Advertisment

ராங்கால் மாநாட்டு கெடுபிடி ! சமாளிக்குமா த.வெ.க..? வேலுமணியின் முதல்வர் ஆசை! கேரளாவில் ரகசிய யாகம்!

dd

"ஹலோ தலைவரே, தமிழக அரசியல் கட்சிகளுக்கு இது மாநாட்டு சீசன் போலிருக்கு.''”

Advertisment

"ஆமாம்பா, தி.மு.க. அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கத்தில் மாநாடுகளாக அரங்கேறுகிறதே?''”

Advertisment

rr

"உண்மைதாங்க தலைவரே, திராவிடக் கட்சிகளுக்கு நாங்கள்தான் போட்டி என்றபடி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், தன் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அருகே நடத்துகிறது. இந்த நிலையில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, மது ஒழிப்பு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி அக்டோபர் 2 ஆம் தேதி நடத்துகிறது. இதைத் தொடர்ந்து மதுவுக்கு எதிரான எண்ணங்கள் தற்போது பொதுக்கருத்தாக உருவாகி, தி.மு.க. அரசுக்கு ஒருவித சங்கடத்தை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில், பா.ம.க. அன்புமணியும், ஒரு மாநாட்டை நடத்தி தி.மு.க. அரசுக்கு நெருக்கடி தர தயாராகி வருகிறார். இது குறித்து டாக்டர் ராமதாசோடு அவர் நீண்ட ஆலோசனை நடத்திய நிலையில்... சமூக நீதி மாநாட்டை பா.ம.க. நடத்தும் முடிவுக்கு வந்திருக்கிறதாம். இதன்மூலம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்கிற கருத்தியலை பொதுத்தளத்தில் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறது பா.ம.க. ஆனால், ’சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரமில்லை; ஒன்றிய அரசுதான் இதைச் செய்யவேண்டும் என்று சொல்லிவருகிறார் முதல்வர் ஸ்டாலின்.''”

"பா.ம.க. நடத்தும் மாநாடு எப்படி இருக்குமாம்?''”

pmk

"சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி பிரமாண்டமான மாநாட்டை நடத்தவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது தைலாபுரம்.

"ஹலோ தலைவரே, தமிழக அரசியல் கட்சிகளுக்கு இது மாநாட்டு சீசன் போலிருக்கு.''”

Advertisment

"ஆமாம்பா, தி.மு.க. அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கத்தில் மாநாடுகளாக அரங்கேறுகிறதே?''”

Advertisment

rr

"உண்மைதாங்க தலைவரே, திராவிடக் கட்சிகளுக்கு நாங்கள்தான் போட்டி என்றபடி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், தன் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அருகே நடத்துகிறது. இந்த நிலையில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, மது ஒழிப்பு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி அக்டோபர் 2 ஆம் தேதி நடத்துகிறது. இதைத் தொடர்ந்து மதுவுக்கு எதிரான எண்ணங்கள் தற்போது பொதுக்கருத்தாக உருவாகி, தி.மு.க. அரசுக்கு ஒருவித சங்கடத்தை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில், பா.ம.க. அன்புமணியும், ஒரு மாநாட்டை நடத்தி தி.மு.க. அரசுக்கு நெருக்கடி தர தயாராகி வருகிறார். இது குறித்து டாக்டர் ராமதாசோடு அவர் நீண்ட ஆலோசனை நடத்திய நிலையில்... சமூக நீதி மாநாட்டை பா.ம.க. நடத்தும் முடிவுக்கு வந்திருக்கிறதாம். இதன்மூலம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்கிற கருத்தியலை பொதுத்தளத்தில் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறது பா.ம.க. ஆனால், ’சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரமில்லை; ஒன்றிய அரசுதான் இதைச் செய்யவேண்டும் என்று சொல்லிவருகிறார் முதல்வர் ஸ்டாலின்.''”

"பா.ம.க. நடத்தும் மாநாடு எப்படி இருக்குமாம்?''”

pmk

"சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி பிரமாண்டமான மாநாட்டை நடத்தவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது தைலாபுரம். இந்த மாநாட்டில், தமிழகத்தின் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள், சாதிரீதியாக சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என அனைவரையும் அழைத்து இந்த மாநாட்டை பரபரப்பாக நடத்த வேண்டும் என்று நினைக்கிறாராம் அன்புமணி. வட இந்தியாவில் உள்ள சமூக தலைவர்கள் பலரையும் அந்த மாநாட்டுக்கு அழைக்கவும் திட்டங்கள் தயாராகிவருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்று எந்த ஒரு சாதியும் எதிர்ப்புத் தெரிவிக்காது. குறிப்பாக, பெரும்பான்மை சமூகங்கள் எதுவும் எதிர்க்காது. எனவே இந்த மாநாட்டுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது பா.ம.க. அனைத்து சமூகத் தலைவர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கினால் அது தி.மு.க. அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும் என்பதுதான் பா.ம.க.வின் எதிர்பார்ப்பு.''”

"ஜி.எஸ்.டி.யை வைத்து நடக்கும் முறைகேடுகள் தொடர் பாக ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப விருக்கிறது என்கிறார்களே?''”

"அண்மையில் சென்னை வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க.வில் இருக்கும் தனது ஆதரவாளர்களை வைத்து ரகசிய மீட்டிங் நடத்தியது பற்றியும், இதனால் அவர் மீது பா.ஜ.க. சீனியர்கள் ஆதங்கத்தில் இருப்பது குறித்தும், கடந்தமுறை நாம் பேசியிருந்தோம். அதே கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க. மாநிலச் செயலாளரான கராத்தே தியாகராஜன், நிர்மலா சீதாராமனிடம், "தமிழக அரசின் வணிகவரித் துறையினர் ஜி.எஸ்.டி. விவகாரத்தில் புகுந்து விளையாடுகிறார்கள்; நிறைய ஊழல்கள் நடக்கிறது, ஜி.எஸ்.டி. வரியைக் கட்டத் தாமதிக்கும் வியாபாரிகள், நிறுவனங்களை மிரட்டி வணிகவரித்துறை அதிகாரிகள், ஏகத்துக்கும் லஞ்சம் வசூலிக்கிறார்கள்' என்று புகார் சொன்னாராம். இதைத் தொடர்ந்து வணிகவரித் துறைக்கும், தமிழக அரசின் நிதித்துறைக்கும் மத்திய நிதி அமைச்சகத்திடமிருந்து விரைவில் நோட்டீஸ் வரக்கூடும் என்கிறார்கள். அதேபோல் "தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் விவகாரங்களை என்னிடம் கொடுங்கள். நான் ஆக்ஷன் எடுக்கிறேன்' என்றும் சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன், அப்போது பத்திரப் பதிவுத்துறை குறித்த சில விவகாரங்களை அவரிடம் சிலர் கொடுத்திருக்கிறார்கள். இதன் மீது அமலாக்கத்துறையை அவர் ஏவுவார் என்று பா.ஜ.க. தரப்பு எதிர்பார்க்கிறதாம்.''”

"அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி, கேரளாவில் சிறப்பு யாகமெல்லாம் நடத்தியிருக்கிறாரே?''”

rr

"அ.தி.மு.க. மாஜி வேலுமணி பற்றி அவர் கட்சிக் காரர்களே சொல்கிற சுவாரஸ்ய செய்தி இதுதான். அவருக்கு 10 வயது வரை பேச்சே வரவில்லையாம். இதில் பெரும் கவலையடைந்த அவர் குடும்பத்தினர் பல கோயில்களுக்கும் சென்று வழிபட்ட நிலையில்தான் அவருக்குப் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வந்ததாம். இதனால் வேலுமணிக்கும் பக்தி அதிகமாம். இந்த நிலையில் அண்மையில் அவர் தன் சகோதரர் அன்பரசனுடன் கேரளா சென்று அங்குள்ள குருவாயூர் கோயில், பத்மநாபசாமி கோயில், மற்றும் அங்குள்ள ஒரு காளி கோயில் ஆகியவற்றுக்கு தலா ஒரு யானை வீதம் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். மேலும் இந்த யானைகளை வைத்து, தான் விரைவில் அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்று தமிழக முதலமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதலோடு அங்கே அவர் சீக்ரெட் யாகங்களையும் நடத்தியிருக்கிறாராம். இந்தத் தகவல் எடப்பாடி காதுவரை போய் அவரை டென்சனாக்கியிருக்கிறது என்கிறார்கள்.''”

"தமிழக காங்கிரஸுக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறதே?''”

"காங்கிரஸ் கட்சியின் தலைமை அலு வலகமான சத்தியமூர்த்தி பவனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, காங்கிரஸ் கட்சிதான் சம்பளம் கொடுக்கும். ஆனால், கடந்த 3 மாதங்களாக, காமராஜர் அறக்கட்டளையில் உள்ள பணத்தை எடுத்து சம்பளமாகக் கொடுத்துவருகின்றனர். காரணம், அறக்கட்டளை தலைவராகவும் இருக்கும் செல்வப்பெருந்தகையின் முடிவால் தான் இப்படியாம். இதற்கு அறக்கட்டளையின் மேனேஜர், எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அறக்கட்டளையிலுள்ள நிதியைப் பொதுக்காரியங்களுக்குத்தான் செலவிட முடியும் என்றும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், அதை பொருட்படுத்தாமல், "கட்சியில் பணம் இல்லை; அறக்கட்டளை பணத்தைத் தான் எடுக்க வேண்டும். நீங்கள் ரிலீஸ் செய்யுங் கள்' என வலியுறுத்தி சம்மதிக்க வைத்திருக் கிறார் செல்வப்பெருந்தகை. இந்த விவகாரம், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறதாம்.''”

"எடப்பாடி சொல்லித்தான் மாஜி வைத்திலிங்கம் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டதாக ஓ.பி.எஸ். கொந்தளிக் கிறாராமே?''”

"அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கும் அவரது மகனுக்கும் எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு போட்டுள்ளது தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை. ஓ.பி.எஸ்.ஸுடன் இருக்கும் முக்கியமானவர்களில் வைத்தி லிங்கத்துக்கு முதல் இடம் உண்டு. எடப்பாடி சொல்லித்தான் தனக்கு நெருக்கமானவரான வைத்திலிங்கத்துக்கு எதிராக தி.மு.க. அரசு வழக்குப் போட்டிருப்பதாக ஓ.பி.எஸ். குமுறிக் கொண்டிருக்கிறாராம். ’அ.தி.மு.க.விலிருந்து பிரிந்துசென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி மறுப்பதற்குக் காரணமே ஸ்டாலின்தான். அ.தி.மு.க. ஒன்றிணையக் கூடாது என அவர் விரும்புகிறார். அப்படிப்பட்ட ஸ்டாலின் தரப்புக்கு எடப்பாடி தகவல் அனுப்பியதால்தான் வைத்திலிங்கத்துக்கு எதிராக வழக்கு போடப்பட்டிருக்கிறது என் றெல்லாம் ஓ.பி.எஸ். காரணங்களை அடுக்குகிறாராம்.''’

"இதேபோல் என் கவனத்துக்கு வந்த ஒரு தகவலையும் நான் பகிர்ந்துக்கறேன். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டுமானால், அ.தி.மு.க. தலை மையில் வலிமையான ஒரு கூட்டணி உருவாக வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களான செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் போன்றவர்கள் கருதுகிறார்களாம். அப்படி கூட்டணி வலிமையாக உருவாகவேண்டுமானால் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அவர்கள் வைக்கும் வாதம். ஆனால், இதனை எடப்பாடி ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறார். இதனால் அ.தி.மு.க. சீனியர் தலை வர்கள் கடந்த 6 மாதங்களாகவே எடப்பாடி மீது வருத்தத்தில் இருக்கிறார்களாம். எடப் பாடியிடம் அவர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றிபெறாததால், அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று தங்களுக்குள் அவர்கள் ஆலோசித்துவரு கிறார்களாம்.''

nkn280924
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe