ந்திய அரசியலில், ஒன்றிய அரசை ஆளும் பா.ஜ.க. தயவால் அதானி குடும்பம் கோலோச்சுகிறது என்றால், தமிழ்நாடு, புதுவை மாநிலங்களில் அரசியல் அதி காரம்பெற குட்டையை குழப் பிக்கொண்டு இருக்கிறது இன் னொரு தொழிலதிபர் குடும்பம்.

Advertisment

அந்தமான் பகுதியில் பிறந்து, மியான்மரில் தின சரிக் கூலியாக வேலை செய்தவர், பின்னர் 1980களில் தமிழ்நாட்டின் கோவைக்கு வந்து லாட்டரி விற்பனை தொழிலில் இறங்கியவர்தான் சாண்டியாகோ மார்ட்டின். அத்தொழிலில் அவருக்கு பணமாகக் கொட்டியது. 1991-ல் முதலமைச்சராக இருந்த அ.தி.மு.க. ஜெ.வுக்கு ஆதரவாளராகி தனது தொழிலை வளர்த்தார் மார்ட்டின். 96-ல் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தன்னை தி.மு.க. ஆதரவாளராக அடையாளப் படுத்திக்கொண்டார். 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மார்ட்டினை குறிவைத்து லாட்டரியை தடை செய்தார். அப்போது தென்னிந்திய மாநிலங்களைக் கடந்து இந்தியா முழுவதுமே லாட்டரி தொழிலில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியிருந்தார் மார்ட்டின். 2006-2011-ல் தி.மு.க. தலைமையுடன் நெருக்கத்தை அதிகமாக்கி ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டார். 2012-ல் ஜெ. ஆட்சிக்காலத்தில் நிலமோசடிப் புகாரின்கீழ் மார்ட்டின் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.  

Advertisment

தனது தொழில் தடங்கலின்றி நடக்க, தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் தொடங்கி சின்னச்சின்ன கட்சிகள் வரை கட்சிகளுக்கு ஏற்றாற்போல் சில நூறு கோடி முதல் சில கோடி வரை தேர்தல் நிதியாகத் தந்தார். இதன்மூலம், தனது குடும்பத்தின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவன வணிகத்தில் அரசியல் கட்சிகள் தலையிடாதபடி செய்தார். 2020 முதல் 2024 வரையில் சுமார் 1400 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன மார்ட்டின் நிறுவனங்கள். தற்போது உலகளவில் லாட்டரி தொழில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தை ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஜவுளி, கல்வி, மீடியா, ஷேர் மார்க்கெட், மருத்துவத்துறை ஆகியவற்றில் முதலீடு செய்துவருகிறது மார்ட்டின் குடும்பம். இதன்மூலம், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக மாறியுள்ளார் மார்ட்டின். அள்ள அள்ளக் குறையான பணம் இருந்தாலும், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அரசியல் அதிகாரம் வேண்டுமென முடிவுசெய்தது மார்ட்டின் குடும்பம். 

மார்டின் -லீமாரோஸ் தம்பதியினருக்கு சார்லஸ், டைசன் என இரு மகன்களும், டெய்சி என ஒரு மகளும் உள்ளனர். இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைச்செயலாளராக  லீமாரோஸ் உள்ளார். முதல் மகன் சார்லஸ், பா.ஜ.க.வில் இணைந்தார். தமிழர் விடியல் என்கிற லெட்டர்பேட் கட்சியை இரண்டாவது மகன் டைசன் தொடங்கினார். மகள் டெய்சியின் கணவர் ஆதவ் அர்ஜுனாவை தி.மு.க.வுடன் நெருக்கமாக இருக்கச்செய்தார். முன்னாள் கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுனா,  இந்திய கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக இருக்கிறார். வாய்ஸ் ஆப் காமன் என்கிற அரசியல் ஆலோசனை நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

Advertisment

martin1

குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசியல் கட்சியில் இணைந்து செயல்படுவ தோடு, அந்தந்த அரசியல் கட்சித் தலைமைகளை வளைத்து அதிகாரத்துக்கு வர ஆசைப்படு கிறார்கள். இது தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அரசியல் களத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றது. 

மார்ட்டின் குடும்பத்தினர் மற்றும் அவரது நிறுவனங்கள்மீது வருமான வரித்துறையில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள், அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குகளும் உள்ளன. பல வழக்குகள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளன. கல்வித்தந்தைகளாக வலம்வரும் ஐ.ஜே.கே. பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் போன்றவர்கள் தங்கள் மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்க எம்.பி. பதவிக்கு சில நூறு கோடிகளை செலவழித்து அடைய முற்படுவதுபோல, இவர்களும் அதிகாரத்தை நோக்கிச் செல்கிறார்கள்.

இதுகுறித்து நாம் பேசிய அரசியல் ஆய்வாளர்கள், "தி.மு.க.வில் 2016, 2021 தேர்தல்களில் சிலச்சில வேலைகள் பார்த்தவர் ஆதவ் அர்ஜுனா. மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான், எம்.பி. பதவிக்கு அடிபோட்டார். இதனை தி.மு.க. தலைமை ஒப்புக்கொள்ளாத தால், வி.சி.க.வில் இணைந்து கோடிகளில் அக்கட்சிக்காக செலவு செய்ததால் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியைப் பெற்றார். அதோடு, ஆதவ் அர்ஜுனாவை கள்ளக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக்க அத்தொகுதியைக்கேட்டு தி.மு.க.விடம் அடம்பிடித்தார் திருமா, தி.மு.க. மறுத்துவிட்டது. இதனால் தி.மு.க. மீது கடும் அதிருப்தியாகி "தி.மு.க. அதிகாரத்துக்கு வந்தது வி.சி.க.வால்தான், அதனால் அதிகாரத்தில் பங்குகேட்பதில் என்ன தவறு' என்று விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, துணைமுதலமைச்சர் உதயநிதியையும் விமர்சித்தார். தனது நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யையும், திருமாவையும் சந்திக்க வைக்க முயன்ற ஆதவின் சூழ்ச்சி தெரிந்து, அவ்விழாவை திருமா புறக்கணித்தார். அதன்பின் அவரது செயல்பாடுகள் அனைத்தும் தி.மு.க. கூட்டணிக்கு எதிராகவே இருந்ததால், வி.சி.க.விலேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுக்க, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுவரை மறைமுகமாக நடிகர் விஜய்க்காக செயல்பட்டவர், பின்பு வெளிப்படையாக த.வெ.க.வில் இணைந்து மாநில தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவியை  வாங்கி, த.வெ.க.வில் அசைக்க முடியாத சக்தியாகியுள்ளார். இப்போது விஜய்யை இயக்கத் தொடங்கியுள்ளார். 

மருமகன் ஆதவ் அர்ஜுனா மூலம் விஜய் யின் த.வெ.க. கட்சிக்காக மார்ட்டின் செலவு செய்கிறார். தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க. ஆட்சியை அகற்றவேண்டுமென்று வெளிப்படையாகவே ஆதவ் செயல்படுகிறார். அதேபோல், கரூர் சம்பவ புகாரிலிருந்து நான் உங்களை காப்பாற்று               கிறேன் எனச்சொல்லி நடிகர் விஜய்க்காக ஒன்றிய பா.ஜ.க. தலைவர்களிடம் பேசி சி.பி.ஐ. விசாரணைக்கு வழிகண்டார். இப்போது விஜய்யை பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை நோக்கி நகர்த்துகிறார். அ.தி.மு.க. - பா.ஜ.க.வின் மேல் மட்டத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆதவ், "விஜய் சாரை கூட்டணிக்கு அழைத்து வருவது என்னுடைய பொறுப்பு' என உத்தரவாதம் தந்துள்ளார். 

அதே நேரத்தில், 40 சீட், அமைச்சரவையில் இடம் என்பதையும் தாண்டி, சில பகீர் விஷயங்கள் பேசப்படுவதாகத் தெரிகிறது! அதாவது, அ.தி.மு.க. - த.வெ.க. - பா.ஜ.க. கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தால், தமிழகத்தில் லாட்டரி மீதான தடையை நீக்கவேண்டும், கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி வேண்டும் என மறைமுக டிமாண்ட் ஆதவ் தரப்பில் வைக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இது விஜய்க்கு தெரிந்து தான் நடக்கிறதா? என்கிற கேள்வி அ.தி.மு.க. வட்டாரத்தில் எழுந்துள்ள தாகக் கூறுகிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள். 

தமிழ்நாட்டில் இப் படியென்றால், புதுவையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என அரசியல்  செய்கிறார் மார்ட்டின் மகன் சார்லஸ். இதுகுறித்து புதுவை காங்கிரஸ் பிரமுகர்கள் இருவரிடம் பேசியபோது, "புதுச்சேரிக்கே சம்பந்த              மில்லாத சார்லஸ், சமூக சேவகர் என்கிற பெயரில் களமிறங்கி கோடிகளை செலவு செய்து       வருகிறார். புதுவையை என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. 

martin2

இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை மட்டும் விமர்சித்துவருகிறார். புதிதாக அரசியல் கட்சி துவங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுவையில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித் துள்ளார். தன்னிடமுள்ள கோடிக்கணக்கான பணத்தை வைத்து புதுவையில் அதிகாரத்தை பிடித்துவிடலாம் என நினைத்து தொழிலதிபரான பா.ஜ.க. அமைச்சர் ஜான்குமாரை தளபதியாக்கி அரசியல் செய்துவருகிறார். தீபாவளிக்கு அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்களுக்கும் 50 ஆயிரம் மதிப்புள்ள ஆளுயர ஃப்ரிட்ஜ் அனுப்பிவைத்து பிரமுகர்களை வளைத்து வருகிறார். இவர் பா.ஜ.க.வின் பி டீம் எல்லாம் இல்லை, நேரடியாகவே பா.ஜ.க.வின் கையாள் தான். மார்ட்டின் குடும்பத்தாரின் அதிகார ஆசையை அறிந்துகொண்டு, ரெய்டுகள் வழியாக இவர்களை பா.ஜ.க. தங்கள் பக்கம் இழுத்து, தங்கள் அஜென்டாவை நிறைவேற்ற சார்லஸை புதுவை அரசியலில் நுழைத்துள்ளது. புதுவையில் சார்லஸ் தனித்து அரசியல் செய்வதாகச் சொன்னாலும் உண்மையில் அது பா.ஜ.க.வுக்காக செய்யப்படுகிறது. அடுத்தமுறை பா.ஜ.க. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததும், கோவாவில் இருப்பதுபோல் புதுவையில் தடைசெய்யப்பட்ட கேசினோ, லாட்டரி, டிஸ்கோ க்ளப் நடத்த அனுமதி தரப் படும் என பா.ஜ.க. மேல்மட்ட உத்தரவாதத்தின் படியே சார்லஸ் மார்ட்டின், ஜான்குமார் களத்தில் இறங்கிவிடப்பட்டுள்ளார்கள்'' என்கிறார்கள். 

ஆட்சி அதிகாரம் எங்கே இருக்கிறதோ அங்கேயிருந்த மார்ட்டின் குடும்பம், இப்போது ஆட்சி அதிகாரத்தை உருவாக்கி அதில் தாங்களும் பங்குபெற நினைத்து தமிழ்நாட்டில் - புதுவையில் அரசியல் செய்கிறார்கள். ஆக, விஜய் தயவால் தமிழ்நாட்டில் சூதாட்ட அரசியலை ஆடப்போகிறது மார்ட்டின் குடும்பம்!