ண்ணாமலைக்கு எதிராக வாரண்ட்டை ரெடி செய்துகொண்டிருக்கிறார் பொருளாதார குற்றப்பிரிவு தலைவரான அபின்தினேஷ் மோடக் ஐ.பி.எஸ்.

என்ன இது... ஐ.பி.எஸ்.ஸுக்கு எதிராக ஐ.பி.எஸ்.ஸா? என்றால், சீன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியில் விரிகிறது.

சென்னையில் பிரபலமான கட்டப்பஞ்சாயத்து மன்னன் களஞ்சியம். 91-96 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காதை அறுப்பேன், மூக்கை அறுப்பேன் என மதுசூதனன், சசிகலா ஆதரவில் களஞ்சியம் சவுண்ட் விடுவதெல்லாம் வாடிக்கையான வாரப்பத்திரிகை செய்திகள். இந்தக் களஞ்சியத்தின் மகன்தான் நடிகர் ஆர்.கே.சுரேஷ். "ஸ்டுடியோ 9' என்ற பெயரில் சில வெற்றிப்படங்களைக் கொடுத்தவுடன்... இவர்களுக்கு அரசியலில் ஏதாவது செய்யவேண்டுமென எண்ணம் வந்தது. அதற்கு பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை வந்ததும் வாய்ப்பு வந்தது. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு அண்ணாமலை வந்ததும், அதற்கு முன்பு அங்கு வந்து நின்றுகொண்டிருந்த எச்.ராஜாவை கீழே தள்ளிவிட்டார் ஆர்.கே.சுரேஷ். தேவர் சமாதியில் போடப்பட்டி ருந்த மாலையை எடுத்து, தான் அணிந்துகொண்டு, இன்னொரு மாலையை அண்ணாமலைக்கு அணிவித்து "வருங்கால முதலமைச்சர் அண்ணாமலை வாழ்க!' என கூவினார் ஆர்.கே.சுரேஷ்.

Advertisment

ss

இந்த ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா பைனான்ஸின் 2450 கோடி ரூபாய் நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க.வின் நிர்வாகியான வெங்கடாசலம் என்பவரைக் காப்பாற்ற 20 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என வெங்கடாச்சலம் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். ஐ.ஜி. ஆசியம்மாள், கூடுதல் டி.ஜி.பி. அபின்தினேஷ் மோடக் பதிவு செய்த இந்த வாக்குமூலத்தில், "நான் பா.ஜ.க.வில் இருக்கிறேன். எனக்கு இந்த ஆருத்ரா நிதி நிறுவன ஊழலுக்கு அமர்பிரசாத் ரெட்டி, அண்ணாமலை ஆகியோர் உதவியாக இருந்தார்கள். நிதி நிறுவனத்தில் பணம் போட்ட மக்களை நாங்கள் ஏமாற்றினோம். எங்கள் நிறுவனத்தின் டைரக்டரான ஹரிஷ் என்பவரை பாரதப் பிரதமரின் வரவேற்பு கமிட்டியில் இடம்பெறச் செய்து அமர்பிரசாத் ரெட்டி காப்பாற்றினார். அதுபோல நான் கைது செய்யப் பட்டபோது என்னுடன் அண்ணாமலை, அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் பேசினார்கள். அவர்கள் சொன்னதன் அடிப்படையில் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் நான் கொள்ளையடித்த பணம் 20 கோடி ரூபாயை ஆர்.கே. சுரேஷுக்கு கொடுத்தேன். அந்தப் பணம் சினிமா படம் தயாரிக்கக் கொடுக்கப்பட்ட பணம் என்ற கணக்கில் வரும் என அண்ணாமலையும் அமர்பிரசாத் ரெட்டியும் சொன்னார்கள்.

அதில் இரண்டு கோடியைப் பிரித்து தமிழக அரசின் காண்ட்ராக்டர்களில் ஒருவரும், தமிழக போலீஸ் அதிகாரி களுக்கு நெருக்கமானவருமான ஜோஸ்வா விடம் கொடுத்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்' என போகிறது வாக்குமூலம்.

"இதில் அண்ணாமலை மட்டுமல்ல... ஆர்.கே.சுரேஷுக்கும் ஆதரவான போலீசாரும் கட்டாயம் சிக்குவார்கள்' என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

Advertisment