Advertisment

தப்பியோடிய வங்கதேச பிரதமர்! ராணுவ ஆட்சி!

ss

ங்கதேசத்தில் 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து உயிர்த்தியாகம் செய்த வீரர் களின் குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், பெண்களுக் கும், பின்தங்கிய மாவட்டங் களைச் சேர்ந்தவர்களுக்குமாக வழங்கப்பட்ட இட ஒதுக்கீட் டால் எதிர்ப்புகள் உருவாகின. இந்த இட ஒதுக்கீட்டை ஷேக் ஹசீனாவின் கட்சிக்காரர்களும், போலியான வாரிசுகளும் முறை கேடாகப் பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதை யடுத்து, 2018ஆம் ஆண்டில் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, இட ஒதுக்கீட்டை முற்றிலும் ரத்துசெய்ய, இட ஒதுக்கீட்டால் பலனடைந்தவர் கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Advertisment

அந்த வழக்கு விசாரணையில், கடந்த ஜூன் மாதம் வெளியான தீர்ப்பில், சுதந்திரப் போராட்ட வீரர் களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீட்டைப் பெற்றனர். இதையடுத்து வங்கதேசம் முழு வதும் பல்கலைக்கழக மாணவர் கள் போராட்டத்தில் இறங் கினர். போராட்டம் வன்முறை யாக உருவெடுத்தது. வங்கதேச போலீசார், இராணுவத்துடன் பிரதமர் ஷேக் ஹசீனாவின் க

ங்கதேசத்தில் 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து உயிர்த்தியாகம் செய்த வீரர் களின் குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், பெண்களுக் கும், பின்தங்கிய மாவட்டங் களைச் சேர்ந்தவர்களுக்குமாக வழங்கப்பட்ட இட ஒதுக்கீட் டால் எதிர்ப்புகள் உருவாகின. இந்த இட ஒதுக்கீட்டை ஷேக் ஹசீனாவின் கட்சிக்காரர்களும், போலியான வாரிசுகளும் முறை கேடாகப் பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதை யடுத்து, 2018ஆம் ஆண்டில் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, இட ஒதுக்கீட்டை முற்றிலும் ரத்துசெய்ய, இட ஒதுக்கீட்டால் பலனடைந்தவர் கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Advertisment

அந்த வழக்கு விசாரணையில், கடந்த ஜூன் மாதம் வெளியான தீர்ப்பில், சுதந்திரப் போராட்ட வீரர் களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீட்டைப் பெற்றனர். இதையடுத்து வங்கதேசம் முழு வதும் பல்கலைக்கழக மாணவர் கள் போராட்டத்தில் இறங் கினர். போராட்டம் வன்முறை யாக உருவெடுத்தது. வங்கதேச போலீசார், இராணுவத்துடன் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சித்தொண்டர்களும் இணைந்து மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கக் களமிறங்க, வங்க தேசம் முழுக்க பற்றியெரிந்தது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசாரும், ராணுவத்தினரும் துப்பாக்கிச்சூட்டில் இறங்கினர். இந்த வன்முறையில் 200 பேர் வரை பலியான நிலையில், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக, இட ஒதுக் கீட்டை 5 சதவீதமாகக் குறைத்து தீர்ப்பளித்தது. அதையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட, வங்கதேசம் அமைதியை நோக்கித் திரும்பியது.

aa

போராட்டம் ஓய்ந்தபோதும், ஷேக் ஹசீனா வின் அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் களைக் கைது செய்வதிலும், அவர்களை சிறைக்குள் தள்ளுவதிலும் தீவிரம் காட்டியது. எனவே அரசின் போக்கைக் கண்டித்தும், போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும், மீண்டும் ஆகஸ்ட் 4ஆம் தேதி, நாடு தழுவிய அளவில் போராட் டத்தில் மாணவர்கள் இறங்கினார்கள். இம்முறை போலீசாருக்கும் மாணவர்களுக்குமிடையே அடிதடி வன்முறை கட்டுக்கடங்காமல் போனது. மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவை துண்டிக்கப்பட்டு, சமூக வலைத் தளங்களும் தடை செய்யப்பட்டன. போலீசாரைக் குறிவைத்து மாணவர்கள் தாக்குதலில் இறங்க, நாடு முழுக்க ஒரே நாளில் நடந்த வன் முறையில், போலீசார் தரப்பில் 14 பேர் உட்பட மொத்தம் 98 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். ஒட்டு மொத்தமாக வங்கதேசக் கலவரத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இம்முறை ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமெனக்கோரியும், அவர் மாணவர்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கோரியும் போராட்டம் உச்சகட்டத்தை நெருங்க, ராணுவமும் அரசுக்கு எதிராகத் திரும்பியது. இந்நிலையில் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதன் மூலம், அவரது 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. அதையடுத்து வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. ஆனாலும் போராட்டக் காரர்களின் கோபம் தீராத தால், ராணுவ ஹெலிகாப் டர் மூலமாக தனது தங்கை ஷேக் ரெஹெனாவுடன் வங்கதேசத்திலிருந்து தப்பி டெல்லி அருகிலுள்ள உத் தரப்பிரதேசத்தின் ஹிண் டன் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

Advertisment

இந்நிலையில், போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு, உள்ளே நுழைந்து அங்குள்ள பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியதோடு... கட்டில், மெத்தை, சேர், வளர்ப்புப் பிராணிகளான முயல், ஆடு, வாத்து மற்றும் வாஸ்துமீன் வரை அனைத்தையும் ஆளா ளுக்கு அள்ளிச் சென்றனர். இன்னொரு பக்கம் ஷேக் ஹசீனா பதவி விலகியதை வெற்றியாகக் கருதிய மாணவர்கள், வெற்றிப்பேரணியில் அணிவகுத்துச் சென்றபோது, வங்கதேசத்தின் தந்தையாகப் போற்றப்படும் முன்னாள் அதிபரும் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான முஜிபுர் ரஹ்மானின் சிலையை உடைத்து சேதப்படுத்தினர்.

s

பரபரப்பான சூழலில்... வங்க தேசத்தின் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், தற்காலிகமாக ஆட்சியை அமைக்கப் போவதாக அறிவித் தார். அதையடுத்து அங்கே ராணுவ ஆட்சி பிர கடனப்படுத்தப்பட்டது. மக்கள் மத்தியில் உரையாற் றிய ராணுவ தளபதி வாக்கர், "நம் நாட்டின் பிர தமர் ஷேக் ஹசீனா, நாட்டை விட்டே வெளியேறி விட்டார். தற்போதுள்ள சூழலில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யவேண்டிய அவசியமில்லை. போராட்டத்தில் ஈடுபடக்கூடிய மாணவர்களும், பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அமைதி காக்க வேண்டும். வங்க தேசத்தில் இடைக் கால அரசு அமைவதற்கு ராணுவம் துணை நிற்கும். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு செயல்படும். இடைக்கால அரசில், போராட்டக் காரர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப் படும். இந்த கலவரத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்'' என்று உறுதி யளித்தார். வங்க தேச ராணுவ தளபதி, கடந்த ஜூன் 23ஆம் தேதி தான் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றிருக்கிறார். அடுத்த ஒரு மாதத்தி லேயே நாட்டையே நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்றுள்ளார். வழக்கமாக, பாகிஸ்தானில்தான் அடிக்கடி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவது நடக்கும். தற்போது வங்க தேசமும் அந்த பாதைக்கே திரும்பியுள்ளது. வங்கதேசத்தின் நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்துவரும் இந்தியா, இந்தியர்கள் யாரும் தற்போது வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

வங்கதேதச நிலவரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

nkn100824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe