Advertisment

இலவச வீட்டு மனைப்பட்டா! நீண்ட நாள் கனவை நனவாக்கிய அமைச்சர்!

ff

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றிபெற்ற பெருமைக் குரியவர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி. அமைச்சராகப் பொறுப் பேற்றதுமே தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிக்கப்பட்ட கிட்டங்கிகள் மற்றும் ரேசன் கடைகளில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

dd

அதேபோல், தேர்தல் நேரத்தில் பொதுமக்களுக்கு வாக்களித்ததுபோல், மாணவர்களின் உயர்கல்விக்கென இரண்டு கலைக்கல்லூரிகள், ஐ.டி.ஐ. மற்றும் ஐ.ஏ.எஸ்,, ஐ.பி.எஸ். பயிற்சி வகுப்புகளை யும் கொண்டுவந்திருக்கிறார். ரூ.129 கோடிக்கு கூட்டுக்குடிநீர்த் திட்டம், காய்கறிகள் பதப்படுத்துவதற்காக ரூ.5 கோடியில் தொழிற்சாலை கிட்டங்கி, சமுதாயக்கூடம், அரசு மருத்துவமனையில் உயர்தர அவசரச் சிகிச்சைப் பிரிவு என அனைத்து அடிப் படை திட்டத்தையும் தொகுதி முழுவதும் கொண்டுவந்து, அசுர வேகத்தில் பணிகளும் ந

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றிபெற்ற பெருமைக் குரியவர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி. அமைச்சராகப் பொறுப் பேற்றதுமே தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிக்கப்பட்ட கிட்டங்கிகள் மற்றும் ரேசன் கடைகளில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

dd

அதேபோல், தேர்தல் நேரத்தில் பொதுமக்களுக்கு வாக்களித்ததுபோல், மாணவர்களின் உயர்கல்விக்கென இரண்டு கலைக்கல்லூரிகள், ஐ.டி.ஐ. மற்றும் ஐ.ஏ.எஸ்,, ஐ.பி.எஸ். பயிற்சி வகுப்புகளை யும் கொண்டுவந்திருக்கிறார். ரூ.129 கோடிக்கு கூட்டுக்குடிநீர்த் திட்டம், காய்கறிகள் பதப்படுத்துவதற்காக ரூ.5 கோடியில் தொழிற்சாலை கிட்டங்கி, சமுதாயக்கூடம், அரசு மருத்துவமனையில் உயர்தர அவசரச் சிகிச்சைப் பிரிவு என அனைத்து அடிப் படை திட்டத்தையும் தொகுதி முழுவதும் கொண்டுவந்து, அசுர வேகத்தில் பணிகளும் நடந்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக கீரனூர், கள்ளி மந்தையம், இடையகோட்டை, தாழையூத்து மற்றும் ஒட்டன்சத்திரத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி, ஐம்பது கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார்.

இத்தொகுதியில், பல வருடங்களாக புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டிக் குடியிருந்துவரும் ஏழை எளிய மக்கள், இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டு மென்று கோரிக்கை வைத்ததால், தொகுதி மக்களின் கனவை நனவாக்கும் வகையில், கள்ளிமந்தையம், இடையபட்டி, செட்டிய பட்டி, விருப்பாச்சி, சக்கரபட்டி, எல்லைப் பட்டி, தேவத்தூர், சின்னக்கலையாம்புதூர், திடீர்நகர், வினோபா நகர், ஜீவா நகர் உள்பட கிராமப்பகுதிகளைச் சேர்ந்த 7200 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை அமைச்சர் வழங்கியிருக்கிறார்.

gg

Advertisment

"எங்க அப்பா, அம்மா இங்கு வந்து குடிசை போட்டுக் குடியிருந்தாங்க. அப்பல்லாம் நான் சின்னப்பிள்ளை. லைட் வசதி இல்லாததால் சிமில் விளக்கு தான் பொருத்துவோம். அண்ணன் சக்கரபாணி எம்.எல்.ஏ. வந்தபின்பு தான் எங்களுக்கு லைட், தண்ணீர், சாலை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். இருந்தாலும் புறம்போக்கு இடமாக இருப்பதால் எப்பவேணாலும் அரசு காலி பண்ணச் சொல்லிவிடும் என்ற பயம் இங்குள்ள 120 குடும்பங்களுக்கும் இருந்தது. அதனால்தான் எங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வேண்டும்னு தேர்தலப்ப வலியுறுத்தினோம். அதை மறக்காத அமைச்சர் இப்போது எங்களுக்கு இலவசமாக வீட்டு மனைப்பட்டாக்களைக் கொடுத்து எங்கள் கனவை நிறைவேத்தியிருக்கார். இந்த நன்றியை உயிருள்ளவரை மறக்கமாட்டோம்'' என்று உருகினார் திடீர் நகர் ரெங்கம்மாள்.

வினோபா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ரெங்கநாதனிடம் கேட்டபோது, "40 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டிக் குடியேறிய எங்களுக்கு, எந்த அளவுக்கு வீடு கட்டி யிருக்கிறோமோ, அதே அளவுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியிருக்கிறார் அமைச்சர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பட்டா கேட்டபோது, பணம் கொடுத்தால் வாங்கிக் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் இப்ப பத்து பைசாகூட செலவில்லாமல் பட்டா கொடுத்திருக்கிறார்கள். இதன்மூலம் வங்கிக்கடன் வாங்கி வீடு கட்டிக்கொள்ளலாம். ஏற்கெனவே இப்பகுதிக்கு அருகிலுள்ள காந்தி நகர் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கியிருக்கிறார்'' என்று கூறினார்.

dd

"30 வருடங்களுக்கு மேலாக 80 குடும்பங்கள் குடிசை போட்டு வாழ்ந்து வந்தோம். இதில் 30 பேர் புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு இருந்ததால் இலவச வீட்டு மனைப்பட்டா கொடுத்துட்டாங்க. என்னைப் போல் 50 குடும்பங்கள் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் குடிசைப் போட்டுக் குடியிருப்பதைப் பார்த்த எங்க அமைச்சர், அந்த இடத்து உரிமையாளரிடம் பேசி, மொத்த இடத்தையும் விலைக்கு வாங்கி, அந்த இடத்தில் வீடு கட்டி வசித்துவந்த எங்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்துள்ளார். கூடிய விரைவில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின்மூலம் வீடு கட்டித் தரச்சொல்லியிருக்கிறார்'' என்று நெகிழ்ச்சியாகக் கூறினார் விருப்பாச்சியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி போஸ்.

இது சம் பந்தமாக அமைச்சர் சக்கரபாணியிடம் கேட்டபோது, "தொகுதி மக்க ளின் குறை களையும், கோரிக்கை களையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், கலைஞர் மூலம் கொடுக்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகையை நிறுத்திவிட்டனர். தற்போது தலைவர் ஆட்சிக்கு வந்தபின் மீண்டும் முதியோர் உதவித்தொகையை 13 ஆயிரம் பேருக்கு மேல் வழங்கி இருக் கிறேன். அதுபோல் தொகுதி முழுக்கவே வீட்டு மனைப்பட்டா கொடுத்து வருகிறேன். மேலும் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கொடுப்பதற்கான ஆய்வுப் பணி கள் நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் பட்டா கொடுக்கப்படும். அதுபோல் கீரனூர், ஒட்டன்சத்திரத்தில் ஆயிரம் குடியிருப்புகள் இருக்கும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி என் தொகுதி மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் கூடிய விரைவில் பூர்த்திசெய்வேன்'' என்று கூறினார்.

nkn021122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe