நண்பனை புதைத்த நண்பன் -மலட்டாற்று பகீர்

ss

விழுப்புரம் மாவட்டத்தையே அதிரவைத்திருக்கிறது அந்த சேமங்கலம் விவகாரம். அதைத் தொடர்ந்து மர்மம் நிறைந்த மலட்டாற்றையும் பீதியோடு பார்க்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சேமங்கலம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமரன். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் தனது தந்தையுடன் சேர்ந்து தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

ss

இவரும் தந்தையும் கரும்பு பயிரிட்டு அதை வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பியுள்ளனர். அதற்கான தொகை 8 லட்ச ரூபாய் இவரது வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது. குடும்பச் செலவிற்காகவும், வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் பணத்தை எடுத்து வருமாறு சில மாதங் களுக்கு முன்பு மகன் முத்துக்குமரனிடம் கூறியுள்ளார் முருகன்.

அதன்படி ஆனத்தூரில் உள்ள வங்கியில் பணம் எடுப்பதற்காக தன் நெருங்கிய நண்பனான தமிழரசனுடன் சென்றிருக்கிறார் முத்துக்குமரன். பி.இ. பட்டம் படித்த தமிழரசன் விவரமானவர் என்ற நினைப்பில் அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆனால் தமி ழரசனோ, வங்கி

ஆனால் தமி ழரசனோ, வங்கியில் பணம் எடுப்பதற்கான செலானில் முத்துக்குமரனிடம் கையெழுத்தை வாங்கிக்கொண்டு, அவரை வெளியே நிற்கச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்து வங்கியில் அவ்வளவு பணம் இல்லையாம். சில நாட்கள் கழித்து வருமாறு கூறிவிட்டார்கள் என்று தமிழரசன் கதை அளந்திருக்கிறார்.

நண்பன் சொன்னதால் இதையும் நம்பியிருக்கிறார் முத்துக்குமரன். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வருவதாகத் தனது தந்தையிடம் கூறிவிட்டு முத்துக் குமரன் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. மகனைக் காணாமல் தவித்த முருகனும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர்.

பிறகு திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் கவலையோடு புகார் அளித்தார். எப்போதும் போல காவல்துறை இதிலும் அலட்சியம் காட்டியதால், பொறுமையிழந்த முருகன் தனது மகனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றமோ, அலட்சியம் காட்டிய காவல்துறையின் தலையில் பட்டென்று ஒரு கொட்டு வைத்தது. அதன் பிறகு முத்துக் குமரனைத் தேடும் பணியைத் தீவிரப் படுத்திய காவல்துறையினர், முத்துக்குமரனின் நண்பனான தமிழரசன் மீது சந்தேகப் பார்வையை வீசினர்.

தமிழரசனை அள்ளிவந்து தங்கள் பாணியில் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழரசன் முத்துக்குமரனைக் கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதில் இருந்த தகவல் இதுதான்...

ss

வங்கிக்குப் பணம் எடுக்க முத்துக் குமரனுடன் சென்ற தமிழரசன், அந்தப் பணத்தைத் தன் பெயருக்கு அதே வங்கியில் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கிறார். அந்தப் பணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆடம்பரமாகத் திருமணமும் செய்து கொண்டார் தமிழரசன். மேலும் ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த முத்துக்குமரன், நண்பன் தமிழரசனிடம் கறாராகப் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

அந்த பணத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதை ஒப்புக் கொண்ட தமிழரசன், வங்கியில் அந்தப் பணம் அப்படியே உள்ளது என்றும், அதை எடுத்துத் தருகிறேன் என்றும் சாக்குப் போக்கு சொல்லி நாட்களைக் கடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி தமிழரசன் பணம் எடுத்துத் தருவதாக கூறி முத்துக் குமரனை இரு சக்கர வாகனத்தில் ஆனத்தூரில் உள்ள வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார். வழக்கம்போல் வங்கியின் உள்ளே சென்றுவந்த தமிழரசன், அங்கே நெட்வொர்க் பிரச்சனை உள்ளது என்று கூறியுள்ளார். அதை நம்ப மறுத்தார் முத்துக்குமரன். உடனே தமிழரசன், இந்த வங்கியின் தலைமை வங்கி விக்கிர வாண்டியில் உள்ளது, அங்கு சென்று பணத்தை எடுத்துத் தருகிறேன் என்று விக்கிரவாண்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்,

அங்கு சென்ற பிறகும் அதே நெட் வொர்க் பிரச்சனையை காரணமாகக் கூறி பணம் எடுக்கமுடியவில்லை என்று தமிழரசன் டபாய்க்க, அதை ஏற்க மறுத்த முத்துக்குமரன், நண்பனிடம் பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது முத்துக்குமரனை சமாதானம் செய்து ஊருக்கு அழைத்து வந்துள்ளார் தமிழரசன். ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் வழியில் மலட்டாறு பகுதியில் வாகனத்தை நிறுத்திய தமிழரசன், இரவு நேரம் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை சாதகமாக ஆக்கிக்கொண்டு, வாகனத்தில் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியை எடுத்து, முத்துக்குமரனின் தலையில் திடீரென்று அடித்துள்ளார். இதனால் அங்கேயே இரத்த வெள்ளத்தில் விழுந்த முத்துக்குமரன் அப்படியே இறந்து போய்விட்டாராம். முத்துக்குமரன் உடலை, அந்த ஆற்றுப் பகுதி யிலேயே புதைத்து விட்டு, எதுவும் தெரி யாதது போல வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

இந்த மலட்டாற்றில் முத்துக்குமரைப் புதைத்த இடத்தை தமிழரசன் அடையாளம் காட்டியபோது, அங்கே முத்துக்குமரன் உடல் கிடைக்கவில்லையாம். இதனால், முத்துக்குமரன் உறவினர்கள் உடலை கண்டுபிடித்துத் தரக்கோரி மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கண்டுபிடிப்பதாக வாக்குறுதி அளித்து அமைதிப்படுத்தினார்கள்.

சிறுவயதிலிருந்தே நெருங்கிப் பழகிய நண்பனை, பணத்திற்காகக் கொலை செய்த தமிழரசன் விவகாரத்தை மிரட்சியாகக் கவனிக்கிறது விழுப்புரம் மாவட்டம். இன்னும் என்னென்ன பூதங்கள் இந்த விவகாரத்தில் புறப்படப்போகிறதோ?

-எஸ்.பி.எஸ்.

nkn150125
இதையும் படியுங்கள்
Subscribe