நகர்ப்புற மற்றும் கிரா மப்புற மக்களில் வீடு இல்லாதவர் களுக்கு அல்லது பழு தடைந்த வீடுகளை புதுப் பிக்க விரும்புவோருக்கு உதவு வதற்கான திட்டமாக உள்ளது, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா -PMAY). இத்திட்டம் 2028-29 வரை நீட்டிக்கப்பட்டு, மேலும் 2 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது, தமிழ்நாட்டில் குடிசை இல்லாத கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டம். 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி ஒன்றியத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் 61 வயது முதிய வரான நடராஜன். கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட 100 சதவீத மாற்றுத்திறனாளி ஆவார். இவருடைய மனைவி லட்சுமியும் 90 சதவீத காது கேட்புத் திறன் குறை பாடுள்ள மாற்றுத்திற னாளியே.
அரசுத் திட்டத்தின் மூலம் இலவச வீடு பெறுவதற் கான முழுத் தகுதியும் உள்ளவர்கள் என்பதால், முதுமையில் ஆதரவின்றி வாழ்ந்துவரும் இந்த மாற்றுத்திறனாளி தம்பதியர், கலைஞர் கனவு இல்லம் திட்டத் தின் மூலம் தங்களுக்கும் வீடு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் 4-8-2025 அன்று மக்கள் குறைதீர்க்கும் முகாமில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விண்ணப்பித்தனர். சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலரைப் பார்க்கும்படி குறிப்பாணை வந்ததும், 25-8-2025 அன்று அவரைச் சந்தித்தனர். அப்போது அந்த வட்டார வளர்ச்சி அலுவலர், “"உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? உங்கள் சகாப்தம் முடிந்துவிட்டது. இங்கேயும் இலவச வீட்டுக்கு மனு அளித்தவர்களின் தேர்வு முடிந்துவிட்டது. இனிமேல் பள்ளப்பட்டி ஊராட்சி சிவகாசி மாநகராட்சி ஆகப்போகிறது. 2026 தேர்தல் நடந்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்களோ, அதன்பிறகு என்ன சட்டம் வருமோ, எதுவும் உறுதியாகச் சொல்லமுடியாது. அப்படியே யார் ஆட்சி அமைத்தாலும் உங்களுக்கு இலவச வீடு கிடைக்காது''’என்று எரிச்சலுடன் திட்டியிருக் கிறார்.
அந்த நிலையிலும் நம்பிக்கை இழக்காத நடராஜன் தம்பதியினர், "நாங்கள் மத்திய அரசின் பாரதப் பிரதமர் வழங்கும் இலவச வீடு கேட்டு விண்ணப்பிக்கப்போகிறோம்''’என்று கூற, டென்ஷனான வட்டார வளர்ச்சி அலுவலர், "பிரதமராலும் உங்களுக்கு இலவச வீடு தரமுடியாது. உங்களுக்கு கட்டாயம் வீடு வேண்டுமென்றால், எமலோகம் சென்று அய்யன் சிவபெருமானைப் பார்த்து கேளுங்க. நீங்க புண்ணியம் செய்திருந்தால் சொர்க்கத்திலும், பாவம் செய்திருந்தால் நரகத்திலும் நிச்சயம் வீடு கிடைக்கும்''’என்று நடராஜன் தம்பதியரின் இறப்புக்குப் பின் இதுதான் நடக்கும் என்கிற ரீதியில் பேசி கிண்டலடித்துள்ளார்.
மனம் தளராத அத்தம்பதியர், "மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அதிகாரியாக இருந்துகொண்டு இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா? தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு மனு எழுதி அனுப்புவோம்''’என்று உறுதியுடன் கூற, அந்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. "முதலமைச்சர் என்றால் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குத்தான். சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தைப் பொறுத்தமட்டிலும் நான்தான் முதல்வர்''’என்று வாய்க்கு வந்ததைப் பேசி, அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
நடந்த கசப்பான சம்பவத்தை விவரித்து, பிரதமருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மனு அனுப்பிவிட்டு, நமக்கும் கடிதம் அனுப்பியிருந்தனர். அவர்கள் குடியிருந்த வாடகை வீட்டுக்குச் சென்றோம். நம்மிடம் முதியவர் நடராஜன், "அன்னிக்கு எங்ககிட்ட கேவலமா நடந்துகிட்ட அந்த அதிகாரியோட பேரு என்னன்னு தெரியல. பார்வைக் குறைபாடு உள்ளவன்தானே? இவனால என்ன பண்ணமுடியும்னு அவமரியாதையா பேசி எங்கள நடுங்க வச்சிட்டாரு''’என்றவர், நியூஸ் பேப்பர் கட்டிங் ஒன்றை நீட்டினார். அதில், அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் இலவச வீடுகள் என்று தலைப்பிட்டு, "கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் சில ஊர்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வீடுகளை ஏழைகளுக்கு வழங்காமல், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஓவர்சீயர் எனும் மேற்பார்வை அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கிக்கொண்டதாகவும், பொதுமக்கள் பெயரில் வீடுகளைக் கட்டிய கான்ட்ராக்டர், அவரே வைத்துக்கொண்ட தாகவும், இது சம்பந்தமாக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புகார்கள் வந்ததாகவும், விசாரணை நடந்துவருவதாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது.
உடல் இயக்கக் குறைபாடு காரணமாக ஒருபக்கக் கழுத்தும் முகமும் பக்கவாட்டில் திரும்பிய நிலையிலேயே நம்மிடம் பேசிய நடராஜன், "சிவகாசியிலும் இப்படித்தானே நடந்திருக்கும்? தகுதி இல்லாதவங்களுக்கு சிபாரிசு மூலம் வீடு கிடைச்சிருது. எந்த ஏழை மக்களுக்காக திட்டம் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்கிறார்களோ, அந்த ஏழைகளுக்கு அத்திட்டத்தால் ஒரு பயனும் கிடைப்பதில்லை. அதிகாரிகள் பண்ணுவதெல்லாம் கொடுமையாக இருக்கிறது?''’என்றார் பரிதாபமாக.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சியை தொடர்புகொண்டோம். "மோடி வீடு இன்னும் இங்கே வரல. நடராஜன் என்னை வந்து பார்க்கல. நான் இப்ப புதுசா வந்திருக்கேன். அதிகாரிங்க நாங்களா வீடு கொடுக்கிறோம்? கவர்மெண்ட் வீடு கொடுக்குது. பயனாளி களுக்கு கிடைச்சிட்டு போகுது. அதிகாரியா இருந்துகிட்டு அப்படி பேசியிருக்கக்கூடாதுல்ல... அது தப்புல்ல. நான் அப்படியெல்லாம் பேசமாட்டேன். திட்டம் வந்தால் செய்து கொடுப்பேன்''’என்றார்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நடராஜனைப் போன்றவர்கள் இத்தகைய திட்டங்களால் பயனடைவதை கனவிலும்கூட நடக்கவிடாமல், முறைகேடுகளில் ஈடுபடுவோர் தட்டிப் பறித்துவிடுகின்றனர்.
-அதிதேஜா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/freehouse-2025-11-21-10-15-10.jpg)