ரவிக்குமார், ராஜீவ், கோவிந்தராஜ், ஜித்தண்டர், கோலார் ஸ்ரீதர் குமார் ஆகியோரை குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்த விவரமறிந்த ஒருவர், "வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி போன்ற பகுதிகளில் ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகள் வருகின்றன. இந்த பகுதிகளிலுள்ள தோப்புகளில் பல ஆண்டுகளாக சீட்டாட்டம் நடந்துவருகிறது. வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, ஓசூர், சென்னை, காஞ்சிபுரம், ஆந்திராவிலுள்ள சித்தூர், குப்பம், பலமநேரி, கர்நாடகாவின் கே.ஜீ.எப், பெங்களுரூவிலிருந்து தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் வருவார்கள். வார இறுதியில் வெள்ளி இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தொடர்ந்து சீட்டாட்டம் நடக்கும். இதற்காக வாட்ஸப் குழுக்களில் தகவல் அனுப்பிவிடுவார்கள். லொகேஷன் ஷேர் செய்துவிடுவார்கள். சீட்டாட் டத்தில் மிகக்குறைந்தபட்ச தொகை ஒரு லட்சம், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டலாம். சூதாட்டம் நடக்கும் இடத்துக்கு வந்ததும் அங்குள்ள மேனேஜரிடம் பணத்தைக் கட்டிவிட்டு தொகைக்கு டோக்கன் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த டோக்கனை வைத்து விளையாடவேண்டும், வெற்றி பெற்றவர் அந்த டோக்கனை கொண்டு வந்து தந்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளவேண்டும். வெற்றி பெற்றவரிடமிருந்து 30 சதவித கமிஷன் எடுத்துக்கொண்டே மீதித்தொகை தருவார்கள்'' என்றார்.

gg

குடியாத்தம், கே.வி.குப்பம், நாட்றம்பள்ளி, பேரணாம்பட்டு பகுதிகளில் சுமார் 30 இடங்களில் இப்படியான க்ளப்கள் நடக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கேங்க் நடத்தினாலும், குடியாத்தம் பூங்குளம் இளையராஜாதான் டாப். கைதானவர்களில் குடியாத்தம் அக்ரஹாரம் ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் தமிழரசி கணவர் பிரபாகரன் பெயர் இருக்கும். அந்த பிரபாகரன்தான் இந்த இளையராஜா. இவரிடம் 5 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்தில் சுழற்சி முறையில் நடத்து வார். கோடிகளில் பணம் புரளும் இந்த இடத் திற்கு அவ்வளவு சீக்கிரம் வெளியாட்கள் யாரும் செல்லமுடியாது. க்ளப் நடத்துபவர்களின் ஆட்கள் அந்த பகுதி முழுவதும் பாதுகாப் புக்கு இருப்பார்கள். விளையாடுபவர்களுக்கு தேவை யான சரக்கு, அசைவ உணவு உட் பட எது தேவையோ, அதை அங்கேயே வாங்கி வந்து தருவதற்கும் ஆட்கள் உண்டு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டம் பேர ணாம்பட்டு மோரசப்பள்ளி கிராமத்தில் சூதாட்ட க்ளப்பில் விளையாடிவிட்டு 25 லட்ச ரூபாய் பணத்தோடு காரில் வந்தவரை வாணியம்பாடியில் ஒரு கும்பல் மடக்கி கொள்ளையடித்தது. அந்த க்ளப் பூங்குளம் இளையராஜா நடத்தியது. அந்த வழக்கை புலனாய்வு செய்த அப்போதைய திருப்பத்தூர் எஸ்.பி. சிபி.சக்கரவர்த்தி அதுகுறித்த அறிக்கையை மேலிடத்துக்கு அனுப்பிவிட்டார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூங்குளம், சைனகுண்டா என அடிக்கடி இடத்தினை மாற்றத்துவங்கினார் இளையராஜா. சைனகுண்டா பகுதி தமிழகத்தில் இருந்தாலும், ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகள் சில கி.மீ. தூரத்தில் உள்ளன. இங்குள்ள செக்போஸ்ட் போலீஸாருக்கு வாரம் 5 ஆயிரம் ரூபாய் மாமூலாக தரப்படுகிறது. இவர்கள் சந்தேகத்துக்கிடமான டீம் வந்தால் தகவல் தந்துவிடுவார்கள். அதேபோல் காவல் துறைக்கும் மாதந்தோறும் மாமூல் தருவதால் கண்டுகொள்ள வில்லை. ஒரு போலீஸ் அதிகாரி மாமூலை உயர்த்திக் கேட்டதால் வந்த பிரச்சனையால் தான் போலீஸ்வரை தகவல் சென்று கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் பஞ்சாயத்து பேசி விவகாரத்தை சுமூகமாக்கியுள்ளார் என்கிறார்கள்.

பலரையும் தற்கொலைக்குத் தள்ளும் இந்த சூதாட்டத்தை நடத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்தால்தான் தடுக்க முடியும்.

-கிங்

nkn300823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe