குட்கா ஊழலை முன்னிறுத்தி சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனைகளால் மிரண்டு கிடக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடந்துள்ள சோதனைகள் மூலம் பல முனைகளிலிருந்தும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் முதல்வர் எடப்பாடி, உளவுத்துறை மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார்.

igsathayamurthy

இந்த நிலையில், "குடும்ப சூழல் மற்றும் உடல்நலத்தை சுட்டிக்காட்டி, உளவுத்துறையிலிருந்து என்னை மாற்றி விடுங்கள்' என எடப்பாடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் சத்தியமூர்த்தி. இந்த விவகாரம் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து உள்துறை வட்டாரங் களில் விசாரித்தபோது, ""தினமும் காலை மாலை என இரு வேளைகள் எடப்பாடியை சந்தித்து வருபவர் தமிழக உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி. மாலையில் நடக்கும் இவர்களது சந்திப்புகள் பலமுறை நள்ளிரவு வரை நீடித்ததுண்டு. அப்படியிருந்தும் சி.பி.ஐ. நடத்தப்போகும் ரெய்டு குறித்து முன்கூட்டி தகவல் தரவில்லை என சத்தியமூர்த்தியிடம் கடிந்துகொண்டிருக்கிறார்' எடப்பாடி.

Advertisment

ரெய்டு நடந்த அன்று தன்னை சந்தித்த சத்தியமூர்த்தியிடம், ’"அம்மா(ஜெ.) இருந்த வரைக்கும் நம்முடைய உளவுத் துறைதான் டாப்புல இருந்தது. ஐ.பி.க்கே பல தகவல்கள் மாநில உளவுத்துறையிடமிருந்துதான் போகும். அந்தளவுக்கு சோர்ஸ்களை உளவுத்துறையினர் வைத்திருந்தனர். ஆனா, இப்போது அப்படி இல்லை. எல்லோருமே அலட்சியமாக இருக்கிறீர்கள்'’ என வருத்தப்பட்டதோடு, "சி.பி.ஐ.யின் திட்டங்களை உங்களால் ஸ்மெல் பண்ண முடியலையா?''‘ என கேள்வி எழுப்பியிருக்கிறார் முதல்வர். அதற்கு சத்தியமூர்த்தியிடம் பதில் இல்லை. மேலும் சில சம்பவங்களைச் சொல்லி கோபப்பட்டிருக்கிறார் எடப்பாடி. இந்த நிலையில்தான், "உளவுத்துறையி லிருந்து தன்னை மாற்றி விடுங்கள் என முதல்வரிடம் கேட்டுக்கொண் டிருக்கிறார் சத்தியமூர்த்தி'' என் கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, குட்கா ஊழலில் சோதனைகளுக்கு ஆளான அமைச்சர் , டி.ஜி.பி. ஆகிய இருவரையும் பதவியிலிருந்து நீக்குமாறு அரசியல் கட்சிகள் தொடங்கி லஞ்ச ஊழல் களுக்கு எதிரான அமைப்புகள்வரை பல முனைகளிலிருந்தும் கண்ட னங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், எடப் பாடி பழனிச்சாமியை சந்தித்த டி.ஜி.பி. ராஜேந்திரன், ""என்னிடம் எந்த தவறுமில்லை. அதனால் எனக்கு பயமில்லை. என்னால் உங்கள் அரசுக்கு எந்த நெருக்கடியும் வேண்டாம். பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்' என தெரிவிக்க, ""அதெல்லாம் வேண்டாம். எதற்காக இந்த சோதனைங்கிறது எனக்குத் தெரியும். நீங்கள் அமைதியாக இருங்கள். நான் பார்த்துக்கொள் கிறேன்'' என சமாதானப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

Advertisment

ips

இதற்கிடையே, குட்கா ஊழலில் தொடர்புடைய அத்தனை அதிகாரிகளையும் வளைத்துப் பிடிக்க தீவிரம் காட்டிவருகிறது சி.பி.ஐ.! ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றிருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், குற்றவாளிகளிடமிருந்து மேலும் ஆதாரங்களை திரட்ட முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், டி.ஜி.பி. பதவியிலிருந்து ராஜேந்திரன் விலக்கப்பட்டாலோ அல்லது அவராகவே விலகினாலோ அப்பதவியை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுகுறித்து, கோட்டையிலுள்ள உயரதிகாரிகளிடம் பேசியபோது, ""டி.ஜி.பி. பதவியை குறி வைத்து காவல்துறை உயரதிகாரிகளில் சிலர் காய்களை நகர்த்தி வருகின்றனர். தமிழக காவல் துறையில் அதிகபட்சம் 6 டி.ஜி.பி. பதவிகள் இருக்கலாம். தற்போது 5 டி.ஜி.பி.க்கள்தான் இருக்கின்றனர். ஒரு டி.ஜி.பி. பதவி காலியாக இருக்கிறது.

தற்போது, சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர்தான் காவல்துறையின் தலைவர். இந்த பதவியில் இருப்பவர்தான் டி.கே.ராஜேந்திரன். பணியி லிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு அந்த பதவியில் அமர வேண்டும் என்பது ஒவ்வொரு ஐ.பி.எஸ். அதிகாரியின் கனவு.

தற்போது, சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யான ராஜேந்திரனை தவிர்த்து மகேந்திரன், ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகிய 4 டி.ஜி.பி.க்கள் இருக்கின்றனர். இதில், மகேந்திரனும் ராஜேந்திரனும் 1984-வது வருட பேட்ஜ். சீனியாரிட்டிப்படி முதலிடத்தில் மகேந்திரன் இருந்தாலும் ராஜேந்திரனைத்தான் டி.ஜி.பி. ஆக்கினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. மகேந்திரன் எல்லா வகையிலும் ஸ்ட்ரைட் ஃபார்வேட் என்பதால் அவரை ஆட்சியாளர் களுக்குப் பிடிப்பதில்லை.

eps

""1985-ஆம் வருட பேட்ஜில் ஏ.டி.ஜி.பி.க்களாக இருந்த ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் மூவருக்கும் கடந்த வருடம்தான் டி.ஜி.பி. பதவி உயர்வு கிடைத்தது. அந்த வகையில் 6 டி.ஜி.பி.க்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 5 டி.ஜி.பி.க்கள் தான் இருக்கின்றனர். டி.ஜி.பி. ராஜேந்திரன் விலகினால் சீனியாரிட்டிபடி புதிய டி.ஜி.பி.யாக மகேந்திரன் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், 1986 பேட்ஜ் அதிகாரிகள் ஜாஃபர் சேட், லஷ்மி, அசுதோஷ் சுக்லா, மிதிலேஸ் ஜா, தமிழ்ச்செல்வன், ஆசிஸ் பாங்ரே ஆகிய 6 ஏ.டி.ஜி.பி.க்களும் டிஜிபி பதவி உயர்வுக் காக நீண்ட வருடங்களாக காத்திருக்கின்றனர். தமிழகம் தவிர இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்களிலும் 1986 ஆம் வருட பேட்ஜ் அதிகாரிகள் டி.ஜி.பி.யாகி விட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் அது பெரும் கனவாகவே இருக்கிறது என புலம்பிக்கொண்டிருக் கிறார்கள் ஏ.டி.ஜி.பி.க்கள். டி.ஜி.பி. பதவி ஒரு இடம் காலியாக இருப்பதால், டி.ஜி.பி. பதவி உயர்வுக்காக கடும் முயற்சி எடுத்து வருகிறார் ஜாஃபர் சேட்! இப்படி, அண்ணன் எப்போ கிளம்புவார் திண்ணை எப்போ காலியாகும் என கணக்குப் போட்டு டி.ஜி.பி. பதவியை குறி வைத்து முட்டி மோதுகின்றனர் உயரதிகாரிகள்''’ என்கிறார்கள்.

-இரா.இளையசெல்வன்