ருத்து சுதந்திரத்தை நிலைநாட்டும் மற்றுமொரு சட்டப்போராட்டம் நக்கீரனின் பங்களிப்புடன் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தின் முன்னணி இதழ்களும் இந்த சட்டப்போரில் முன்னின்றன.

தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்களை விமர்சித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசியது குறித்து அவ்வப் போது தமிழக அரசு கிரிமினல் அவதூறு வழக்குகளை தமிழகம் முழுதும் தொடர்ந்து வருவது வழக்கம். ஜெ.ஆட்சியில் இதற்கெனவே அரசு வழக்கறிஞர் ஒருவர் நியமிக் கப்பட்டார்.

jj

தலைவர்கள் வெளியிட்ட கருத்துகளை வெளியிட்டு தங்க ளுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தினமலர், முரசொலி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நக்கீரன் ஆகியவற்றின் மீதும் அவற்றின் ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. 2012ஆம் ஆண்டு பிறப்பிக் கப்பட்ட அரசாணைப் படி, நக்கீரன்மீது 2 வழக்குகள் பதிவாகின. அதற்கு முன்பும் பின்பும் ஏராளமான வழக்குகள் உண்டு.

Advertisment

தமிழக அரசின் இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் தொடர்ந்த வழக்குகள், மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் தனியாக பிரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணையில் உள்ளது. அதே போல், தங்கள் மீதான வழக்கு களை ரத்து செய்யக்கோரியும், அதற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி "தி ஹிந்து' தரப்பில் என்.ராம், கோலப்பன், பத்மநாபன், சித்தார்த் வரத ராஜன் ஆகியோரும், "நக்கீரன்' தரப்பில் நமது ஆசிரியர் நக்கீரன் கோபால், "முரசொலி' தரப்பில் செல்வம், "தினகரன்' தரப்பில் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், "டைம்ஸ் ஆஃப் இந்தியா' தரப்பில் சுனில் நாயர், சந்தானகோபாலன், "தினமலர்' தரப்பில் ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குகளை தொடர்ந்திருந் தனர். இந்த வழக்குகள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

jj

மூத்த வழக்கறிஞர் குமரேசன் உள்ளிட் டோர் அழுத்தமான வாதங்களை எடுத்து வைத்தனர். தலைவர்களின் கருத்துகளை பதிவு செய்யும் விதமாக பத்திரிக்கையில் செய்தி வெளியிடும்போது, அந்த கருத்துகளின் அடிப் படையில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுவதென்பது பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தி லானது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனை சட்டத்தை இந்த அரசும் கடைபிடித்து வரு கிறது எனக் குற்றம்சாட்டப்படது. மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாக செய்திகள் போடபட்டாலும் அவதூறு வழக்கு தொடரப் படுகிறது என்றும் வாதிடப்பட்டது.

Advertisment

நக்கீரன் தரப்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் பி.டி.பெருமாள், தனி நபர் மீது விமர்சனம் செய்து கருத்துகள் வெளியிட்டாலும் அரசின் செலவில்தான் இந்த அவதூறு வழக்கு கள் பதியபடுகிறது என்பதால் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது என்பதை உதா ரணத்துடன் எடுத்து வைத்து வாதிட்டார். ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிட்டது பற்றி நக்கீரனில் வெளியானது. அப்போது ஜெயலலிதா, தனது தனிப்பட்ட வாழ்க்கையை செய்தியாக வெளியிட்டதாக கூறி தனிப்பட்ட முறையில் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த நிலையில் அதே செய்திக்காக அரசு சார்பாகவும் அவதூறு வழக்கு தொடுத் திருப்பது என்பது, தனிமனிதர் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்காக அரசுப் பணத்தை செலவழித்து வழக்குத் தொடுப்பதாகும்.

நக்கீரனில் வெளியான இன்னொரு செய்தியில், ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வந்த பிரியா மகாலட்சுமி என்ற பெண் கைது செய்யப் பட்ட நிலையில், அவரை நக்கீரன் சிறையில் சந் தித்து பேட்டி எடுத்து வெளி யிட்டது. அந்தப் பெண் கூறிய கருத்துக்களை வெளியிடும்போது இறுதியாக ""இந்தப் பெண் கூறுவது நம்பும் வகையில் இல்லை'' என்றும் அதிகாரத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி இந்தப் பெண் வேறு ஆதாயம் அடைய நினைப்பதாகவும் அது கண்டிக்கத்தக்கது என்றும் நக்கீரன் செய்தியில் பதிவு செய்திருந்தனர்.

jj

முதல்வர் மீது களங்கம் கற்பிக்க முயன்ற வரை அம்பலப்படுத்திய அந்த செய்திக்காகவும் அரசு செலவில் நக்கீரன்மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டதை எடுத்துக்காட்டினார் வழக்கறிஞர் பி.டி.பெருமாள். இந்த இரண்டு வழக்குகளும் நக்கீரன் சம்பந்தப்பட்ட வழக்கு கள்.

அரசு பணி தொடர்பான செய்திகளை வெளியிடும்போது அதில் ஏதேனும் தவறு இருப்பின் சம்பந்தப்பட்ட அமைச்சர் அல்லது அதிகாரி சார்பாக அரசு குற்றவியல் நடை முறைச் சட்டம் 199(2)படி அவதூறு வழக்கு தாக்கல் செய்யலாமே தவிர அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய செய்தி களுக்கு அரசு சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்தது சட்டத்திற்கு புறம்பானது எனவே இந்த வழக்குகள் செல்லாது என்றும் நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதாடினார். வழக்கறிஞர் சிவகுமார் துணை நின்றார்.

இந்து குழுமம் தரப்பில் ஆஜரான வழக் கறிஞர் பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அதிகளவில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுவதாக குறிப்பிட்டார். நக்கீரனில் வெளியான மாட்டுக்கறி செய்தியைத் தொடர்ந்து ஆளுங்கட்சியினரால் நமது அலுவலகம் கொலைவெறித் தாக்குதலுக் குள்ளானது. அமைச்சர்களின் ஆட்களும், எம்.எல்.ஏக் களும் நேரடி யாகப் பங் கேற்ற இந்தத் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட "தி இந்து' ஆங் கில நாளிதழ், அதில் நக்கீரனில் வெளியான செய்தி என்ன என்பதையும் குறிப்பிட்டிருந்தது. இதற்காக அதன்மீது ஒரு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

செய்தி குறித்து ஆளுந்தரப்பு விளக்கம் வெளியிட்டு, செய்தி வெளியிட்ட பத்திரிகையும் அதற்கான மறுப்பை வெளியிட்ட பிறகு அதனை செய்தியாகப் பதிவு செய்வதில் எங்கிருந்து அவதூறு வருகிறது என "இந்து' குழுமம் தரப்பில் வாதிடப்பட்டது.

ஜெயலலிதா தன் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான நாட்களை கொடநாட்டில் இருந்து அறிக்கை வாயிலாகவே ஆட்சி நடத்துகிறார் என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் விமர்சித்ததற்காக அவர் மீதும், அவரது கருத்தை வெளியிட்ட இந்து உள்ளிட்ட பத்திரிகைகள் மீதும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பான வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டன.

வாதங்களுக்குப் பின் தேதி குறிப் பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கில் மே 21 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அப்துல் குத்தூஸ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். கிரிமினல் அவதூறு சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பத்திரிகைகள் மீது வழக்குத் தொடர்வதை அரசுத் தரப்பு கைவிடவேண்டும். அரசு ஊழியர்களும் அரசமைப்பு நிர்வாகத்தில் உள்ளவர்களும் மக்கள் பணிகளை செய்கிற நிலையில் அது குறித்த விமர்சனங்களை ஏற்கும் நிலையில் இருக்கவேண்டும். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதுபோல கிரிமினல் அவதூறு சட்டத்தை அரசு பயன்படுத்தக் கூடாது.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கிரிமினல் அவதூறு வழக்குகளைப் பதிவு செய்யும் போது வெறும் தபால்காரர்கள் போல செயல் படக்கூடாது. விசாரணை நீதிமன்றங்களும் பத்திரிகைகள் மீதான கிரிமினல் அவதூறு வழக்குகளுக்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து, திருப்தியாக இருந்தால் மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும் என விரிவாக எடுத் துரைத்தார்.

அரசியல்வாதிகள் மீதான கிரிமினல் அவதூறு வழக்குகள் மக்கள் பிரதிநிதி களுக்கான விரைவு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதில், விஜயகாந்த் மீதான வழக்கை தற்போதைய கூட்டணி நிலைப் பாடுகளால் திரும்பப் பெறும் விருப்பத்தை அ.தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், விஜயகாந்த் பேசியதை வெளியிட்ட பத்திரிகைகள் மீதான வழக்கு நீடிக்கிறது. இந்த முரண்பாடுகளையும் நீதிபதி அப்துல் குத்தூஸ் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி, ஒரு சராசரி குடிமகனாக, பத்திரிகைகளின் ஜனநாயக பங்களிப்பை உணர்ந்திருக்கிறேன். நாட் டைக் கட்டமைப்பதில் கண்காணிப்புடன் செயல்பட வேண்டிய கடமையும் பொறுப்பும் பத்திரிகைகளுக்கு இருக்கிறது’ என்று கூறி, இந்த விசாரணையில் தொடர்புடைய, அ.தி.மு.க அரசால் தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.

கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரித்த கயிறு ஒன்றிலிருந்து பத்திரிகைகளை விடுவித்துள்ளது நீதியின் கரங்கள் நக்கீரன்மீது ஜெயலலிதா அரசு தொடர்ந்த 20 அவதூறு வழக்குகளில் 2 வழக்குகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டப்போராட்டம் தொடர்கிறது.