மழை விட்டும் தூவானம் விடாததுபோல, டி.ஆர்.ஓ. ஆனந்தகுமார் டிரான்ஸ்பர் ஆனபிறகும் அவரது அபிமானிகள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் குறித்த தகவல்களைப் பரப்புவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஆட்சியர் அறைக்கென்று ஒரு மாண்பு உண்டு. ஆட்சியருக்கு வேண்டியவர்கள் அதை மீறிவிட்டனர். அவர்கள் யாரென்றால் -ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி, நேர்முக உதவியாளர் (சட்டம்) சுப்புலட்சுமி, மாரிச்செல்வி (அலுவலக மேலாளர் - குற்றவியல்) ஆகிய மூவரும்தான். தோழிகளான இவர்களின் ஏற்பாட்டில், இரவு 9 மணிக்கு கலெக்டர் சேம்பரில், ஆட்சியர் சிவஞானத்துக்கு கேக் வெட்டி பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடினர்.
யாரை எங்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது போன்ற தோழிகளின் கோரிக்கைகளை, ஆட்சியர் வாயிலாக நிறைவேற்றித் தருகிறார்
மழை விட்டும் தூவானம் விடாததுபோல, டி.ஆர்.ஓ. ஆனந்தகுமார் டிரான்ஸ்பர் ஆனபிறகும் அவரது அபிமானிகள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் குறித்த தகவல்களைப் பரப்புவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஆட்சியர் அறைக்கென்று ஒரு மாண்பு உண்டு. ஆட்சியருக்கு வேண்டியவர்கள் அதை மீறிவிட்டனர். அவர்கள் யாரென்றால் -ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி, நேர்முக உதவியாளர் (சட்டம்) சுப்புலட்சுமி, மாரிச்செல்வி (அலுவலக மேலாளர் - குற்றவியல்) ஆகிய மூவரும்தான். தோழிகளான இவர்களின் ஏற்பாட்டில், இரவு 9 மணிக்கு கலெக்டர் சேம்பரில், ஆட்சியர் சிவஞானத்துக்கு கேக் வெட்டி பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடினர்.
யாரை எங்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது போன்ற தோழிகளின் கோரிக்கைகளை, ஆட்சியர் வாயிலாக நிறைவேற்றித் தருகிறார் செந்தில்குமாரி. மாவட்ட நிர்வாகத்தில் சுப்புலட்சுமியின் தலையீடு அதிகமாக இருக்கிறது. செந்தில்குமாரி, மாரிச்செல்வி போன்றவர்கள் தங்களுடைய பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உள்ளூரில்தான் தங்க வேண்டும். இவர்கள் தங்குவதோ வெளிமாவட்டத்தில். தினமும் மதுரையிலிருந்தே அலுவலகம் வருகிறார்கள். செந்தில்குமாரியை இயக்குவது சுப்புலட்சுமி. செந்தில்குமாரி நீட்டும் இடத்திலெல்லாம் கையெழுத்து போடுகிறார் கலெக்டர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகச் சீர்கேடுகளுக்கு உதாரணமாக இருவரைச் சொல்லலாம். ஒருவர் அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக டிரைவர் மருது. ஆற்றில் மணல் திருடும் கும்பலுக்கு உரிய நேரத்தில் துப்புச் சொல்பவர். இன்னொருவர் தலையாரி அய்யப்பன். மணல் கொள்ளையர்களிடம் மாமூல் வசூலிப்பவர். இந்தநிலையில், மருதுக்கு இடைஞ்சல் தருபவர் என்பதால், அய்யப்பனை விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்தனர். ஆனாலும், மணல் மாமூல் கேட்பதை அய்யப்பன் நிறுத்தவில்லை. "அய்யப்பனுக்கு மணல் மாமூல் கொடுக்க வேண்டாம்' என்று சம்பந்தப்பட்டவர்களிடம் மருது சொல்லிவிடுகிறார். இதனால், அருப்புக்கோட்டை கோர்ட் வளாகத்தில், மருதுவும் அய்யப்பனும் கட்டி உருண்டார்கள். அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையம்வரை புகார் போனது. இந்த விவகாரத்தில், மருதுவுக்கு ஆதரவு நிலை எடுத்தார் செந்தில்குமாரி. இதில் அவருக்கு பலன் என்ன என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்''’என்றார்கள்.
நாம் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரியை தொடர்பு கொண்டோம். “""கலெக்டர் பிறந்தநாளில் சேம்பரில் கேக் வெட்டியது உண்மைதான். டி.ஆர்.ஓ. உட்பட எல்லா அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள். ஏற்பாடு செய்தது நாங்கள் அல்ல. கலெக்டர் மனைவியும் அன்று சேம்பருக்கு வந்தார். ராம்கோ நிறுவனம் கேக் அனுப்பி வைக்கவில்லை. கலெக்டரின் குடும்பத்தினர்தான் கேக் கொண்டுவந்தார்கள். மனுவோடு வரும் மக்களை, தாசில்தாரை பார்க்கவிடாமல் செய்தார் ஓ.ஏ.வாக இருந்த அய்யப்பன். அதனால்தான் அவர், ஆட்சியர் அலுவலகத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். மருது, அய்யப்பன் விவகாரம் ஆட்சியர்வரை சென்றது. ஆட்சியரும் இதுகுறித்த அறிக்கையை அனுப்பிவிட்டார். டி.ஆர்.ஓ. மூலம் அமைச்சரின் பி.ஏ. தந்த அழுத்தத்தினாலேயே, மருதுவுக்கு அருப்புக்கோட்டை ரெகுலருக்கு டிரான்ஸ்பர் கிடைத்தது. மருது விஷயத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. விருதுநகர்-சூலக்கரையில் உள்ள என்னுடைய உறவினரின் வீட்டில் தங்கியிருந்துதான், அலுவலகத்துக்கு தினமும் வருகிறேன். பிள்ளைகள் அழும்போதோ, வேறு ஏதாவது எமர்ஜென்ஸி என்றாலோ, மதுரை வீட்டுக்குச் செல்வேன்''’என்றார்.
நேர்முக உதவியாளர் (சட்டம்) சுப்புலட்சுமியை தொடர்புகொண்டோம். ""வெளிமாவட்டத்தில் தங்கியிருந்து, தினமும் வேலைக்கு வருவதெல்லாம் சின்ன அட்ஜஸ்ட்மென்ட்தான். வேலைக்கு பாதிப்பு இல்லாமல் நடந்துகொள்கிறோமா என்றுதான் பார்க்க வேண்டும். கலெக்டரை தோழிகள் மூவர் ஆட்டிவைக்கிறார்கள் என்பது தவறான பேச்சு'' என்றார்.
""சூலக்கரையில் தங்கியிருந்து தினமும் அலுவலகம் வருகிறாரா செந்தில்குமாரி? அரசாங்கத்துக்கு எந்த அளவுக்கு இவர்கள் உண்மையாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு பொய்யே போதுமானது''’என்று சிரிக்கிறது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரம்.
-சி.என்.இராமகிருஷ்ணன்