Advertisment

மாஜி எம்.எல்.ஏ. வீட்டில் அதிரடி ரெய்டு! கோடிகளைக் குவித்தது எப்படி?

raid

நாமக்கல்லில், முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் வீட்டில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் நடத்திய திடீர் ரெய்டினால், மீண்டும் இலைக்கட்சியின் முக்கிய புள்ளி கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள்.

Advertisment

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், குறிப் பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலகட்டத்தில், அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளதாக பரபரப்பு புகார் கள் கிளம்பின. இதையடுத்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, கரூர் விஜயபாஸ்கர், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். உச்சகட்டமாக, எடப்பாடி பழனிசாமியின் நிழலான 'கூட்டுறவு' இளங்கோவன் வீட்டிலும் விஜிலன்ஸ் நடவடிக்கை பாய்ந்தது.

rr

இந்நிலையில்தான், நாமக்கல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தங்கமணி, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக கருதப்படுபவரு மான கே.பி.பி.பாஸ்கர் வீட்டில், ஆக. 12ஆம் தேதி, விஜிலன்ஸ் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

நாமக்கல் அசோக் நகரில் பாஸ்கர் குடும்பத் துடன் வசித்துவரும், சுமார் 12 கோடி ரூபாயில் நட்சத்திர ஹோட்டல்போல கட்டப்பட்டுள்ள பங்களா வீட்டிலும், அதற்குப் பக்கத்திலுள்ள கெஸ்ட் ஹவுசிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை நடந்தது.

பாஸ்கரின் வலதுகரமான மயில் சுந்தரம், நாமக்கல் கிழக்கு ஒ.செ. சேகர், நல்லிபாளையம் விஜயகுமார், காண்ட்ராக்டர் சுரேஷ், கேபிள் டிவி யோக

நாமக்கல்லில், முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் வீட்டில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் நடத்திய திடீர் ரெய்டினால், மீண்டும் இலைக்கட்சியின் முக்கிய புள்ளி கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள்.

Advertisment

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், குறிப் பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலகட்டத்தில், அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளதாக பரபரப்பு புகார் கள் கிளம்பின. இதையடுத்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, கரூர் விஜயபாஸ்கர், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். உச்சகட்டமாக, எடப்பாடி பழனிசாமியின் நிழலான 'கூட்டுறவு' இளங்கோவன் வீட்டிலும் விஜிலன்ஸ் நடவடிக்கை பாய்ந்தது.

rr

இந்நிலையில்தான், நாமக்கல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தங்கமணி, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக கருதப்படுபவரு மான கே.பி.பி.பாஸ்கர் வீட்டில், ஆக. 12ஆம் தேதி, விஜிலன்ஸ் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

நாமக்கல் அசோக் நகரில் பாஸ்கர் குடும்பத் துடன் வசித்துவரும், சுமார் 12 கோடி ரூபாயில் நட்சத்திர ஹோட்டல்போல கட்டப்பட்டுள்ள பங்களா வீட்டிலும், அதற்குப் பக்கத்திலுள்ள கெஸ்ட் ஹவுசிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை நடந்தது.

பாஸ்கரின் வலதுகரமான மயில் சுந்தரம், நாமக்கல் கிழக்கு ஒ.செ. சேகர், நல்லிபாளையம் விஜயகுமார், காண்ட்ராக்டர் சுரேஷ், கேபிள் டிவி யோகேஷ் உள்ளிட்ட நண்பர்கள், பினாமிகள் வீடுகள், கருங்கல்பாளையம், ராமாவரம் புதூரி லுள்ள பாஸ்கரின் தொழில் நிறுவனங்கள், அவருடைய அக்கா வீடு, நாமகிரிப்பேட்டையிலுள்ள மைத்துனர் சோமசுந்தரம் வீடு என நாமக்கல்லில் மட்டும் அவருக்குத் தொடர்புடைய 28 இடங்கள், திருப்பூர், மதுரையில் தலா ஒரு இடம் என மொத்தம் 30 இடங்களில், ஒரே நேரத்தில் போலீஸ் சோதனை நடந்தது.

நாமக்கல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. ராமச்சந்திரன், ஆய்வாளர் நல்லம்மாள் ஆகியோர் தலைமையில் போலீசார் இரண்டு குழுவாகப் பிரிந்துசென்று சோதனையில் ஈடுபட்டனர்.

கே.பி.பி.பாஸ்கர், கடந்த 2011-2016 மற்றும் 2016-2021 காலகட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை நாமக்கல் எம்.எல்.ஏ., ஆக இருந்துள்ளார். மூன்றாவது முறையாக 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அவர் எம்.எல்.ஏ. ஆக இருந்த காலத்தில், சட்டப்படியான வருமானத்தைவிட, கூடுதலாக 4.72 கோடி ரூபாய் சொத்துகளைச் சேர்த்துள்ள தாக, அதாவது 315 சதவீதம் மிகையாக சொத்து களைக் குவித்துள்ளதாக நாமக்கல் விஜிலன்ஸ் போலீசார் ஆக.-11-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடைய மனைவி உமா மீதும் வழக்குப்பதிவு செய்யப் பட்டு உள்ளது. இந்த வழக்கின் பேரில்தான், போலீசார் சோத னையை நடத்தியுள்ளனர்.

கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட சோதனையின் முடிவில், பாஸ்கர் மற்றும் அவருடைய பினாமிகளின் வீடுகள், அலுவலகங் களில் இருந்து 14.97 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.20 லட்சம் ரூபாய்க்கான வெளிநாட்டு கரன்சிகள், 4 சொகுசு கார்கள், பல கோடி ரூபாய் முதலீட்டுக் கான ஆவணங்கள், கடன் பத்திரங்கள், 1.68 கிலோ தங்கம், 6.62 கிலோ வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் ரூபாய்க்கான கிரிப்டோ கரன்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்பட 214 ஆவணங்களை வழக்கு விசாரணைக்காக போலீசார் அள்ளிச்சென்றுள்ளனர்.

Advertisment

rr

ரெய்டு குறித்த தகவலறிந்ததுமே, மாஜி அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, கரூர் விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ. சேகர் மற்றும் பாஸ்கரின் ஆதரவாளர்கள் அவருடைய வீடு முன்பு திரண்ட னர். வழக்கமாக ரெய்டின்போது தி.மு.க. அரசுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் முழக்கமிடுவார்கள். ஏனோ இந்தமுறை ர.ர.க்கள் அடக்கிவாசித்தனர்.

சோதனை முடிந்த பிறகு, மாஜி அமைச்சர் தங்கமணி, “"பாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தி.மு.க.வில் சிலரின் தூண்டுதலால் இந்த சோதனை நடந்துள்ளது. இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை'' என்றார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போதே, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடம் தி.மு.க. தரப்பு அளித்த ஊழல் புகார் பட்டியலில் அமைச்சர்கள் பெயர்களுக்கிடையே இடம்பெற்றிருந்த ஒரே எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் தான் என்கிறார்கள் ர.ர.க்கள். அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.

"கே.பி.பி.பாஸ்கரின் தந்தை பரமசிவம், நாமக்கல் நகர்மன்றத் தலைவராக இருந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, கட்சிக்குள் தலை யெடுக்க ஆரம்பித்தார் பாஸ்கர். நகராட்சி கவுன்சிலர், நகர்மன்றத் தலைவர் என படிப்படியாக உயர்ந்து கட்சியின் நகரச் செயலாளர் ஆனார்.

கடந்த 2011-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கட்சியில் சீனியரான காந்தி முருகேசனுக்குதான் சீட் கிடைப்பதாக இருந்தது. ஆனால், தங்கமணி மற்றும் அ.தி.மு.க.வின் நிழல் அதிகார மைய மாகச் செயல்பட்டுவந்த ராவணன் மூலம் எப்படியோ ரூட்டைப் பிடித்து சீட் பெற்று விட்டார் பாஸ்கர்.

ஏற்கனவே சில லாரிகளை வைத்திருந்தார். தொழிலில் ஏற்பட்ட கடும் நட்டத்தால், 2011 தேர்தலின்போது பாஸ்கர் கையில் எட்டணாகூட இல்லை. அந்த நேரத்தில், நண்பர்கள், உறவினர்கள் பணம்கொடுத்து உதவியதாலும், கட்சியின் சப் போர்ட்டாலும் முதன்முதலாக எம்.எல்.ஏ. ஆனார்.

"அம்மா' முதல்வராக இருந்தவரை அவரும் அடக்கிவாசித்தார். ஆனால், அவர் மறைந்தபிறகு, பாஸ்கர் போடாத ஆட்டமில்லை. எடப்பாடி முதல்வராக இருந்த நான்கு ஆண்டுகளில் பாஸ்கர், பல இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்தார். நாமக்கல் நகராட்சியில் எல்லா ஒப்பந்தப் பணிகளையும் அவரே பினாமிகள் மூலம் எடுத்துச் செய்தார். 150 கோடியில் மருத்துவக்கல்லூரி கட்டியதிலும்கூட 2 சதவீதம் கமிஷன் பெற்றார். அப்போது அமைச்சராக இருந்த தங்க மணியை மீறி, எடப்பாடியுடன் நேரடியாக தொடர்பு வைத்துக் கொண்டார். இதனால் பாஸ்கருக் கும், தங்கமணிக்கும் உள்ளுக்குள் புகைச்சல் இருந்தாலும் இருவரும் வெளியே காட்டிக்கொள்வ தில்லை.

இன்றைய நிலையில், பாஸ்கர் மற்றும் அவருடைய பினாமிகளின் பெயரில் 80 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஓடுகின்றன. டேங்கர் லாரிகள், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்துவரும் பாஸ்கர், கடந்த நான்கைந்து ஆண்டுகளில் 150 கோடி ரூபாய்க்குமேல் சொத்துகளைக் குவித்துள்ளார்'' என்கிறார்கள்.

மற்றொரு அ.தி.மு.க. பிரமுகரோ, "இந்த ரெய்டை, சில மாதங்களுக்கு முன்பே நடந்தி யிருந்தால், பெரும் தொகையைக் கைப்பற்றியிருக்கலாம். கடந்த சில மாதங்களில் நிலங்களை பெரிய தொகைக்கு விற்பனை செய்துள் ளார்.

பரமத்திவேலூர் டோல் கேட் அருகே 5.75 ஏக்கர் நிலத்தை 12 கோடி ரூபாய்க்கும், புதுச்சத்திரம் அருகில் ஏழூரில் ஏக்கர் 22.50 லட்சம் வீதம் 33 ஏக்கர் நிலத்தை 7.40 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்திருந் தார் பாஸ்கர். அதேபோல, நாமக்கல் டவுனில் 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை 7 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். இந்த மூன்று சொத்துகளும் பினாமிகள் பெயர்களில் இருந்தவை. இவற்றை அவசர அவசரமாக விற்றது பாஸ்கர்தான். அவரிடம் தீவிரமாக விசாரித்தால் இந்த சொத்துகளின் மூலம் கிடைத்த 26 கோடி ரூபாயை எங்கே பதுக்கி னார் என்பதும் தெரியவரும்'' என்றார்.

எடப்பாடி மற்றும் தங்கமணியுடன் நெருக்கமாக இருந்துவருவதால், அவர்கள் இருவரின் சொத்துக்களுக்கும் கே.பி.பி.பாஸ்கர் பினாமியாக இருக்கலாம் என்றும், அவ்விரு முக்கிய தலைகளுக்கும் செக் வைக்கவும் பாஸ்கர் குறி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பு சொல்கிறது.

எனினும், சோதனை என்ற அளவில் நின்றுவிடாமல், ஊழல் பேர்வழிகளின் மீது நீதிமன்றத் தில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என் றும் குரல்கள் ஒலிக்கின்றன.

nkn170822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe