"கிணற்றைக் காணோம்' எனும் திரைப்பட நகைச்சுவைக் காட்சிபோல வருவாய்த் துறையில் கோவை மாவட்டத்தில் மட்டும் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினருக்கான துணை வட்டாட்சியர் பின்னடைவு காலிப் பணியிடங்கள் (Backlog vacancies) 38-ஐயும், மாநில அளவில் 923 காலிப் பணியிடங்களையும் ஏப்பமிட்டுள்ளனர் சாதிய அதிகாரிகள். இட ஒதுக்கீட்டில் அரசையே ஏமாற்றியது தான் கொடுமை!

சமீபத்தில் கோவை மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சார்பில் கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆணையத் தலைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், காவல் ஆணையர் சரவணசுந்தர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடி பொதுமக்கள், அமைப்பினர் தங்களது பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து நீதியரசரிடம் மனு அளித்தனர். "அந்த சாதிக்காரன் கீழே நாங்கள் வேலை பார்க்கணுமா?' என்கிற சாதிய வன்மம் கொண்ட அதிகாரிகளால் தாங்கள் பாதிக்கப்பட்டதை அந்த மனுவில் புள்ளிவிவரத்தோடு தெளிவாக தெரிவித்தனர். 

இதுகுறித்து பேசிய துணைதாசில்தார் ஒருவரோ, "தமிழ்நாடு அரசு பணியாளர் நிபந்தனை சட்டம் 2016 பிரிவு 27ல் குறிப்பிட்டுள்ளவாறு, பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியின வகுப்பினருக்கான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நடப்பு ஆண்டில் இல்லையெனில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு அந்த காலிப்பணியிடத்தை காலியாகவே பராமரிக்க வேண்டும். நான்கு ஆண்டுகளிலும் தகுதியான பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் அலுவலர்கள் இல்லை எனில் அரசுக்கு மேற்படி பணியிடங்களை ஒப்படைவு செய்யவேண்டும். இதுபோன்ற விதிமுறைகளை தமிழக வருவாய்த்துறையில் பின்பற்றாமல், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்களில் அரசின் உத்தரவு பெறாமல், விதிமுறைகளை மீறி பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் அல்லாத அலுவலர்களைக் கொண்டு நியமனம் செய்து அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பு அலுவலர்கள் தகுதி பெற்றிருந்தும், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை நிர்வாக ஆணையரக கடிதத்தின்படி விதிமுறைகளைப் பின்பற்றி அவர்களை நியமனம் செய்யாமல், மேற்படி காலிப் பணியிடங்களில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் அல்லாத வகுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் மட்டும் 2019ஆம் ஆண்டு தொடங்கி, சாதிய வன்மத்தால் விழுங்கப்பட்ட பணியிடங்கள் 38. மாநில அளவில் 923. இதனால் எங்களைப் போல் துணை தாசில்தார்கள், தகுதி இருந்தும் துணை தாசில்தார்களாகவே இருக்கின்றோம். இது மாவட்ட நிர்வாகத்தின் வன்கொடுமையே'' என்றார் அவர்.

Advertisment

dy.tushildar1

கோவை மாவட்ட வருவாய்த் துறையில் 30 துணை வட்டாட்சியருக்கான (பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான) எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவு காலிப் பணியிடங்களில் சர்ய் நஈ/நப அலுவலர்களைக் கொண்டு விதிமுறைகளை மீறி முறைகேடாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆர் கவிதா - வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஜெயபாரதி, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை,  மோகன் பாபு, வட்டாட்சியர், வால்பாறை, எம்.சேகர் ஆதி, திராவிடர் நல அலுவலர் (வட்டாட்சியர் நிலை), பொள்ளாச்சி, விஜயரங்க பாண்டியன், வட்டாட்சியர், கோவை (வடக்கு) வட்டம், வி.ராஜேந்திரன், வட்டாட்சியர், ஆனைமலை, எஸ்.வாசுதேவன், வட்டாட்சியர், பொள்ளாச்சி, ரமேஷ்குமார், வட்டாட்சியர், பேரூர் ஆகியோர்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த புகாரில் குறிப் பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட துணை தாசில்தார் ஒருவரோ, "நான் 2012ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் பணியில் இணைந்து, 2015ஆம் ஆண்டிற்குள் அனைத்துத் தகுதியான தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, துணை வட்டாட்சியர் பட்டியலுக்கான தேர்ந்தோர்பட்டியலுக்கு தகுதி பெற்றுள்ளேன். நேரடி நியமன உறுப்பினராக பணியில் இணைந்த நபர், ஐந்தாண்டுகள் பணிபுரிந்து துறைத் தேர்வுகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பின் துணை வட்டாட்சியர் பட்டியலுக்கு தகுதிபெற முடியும் என்பது விதியாகும். இத்தேர்வில் மாண்பமை உச்ச நீதிமன்றம் தீர்ப்புரை நாள் 22.01.2016 நகடசஞ.2886/2016 உள்ளிட்ட தீர்ப்புரைகளின் படி, கோவை மாவட்டத்தில் திருத்திய துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிட்டது. 

Advertisment

கோவை மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டிற்கான துணை வட்டாட்சியருக்கான மதிப்பீடு செய்யப்பட்ட காலியிடம் மொத்தம் 46. இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2016-ன் படி கொண்டுவரப்பட்ட பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத பின்னடைவு காலிப் பணியிடங்கள் மட்டும் மொத்தம் 23. ஆனால் 2018ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட துணை வட்டாட்சியர் பட்டியலில், பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத பின்னடைவு காலிப்பணியிடங்கள் இருந்தும், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த நான் அனைத்துத் தகுதிகளையும் பெற்று, 2018ஆம் ஆண்டு முதல் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்திருந்தும் என்னை நியமனம் செய்யாமல், சர் ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங் எனத் தெரிவித்து, 2022ஆம் ஆண்டிற்கான துணை வட்டாட்சியருக்கான தேர்ந்தோர் பட்டியலுக்கு கொண்டு சென்று வெளியிடப்பட்ட துணை வட்டாட்சியர் பட்டியல், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நான் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவன் என்பதை நன்கு தெரிந்தே எனக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு மாநில வருவாய் சார்நிலை பணி விதிகள் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணிகள் நிபந்தனைகள் சட்டம் 2016 மற்றும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2019ஆம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் தேர்ந்தோர் பட்டியலில் என்னை வைத்து துணை வட்டாட்சியர் பணி நியமனம் செய்ய வேண்டும்'' என்கின்றார் அவர்.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேட்டால், "உச்ச நீதிமன்ற வழக்கு ஸ்ரீண்ஸ்ண்ப் ஆல்ல்ங்ஹப் சர்ள்.251-256 த்ன்க்ஞ்ங்ம்ங்ய்ற் க்ஹற்ங் 12.03.2019 தேதி தீர்ப்பில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பணி நியமனங்களில் 69% இட ஒதுக்கீடு வழங்க எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. எங்களுக்கு வழங்க வேண்டியது பணி நியமனங்களில் இட ஒதுக்கீடே.. இதனை குழப்ப வேண்டாம். பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினருக்கு பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பவும் தடை விதிக்கப்படவில்லை. ஆனால் மேற்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காரணம் காட்டி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருமளவு குளறுபடி செய்யப்பட்டு, பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினருக்கு அநீதி இழைக் கப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர் பணியிடம் என்பது பணியிட மாறுதலில் பணி நியமனம் (Recruitment by Transfer) என விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும் நியமனங்களில் அரசின் விதி முறைகள் இட ஒதுக்கீடு முறைகளை முறையாகப் பின்பற்றப்படாமல் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது'' என்கின்றார்கள் பாதிக்கப்பட்ட துணை தாசில்தார்கள்.

தமிழக வருவாய்த்துறையில் எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் விதி முறைகளை முறையாகப் பின்பற் றப்படவில்லை என்பதற்கு ஆதார மாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2015இன் படி அதற்கான தகவலையும் பெற்றுள்ளனர் பாதிக் கப்பட்ட துணை தாசில்தார்கள். போராட்டங்கள் பல செய்து இட ஒதுக்கீட்டை, அதிலும் உள் இட ஒதுக்கீட்டையும் சேர்த்து, தமிழ் நாட்டில் அமல்படுத்தியது கலைஞ ரின் ஆட்சி. ஆனால் தற்போது, ஆட்சியாளர்களுக்கே தெரியாமல் சாதிய வன்மம்கொண்ட அதிகாரி கள் இட ஒதுக்கீட்டை காலி செய்துவருவது ஏற்புடையதல்ல!

-ஆதித்யா