திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காக வும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவரு கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களில் பலர், தாமாக முன்வந்து நன்கொடையாக பொருளாக வோ, பணமாகவோ கோவிலுக்கு வழங்குவது வழக்கம். இப்படி வரும் பணமும் பொருளும் இணை ஆணையர் மாரியப்பன் மூலம் பெறப் பட்டு வருகிறது. பெறப்படும் பொருட்கள், பணத்திற்கு உபயதாரர்களுக்கு உரிய ரசீது கொடுத்து கணக்கில் காட்டவேண்டும். ஆனால் உபயதாரர்கள் கொடுத்த எதற்கும் உரிய கணக்கு எழுதாமல் போலியான கணக்கு கள் எழுதப்பட்டு உபயதாரர்களை ஏமாற்றியுள்ளதாக புகார் வருகிறது.

15 ஏ.சி.க்கள் கணக்கில் காட் டப்படவில்லை. ஏலத்திற்கு வைத் திருந்த பழைய இரும்பு பேரி கார்டுகளை பழுதுபார்த்து புதிது போல பெயிண்ட் அடித்து, புதிய பேரிகார்டுகள் வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளார் என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

srirangam

ஏற்கனவே மாரியப்பன் இராமேஸ்வரத்தில் செய்த அத்துமீறல்களால் தான் ஸ்ரீரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இங் கும் இவர் தன் கைவரிசையைக் காட்டிவருவது பலரையும் கவலையடைய வைத்துள்ளது.

Advertisment

ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் முறை கேடுகள் குறித்து பேசிய சில பக்தர்கள், “"கோவி லில் நடைபெறும் மராமத்துப் பணிகளுக்கு உரிய தொகை நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடத்தப்படுவதில்லை. கோவில் ஊழியர்களை வைத்தே வேலைகளைச் செய்துவருகிறார். கோவிலில் பணியாற்றும் காவலர் சுரேஷ், ஓட்டுநர் செந்தில் ஆகியோரை தன் பக்கம் வைத்துக்கொண்டு, கோவிலை ஒட்டுமொத்தமாக கண்ட்ரோல் செய்கிறார்.

கோவில் பணத்தைக் கொள்ளையடிப்பதில் பல்வேறு புதிய யுக்திகளைக் கையாள் கிறார். 8 ஏக்கர் நிலத்தில் புற்கள் வளர்ப்பதற்கு 30,000 ஊதியத்தில் 20 பேரும், 10,000 ஊதியத்தில் 20 பேரும் என மொத்தம் 40 பேர் பணி யாற்றி வருகின்றனர். கடந்த வாரம் திருச்சி மண்டல இணை ஆணையரும் ஸ்ரீரங்கம் கோயில் தக்காருமான கல்யாணி, கொள்ளிடக்கரை தோப்பிற்கு வந்து ஆய்வுசெய்து, சக்திவேல் என்கிற கண்காணிப் பாளரிடம் இரண்டு பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் எதுக்கு இத்தனை பேர் போட்டு வேலைசெய்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேபோல் மின் கட்டணம் மட்டும் இரண்டு மாதத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் செலுத் தப்படுகிறது. மாரியப்பனின் மனைவியின் உற வினரான குருவம்மாள் என்பவருக்கு தூய்மைப் பணியாளர் பணி போட்டுக்கொடுத்துள்ளார். கோவில் பணியாளர் குடியிருப்பில் வசிப்பதற்கு அவர் பணியில் சேர்ந்த மறுநாளே வீடு ஒதுக்கிக் கொடுத்துள்ளார். ஆனால் ஏற்கனவே சீனியா ரிட்டி அடிப்படையில் பலர் பதிவுசெய்து காத் திருக்கும் நிலையில் இவருக்கு மட்டும் எப்படி ஒரே நாளில் வீடு ஒதுக்கப்பட்டது?

Advertisment

குருவம்மாள் கணவர் கணேசன் என்பவருக்கு கோயில் அன்னதான பிரிவில் பத்மாவதி காண்ட்ராக்டில் வேலை போட்டுக் கொடுத்துள்ளார்.

கொடிமரம் கண்காணிப்பாளர் பொறுப்பி லிருக்கும் மீனாட்சி என்பவர் பக்தர்களிடம் மிகுந்த அடாவடியாகப் பேசிவருகிறார். கோவிலுக்கு பல லட்சங்கள் செலவு செய்துள்ள உபயதாரர்களைக்கூட மதிப்பதே இல்லை. "நூறு ரூபாய் டிக்கெட் லைனில் போங்க, இல்லைன்னா வெளியே போங்க' என்று விரட்டுகிறார்.

sr

இணை ஆணையர் மாரியப்பன், யாத்திரி நிவாஸ் கண்காணிப்பாளரான சக்திவேலுடன் இணைந்து, பாதிநேரம் கொள்ளிடக்கரையில் உள்ள தோப்பில் பெண்கள் வேலை செய் யும் இடத்திலேயே மேற்பார்வை என்ற பெயரில் அவர்களை வெயில் இருக்கும் பகுதிகளில் மட்டும் வேலை செய்ய விரட்டு கிறார்''’என புகார்களை அடுக்குகிறார்கள்.

மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் என கோவிலை ஆட்டிப் படைக்கும் மாரியப்பன் மீது உபயதாரர்களில் ஒருவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகாரனுப்பி உள்ளார். அதன்பேரில் கோவில் முக்கியஸ்தர்கள் ஒருசிலரிடம் திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல்துறை அலுவலகத்துக்கு வரச்சொல்லி விசாரணை நடத்தியுள்ளார்கள்.

இந்த விசாரணைக்குப் பிறகு கோயில் மேலாளர் தமிழ்ச்செல்வியும், கொள்முதல் பிரிவு பார்க்கும் ஸ்ரீதேவி என்பவரும் அவசர அவசரமாக சில உபயதாரர்களுக்கு ரசீதுகளை ஒரே நாளில் எழுதி லஞ்ச ஒழிப்பு அலுவலகத் தில் கொடுத்துள்ளனர். அந்த ரசீதுகளில் தேதி மாறுபட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் எழுதப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து இணை ஆணையர் மாரியப்பனை தொடர்பு கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் கோவி லில் விசாரணை நடத்தினார்களா என்று கேட்டபோது, கேள்விக்குப் பதிலளிக்காமல், அடுத்த கேள்வி என்ன என்று கேட்டார். 8 ஏக்கரில் புற்கள் வளர்ப்பதற்கு இத்தனை பேர் பணிக்கு வைத்து செலவுக்கணக்கு காட்டுகிறீர் களா? என்று கேள்வி எழுப்பியதற்கு, “வேண்டு மென்றால் நீங்களே நேரில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.

இணை ஆணையரின் மோசடி குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.