மறைந்த முதல்வர் ஜெ.வின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் ஊர்வலத்தில் கறுப்புச் சட்டை அணிந்து சோகமே முகமாக எடப் பாடியும் பன்னீரும் துக்கம் கலந்து நடந்து வந்தார்கள். ஓ.பி.எஸ். உறுதி மொழி படிக்க அதை இ.பி.எஸ். உட் பட அனைவரும் திருப்பிச் சொன் னார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என ஓ.பி.எஸ். படித்தார். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள் ளது. இருவருக்கும் இடையேயான மோதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெடித்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. ர.ர.க்கள்.
மோதல் 1 :
தமிழகத்தில் ஆற்றுமணல் கொள்ளை என்பது சீரியசான ஒன்று. வருடம் பல லட்சம் கோடி புரளும் இந்த தொழிலில் யார் முதல்வராக இருக்கிறார் களோ அவர்களது கைவண்ணத்தில்தான் இந்த கொள்ளை அரங்கேறும். எடப்பாடி முதல்வராக மட்டுமில்லாமல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருப்பதால் ஆற்று மணலில் வரும் லட்சக்கணக் கான கோடிகளுக்கு அவர்தான் பொறுப்பாளர். ஒரு வகையில் இந்த ஆட்சியை பாதுகாப்பதும் இந்த மணல் வருமானம்தான். சமீபத்தில் மழை வருவதற்கு முன்பு ஆற்றுப் படுகைகளை சீரமைக்க டெண்டர் விடப் பட்டது. ஆற்றில் உள் அமைப்புகளிலிருந்து மணலை வாரி கரையை பலப்படுத்துவதுதான் இந்த வேலை. இந்த வேலையை தி.மு.க.விற்கு கொடுக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். தி.மு.க.வோடு கள்ளஉறவு வைத்திருக்கிறார்கள் என பொதுக்குழுவி லேயே குற்றச்சாட்டை கே.பி.முனுசாமி வாசித்தார்.
இந்த காண்ட்ராக்ட்டை எடப்பாடியின் சம்பந்திக்கு நெருக்கமான பி.எஸ்.கே. கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் பன்னீரின் மகன் ரவீந்திரநாத்துக்கு நெருக்கமான கம்பெனி ஆகியவை எடுத்தன. மையமாக இவர்கள் பெயரில் ஒப்பந்தம் இருந்தாலும் பணிகளை மந்திரிகள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலர் பிரித்துக் கொண்டார்கள். இதில் எடப் பாடியின் உறவினருக்கு லாபம். அவருக்கு சேர வேண்டியதை மந்திரிகள், மா.செ.க்கள், எம்.எல். ஏ.க்கள் பிரித்துக் கொடுத்துவிட்டு அவர்களுக்கு தேவையான லாபத்தை பார்த்தார்கள். அதில் ஓ.பி. எஸ். மகனுக்கு, எடப்பாடி மந்திரிகள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் இணைந்து சுமார் 1450 கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டார் கள். ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமானவர்கள் கொதி நிலையில் இருக்கிறார்கள். ஒரு காலத்தில், மணல் மாஃபியா சேகர் ரெட்டி மூலம் மொத்த கண்ட் ரோலையும் தன் வசம் வைத்திருந்தார் ஓ.பி.எஸ்.
மோதல் 2 :
இதுவும் மணல்தான். ஆனால் இது ஆற்று மணல் அல்ல. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல். சென்னை, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் மணல் இறக்குமதி செய்யப் பட்டது. சென்னையில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை இ.பி.எஸ். மகன் அவருக்கு நெருக்கமான திரிவேணி எர்த் மூவர்ஸ் மூலம் எடப்பாடியின் பி.ஏ. சேகர் மற்றும் அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ். மூலம் விழுப்புரம் வரை வினியோகம் செய்தார். ஆனால் ஓ.பி.எஸ். மகன் மற்றும் சேகர் ரெட்டி மூலம் தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை ஓ.பி.எஸ். டீமால் விநியோகிக்க முடியவில்லை. விலை நிர்ணயம் தர நிர்ணயம் என கோர்ட் வழக்காக மாறி ஓ.பி.எஸ். டீம் நஷ்டமடைந்தது.
மோதல் 3 :
உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக ஓ.பி.எஸ்.சின் உறவு ஒருவர் ஆசைப்பட்டார். "கட்சி சின்னம் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளில் நாம் வெற்றி பெற்று பலத்தை காட்ட வேண்டும்' என ஓ.பி.எஸ். திட்ட மிட்டார். தேனியில் ஓ.பி.எஸ். உறவினர் தலைவராக தீட்டிய திட்டத்திற்கு இ.பி.எஸ். ஒத்துக் கொள்ள வில்லை. அதற்காக ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான மதுசூதனனை விட்டு "பொதுக்குழுவில் குடும்ப அரசியல் கூடாது' என்றார். "உள்ளாட்சித் தேர்த லில் நமக்குள்ளே போட்டி போட்டு தி.மு.க.வை வளர விடக்கூடாது. 2021-ல் எடப்பாடியின் காலில் வெற்றியை சமர்ப்பிப்போம்' என தங்கமணியை விட்டுப் பேச வைத்தார் இ.பி.எஸ்.
மோதல் 4 :
ஓ.பி.எஸ்.சை விட சீனியர் என நினைக்கும் எடப்பாடியை "அண்ணே' என்றுதான் ஓ.பி.எஸ். அழைக்கிறார். ஆனால் அவரது மகனை மத்திய மந்திரியாக்க வேண்டும் என குருமூர்த்தி போன்ற வர்கள் அவமானப்படுத்துவதைக் கூட தாங்கிக் கொள்கிறார். கட்சி வேலையே பார்க்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தபோது கூட வீட்டு திருமண வேலைகளில் பிசியாக உள்ள வைத்திலிங்கத்தை அமைச்சராக்க முயல்கிறார் எடப்பாடி. அதனால் அவரது மகனை அமைச்ச ராக்க அ.தி.மு.க.வை உடைத்து ரஜினி, பா.ம.க., பா.ஜ.க. என ஒரு அணியை துவக்கினால் என்ன வென ஒரு யோசனை பன்னீருக்கு இருக்கிறது. கோட்டையில் உள்ள அதிகாரம் முதல் குவாரி -மணல் என அனைத்திலும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். பவர் ஃபைட் நீடிக்கிறது. 2021 தேர்தல் நெருக்கத்தில் அது வெடிக்கும் என்கிறார்கள் பன்னீருக்கு நெருக்கமானவர்கள்.
-தாமோதரன் பிரகாஷ், மகேஷ்
_____________
இறுதிச்சுற்று
பிரசாந்த் கிஷோரை வறுத்த உத்தவ்!
பிரபல தேர்தல் வியூக வல்லுனரான பிரசாந்த் கிஷோர், நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநிலத் தேர்தலில் சிவசேனாவுக்காக களமிறக்கப் பட்டிருந்தார். பா.ஜ.க. கூட்டணியில் 124 இடங்களில் போட்டியிட்ட சிவசேனாவை அவர் 115 இடங்களில் ஜெயிக்க வைப்பதாக உத்தரவாதம் தந்திருந்தாராம். ஆனால், சிவசேனாவுக்கு வெறும் 56 இடங்களே கிடைத்தன. இதனால், அப்செட்டான சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே, பிரசாந்த் கிஷோரைத் தொடர்புகொண்டு கடுமையாக வறுத்து எடுத்துவிட்டாராம். இந்த நிலையில், தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரசாந்த் கிஷோரை அழைக்க வேண்டாம் எனவும் சொல்லிவிட்டாராம் உத்தவ் தாக்கரே. பிரசாந்த்தும் உத்தவ் தாக்கரேவுக்கு தன் வாழ்த்துகளைச் சொல்லாமல், சோனியாவுக்கும் காங்கிரசுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லியிருக்கிறார். வடமாநிலங்களில் செல்வாக்கு சரிந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் மீது தனது பார்வையை பிரசாந்த் கிஷோர் திருப்ப, அவருக்கு பூச்செண்டு கொடுத்திருக்கிறது தி.மு.க.
-இளையர்